சவா­லான பாத்­தி­ரங்­க­ளில் நடிக்க தய­ங்­க­மாட்­­டேன் – நித்­தி­யா மேனன்

தமிழில் ‘வெப்பம்’, ‘மாலினி 22’ ‘பாளை­யங்­கோட்டை’, ‘180’, ‘ஓ காதல் கண்­மணி’, ‘இரு­முகன்’, மெர்சல் உள்­ளிட்ட படங்­களில் நடித்­துள்­ளவர் நித்­யா­மேனன், தெலுங்கு, மலை­யாள திரை­யு­ல­கிலும் முன்­னணி கதா­நா­ய­கி­யாக இருக்­கிறார். தற்­போது தெலுங்கில் தயா­ரான ‘ஆ’ படத்தில் ஓரினச் சேர்க்கை கதா­பாத்­தி­ரத்­திலும் துணிச்­ச­லாக நடித்து இருக்­கிறார்.

இயக்­கு­நர்கள் கதை சொல்­லும்­போது அதில் தலை­யிட்டு திரைக்­க­தையை மாற்­று­வ­தாக நித்­யா­மேனன் மீது புகார்கள் வரு­கின்­றன. இது­கு­றித்து கேட்­ட­போது அவர் கூறி­ய­தா­வது:- “நான் கதை­களில் தலை­யி­டு­வது உண்­மைதான். என்­னிடம் 200 பேர் கதை சொன்னால் 4, 5 கதை­க­ளைத்தான் தெரிவு செய்து நடிக்­கிறேன்.

கதையும், கதா­பாத்­தி­ரமும் புதி­தாக இருக்க வேண்டும். வழக்­க­மான படங்­களில் நடிப்­பது இல்லை. கதை பிடித்து நடிக்க ஒப்­புக்­கொண்ட பிறகு அவற்றில் கண்­டிப்­பாக தலை­யிட்டு மாற்­றங்கள் செய்ய சொல்­கிறேன்.

எனக்கு தெரிந்த விஷ­யங்­களை தெரி­விப்பேன். அதுபோல் வச­னத்­திலும் தலை­யி­டுவேன். நிறைய வச­னங்கள் நான் சொல்­லிக்­கொ­டுத்­த­தா­கத்தான் இருக்கும். அப்­படி தலை­யி­டு­வது தவறு அல்ல என்­பது எனது கருத்து. எதிர்­கா­லத்தில் நான் டைரக்­ட­ராக மாறு­வ­தற்கு வாய்ப்பு இருக்­கி­றது.

தயா­ரிப்­பாளர் ஆக மாட்டேன். காரணம் புது­மை­யாக, வித்­தி­யா­ச­மாக என்னால் யோசிக்க முடியும். ஆனால், வரவு – செலவு கணக்­குகள் பார்க்க தெரி­யாது. நித்யா மேனன் குறிப்­பிட்ட கதா­பாத்­தி­ரங்­க­ளில்தான் நடிப்பார் என்ற முத்­திரை என்­மீது விழு­வது எனக்குப் பிடிக்­காது. அத­னால்தான் வித்­தி­யா­ச­மான கதை­களை தெரிவு செய்து நடிக்­கிறேன்.

என்னைத் தேடி­வரும் டைரக்­டர்கள் கூட நல்ல கதை­க­ளைத்தான் கொண்டு வரு­கி­றார்கள். மெர்சல் போன்ற சில படங்­களில் வய­துக்கு மிஞ்­சிய கதா­பாத்­தி­ரங்­களில் நான் நடித்­தி­ருப்­ப­தாக விமர்­ச­னங்கள் வரு­கின்­றன. கதை பிடித்திருந்தால் சவாலான கதாபாத்திரங்களில் கூட நடிக்கத் தயங்க மாட்டேன். லெஸ்பியன் படத்தில் நடித்ததற்காகவும் வருத்தப்படவில்லை. இவ்வாறு நித்யா மேனன் கூறினார்.

(Visited 101 times, 1 visits today)

Post Author: metro