நியூயோர்க்கின் இரவு மேயர்

அமெ­ரிக்­காவின் நியூயோர்க் நக­ரா­னது தனது முத­லா­வது “இரவு மேயர்” யார் என்­பதை அறி­வ­தற்குக் காத்­தி­ருக்­கி­றது.

நியூயோர்க் நகரின் இரவு நேர தூதுவர் எனும் பதவி ஸ்தாபிக்­கப்­ப­டு­வது குறித்து நகர மேயர் பில் டி பிளா­சியோ கடந்த வருடம் அறி­வித்தார். இரவு மேயர் எனவும் இப்­ப­தவி வர்­ணிக்­கப்­ப­டு­கி­றது.

அந்­ந­கரில் இரவு நேரத்தில் இயங்கும் நிறு­வ­னங்கள் தொடர்பு கொள்­வ­தற்­காக இப்­ப­தவி ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ளது.

இப்­ப­த­வியை ஸ்தாபிப்­ப­தற்கு அனு­ச­ரணை வழங்­கிய ஜன­நா­யகக் கட்சி அங்­கத்­தவர் ரபாயெல் ஸ்பினல் இது தொடர்­பாக கூறு­கையில், இப்­ப­த­விக்கு எவரும் நிய­மிக்­கப்­ப­டு­வ­தாக இது­வரை தான் அறி­ய­வில்லை எனக் கூறி­யுள்ளார்.

இந்த அலு­வ­ல­கத்­துக்­கான 12 பேர் கொண்ட ஆலோசனைக் குழு கடந்த வருடம் ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(Visited 69 times, 1 visits today)

Post Author: metro