பொலி­வூட்டின் ஒரே­யொரு லேடி சுப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி – இசையமைப்பாளர் பப்பி லஹிரி

இந்­தி­யாவின் புகழ்­பெற்ற நடி­கை­யாக விளங்­கிய ஸ்ரீதேவி (54) கடந்த சனிக்­கி­ழமை துபாயில் நீச்சல் தொட்­டியில் மூழ்கி மர­ண­ம­டைந்­தமை அவரின் ரசி­கர்­களை பெரும் சோகத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது.

1963 ஆகஸ்ட் 13 தமி­ழ­கத்தின் சிவ­கா­சியில் பிறந்த ஸ்ரீதேவி, தமிழ், மலை­யாளம், தெலுங்கு திரைப்­ப­டங்­களில் மாத்­தி­ர­மல்­லாமல் ஹிந்தித் திரைப்­ப­டங்­க­ளிலும் குழந்தை நட்­சத்­தி­ர­மாக அறி­மு­க­மா­னவர்.

 

1972 ஆம் ஆண்டு வெளி­யான ராணி மேரா நாம் எனும் திரைப்­ப­டத்தின் மூலம் அவர் குழந்தை நட்­சத்­தி­ர­மாக பொலி­வூட்டில் அறி­மு­க­மானார்.

பார­தி­ராஜா இயக்­கிய 16 வய­தி­னிலே திரைப்­படம் இந்­தியில் சோல்வா சவான் எனும் பெயரில் தயா­ரிக்­கப்
­பட்­ட­போது அப்­ப­டத்­திலும் கதா­நா­ய­கி­யாக ஸ்ரீதேவி நடித்தார்.

 

கதா­நா­ய­கி­யாக ஸ்ரீதேவி நடித்த முதல் பொலிவூட் படம் அது. 1979 ஆம் ஆண்டு அப்­படம் வெளி­யா­கி­யது.

 

அதன்பின் 1980களிலும் 1990களின் முற்­ப­கு­தி­யிலும் பொலி­வூட்டின் முதல்­நிலை நடி­கை­யாக ஸ்ரீதேவி விளங்­கினார்.

பொலிவூட் திரை­யு­லகின் லேடி சுப்பர் ஸ்டாராக விளங்­கி­யவர் ஸ்ரீதேவி.

அவரின் மரணம் குறித்து செய்தி வெளி­யிட்ட பல நாடு­களின் ஊட­கங்­களும் பொலி­வூட்டின் முதல் லேடி சுப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி கால­மானார் என தலைப்­பிட்­டி­ருந்­தன.

ஸ்ரீதே­விதான் (54) பொலி­வூட்டின் முதல் லேடி சுப்பர் ஸ்டார் என்­பதில் பலரும் உடன்­ப­டுவர்.

ஆனால், ஸ்ரீதேவி மாத்­தி­ரமே பொலி­வூட்டின் ஒரே­யொரு லேடி சுப்பர் ஸ்டார் என்­கிறார் பொலி­வூட்டின் பிர­பல இசை­ய­மைப்­பாளர் பப்பி லஹிரி.

1973 ஆம் ஆண்டு முதல் பொலிவூட் திரைப்­ப­டங்­க­ளுக்கு இசை­ய­மைத்து வரும் இசை­ய­மைப்­பாளர் பப்பி லஹிரி, ஸ்ரீதேவி நடித்த ஏரா­ள­மான படங்­க­ளுக்கு இசை­ய­மைத்­துள்ளார்.

அவற்றில் வெள்­ளி­விழா கண்ட 11 திரைப்­ப­டங்­களும் அடங்கும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ஸ்ரீதே­வியின் மரணத் தின் பின்னர் இசை­ய­மைப்­பாளர் பப்பி லஹிரி செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசு­கையில்,
“பொலி­வூட்டின் ஒரே­ யொரு லேடி சுப்பர் ஸ்டாராக ஸ்ரீதேவி விளங்­கினார்.

ஸ்ரீதேவி எம்­முடன் இல்லை என்­பதை இன்னும் என்னால் நம்ப முடி­ய­வில்லை. அவர் எப்­போதும் எமது சுப்­பர்ஸ்­டா­ராக இருப்பார்” என்றார்.

(Visited 35 times, 1 visits today)

Post Author: metro