ஸ்ரீதேவி வரைந்த சோனம் கபூர், மைக்கல் ஜக்­சனின் ஓவி­யங்கள் துபாயில் ஏல விற்­ப­னைக்கு வரு­கின்­றன

நடிகை ஸ்ரீதேவி வரைந்த, நடிகை சோனம் கபூர் மற்றும் பிர­பல பொப்­பிசைப் பாடகர் மைக்கல் ஜக்சன் ஆகி­யோரின் ஓவி­யங்கள் துபாயில் ஏலத்தில் விற்­பனை செய்­யப்­ப­ட­வுள்­ளன. இந்த ஏல விற்­ப­னைக்கு ஸ்ரீதேவி ஏற்­கெ­னவே சம்­மதம் தெரி­வித்­தி­ருந்­தாராம்.

தனது நடிப்­பாற்­ற­லாலும் அழ­காலும் கோடிக்­க­ணக்­கா­னோரை வசீ­க­ரித்த ஸ்ரீதேவி, ஓவியம் வரை­வ­திலும் மிகுந்த ஈடு­பா­டு­கொண்­டி­ருந்தார்.

பல பிர­பலங்­க­ளையும் அவர் ஓவி­ய­மாக வரைந்­துள்ளார்.

 

இந்­நி­லையில், ஸ்ரீதேவி வரைந்த பொலிவூட் நடிகை சோனம் கபூர், பாடகர் மைக்கல் ஜக்சன் ஆகி­யோரின் ஓவி­யங்கள் ஏலத்தில் விற்­பனை செய்­யப்­ப­ட­வுள்­ளன.

ஸ்ரீதே­வியின் கணவர் போனி கபூரின் இளைய சகோ­த­ர­ரான நடிகர் அனில் கபூரின் மகள்தான் நடிகை சோனம் கபூர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

காருண்ய நிதி­யொன்­றுக்­காக, துபாயில் அடுத்த மாதம் இந்த ஏல விற்­பனை நடை­பெறும் என செய்தி வெளி­யா­கி­யுள்­ளது.

பல வரு­டங்­க­ளாக ஸ்ரீதேவி ஓவி­யங்­களை வரைந்து வந்தார்.

2010 ஆம் ஆண்டு சர்­வ­தேச நிறு­வ­ன­மொன்று, ஸ்ரீதே­வியின் ஓவி­யங்­களை ஏலத்தில் விற்­பனை செய்­வ­தற்கு முன்­வந்­தது. ஆனால், அதற்கு அவர் சம்மதிக்கவில்லை.

எனினும், காருண்ய சேவைக்கு நிதி திரட்ட உதவுவதற்காக துபாயில் நடத்தத் திட்டமிடப்பட்ட ஏலவிற்பனைக்கு ஸ்ரீதேவி இணங்கியிருந்தார்.

மத்திய கிழக்கில் நடிகை சோனம் கபூருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்” என ஸ்ரீதேவிக்கு நெருக்கமான வட்டாரமொன்று தெரிவித்துள்ளது.

(Visited 96 times, 1 visits today)

Post Author: metro