பிரிட்­டனில் KFC யின் நூற்­றுக்­க­ணக்­கான கிளைகள் மூடப்­பட்­டன ; கோழி­யி­றைச்சி தட்­டுப்­பாடு காரணம் என அறி­விப்பு

பிரிட்­டனில் உலகப் பிர­சித்தி பெற்ற உண­வு­வி­டுதி சங்­கிலித் தொட­ரான KFC (கே.எவ்.சி) நிறு­வ­னத்தின் நூற்­றுக்­க­ணக்­கான கிளைகள் மூடப்­பட்­டுள்­ளன.

உண­வு­களைத் தயா­ரிப்­ப­தற்கு போதி­ய­ளவு கோழி இறைச்சி கிடைக்­கா­மையே இதற்குக் காரணம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதனால், குறு­கிய காலத்­துக்­கு பல நக­ரங்­களில் KFC கிளைகள் அடுத்­த­டுத்து மூடப்­பட்­டன. பிரிட்­ட­னி­லி­ருந்த 900 கிளை­களில்  சுமார் 700  கிளைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெ­ரிக்­காவின் கென்­டக்கி மாநி­லத்தில் 1930 ஆம் ஆண்டு கேணல் ஹர்ட்லண்ட் சாண்­டர்­ஸினால் Kentucky Fried Chicken (KFC) நிறு­வனம் ஸ்தாபிக்­கப்­பட்­டது. கோழி­யி­றைச்சிப் பொரியல் உண­வு­க­ளுக்குப் பிர­சித்தி பெற்ற இந்­நி­று­வனம் தற்­போது 120 க்கும் அதி­க­மான நாடு­களில் சுமார் 20,000 கிளை­க­ளுடன் தமது வாடிக்­கை­யா­ளர்­களை மகிழ்­வித்து வரு­கி­றது.

ஆனால், பிரிட்­டனில் திடீ­ரென அடுத்­த­டுத்து பல நக­ரங்­களில் KFC கிளைகள் மூடப்­பட்­டன. இதற்கு என்ன காரணம் என பலரும் யோசித்துக் கொண்­டி­ருந்த போது உண­வ­கங்­க­ளுக்கு கோழி இறைச்சி விநி­யோ­கிப்­பதில் ஏற்­பட்ட பிரச்­சி­னையே இதற்குக் காரணம் என KFC நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

கோழி இறைச்­சியை விநி­யோ­கிப்­ப­தற்கு அண்­மையில் புதிய நிறு­வ­ன­மொன்­றிடம் KFC ஒப்­பந்தம் செய்­தி­ருந்த நிலையில் இச்­சிக்கல் ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இது தொடர்­பாக KFC நிறு­வ­னத்தின் பிரித்­தா­னிய மற்றும் அயர்­லாந்துப் பிரிவு விடுத்த அறிக்­கை­யொன்றில், “இந்­நாட்டில் (பிரிட்டன்) உள்ள எமது 900 உண­வு­வி­டு­தி­க­ளுக்கு புதிய கோழி­யி­றைச்­சியை பெற்­றுக்­கொள்­வதில் சிக்­க­லாக உள்­ளது. நாம் எமது தரத்தில் சமரசம் செய்துகொள்ளத் தயாரில்லை. இவ்விநியோகமின்மையால் எமது உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. சில உணவகங்கள் மட்டுப்படுத்தப்பட்ட உணவுப் பட்டியல்களுடன் (மெனு) இயங்குகின்றன” எனத் தெரிவித்துள்ளது.

(Visited 31 times, 1 visits today)

Post Author: metro