நைல் நைதி குறித்து கிண்டலடித்த எகிப்திய பாடகிக்கு 6 மாத சிறை!

உலகின் மிக நீள­மான நதி­யான நைல் நதியின் நீரை அருந்­து­வது நோய்­களை ஏற்­ப­டுத்தும் என பாடகி ஷெரீன் கூறி­ய­தா­லேயே அவ­ருக்கு இத்­தண்டனை அளிக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த வருடம் ஜன­வரி, ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் நடை­பெற்ற இசை நிகழ்ச்­சி­யொன்­றின்­போது, ஷெரீனின் பிர­சித்தி பெற்ற பாடல்­களில் ஒன்­றான நைல் நதி நீரை அருந்­தி­யி­ருக்­கி­றீர்­களா? என்ற அர்த்தம் தொனிக்கும் பாடலைப் பாடு­மாறு அவ­ரிடம் ரசிகர் ஒருவர் கோரிக்கை விடுத்தார்.

அப்­போது, இல்லை, நைல் நதி நீரை அருந்­து­வது ஸ்சிஸ்­டோ­சோ­மி­யாஸிஸ் எனும் நோயை ஏற்­ப­டுத்தும் என பாடகி ஷெரீன் வேடிக்­கை­யாக கூறினார். எகிப்தில் பில்­ஹார்­ஸியா என இந்நோய் குறிப்­பி­டப்­ப­டு­கி­றது.

இதனால், அவர் பொய்­யான தக­வலை பரப்­பு­வ­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டது.

இதை­ய­டுத்து பாடகி ஷெரீன் மன்­னிப்புக் கோரி­யி­ருந்தார்.

எனினும் எகிப்தின் தலை­நகர் கெய்­ரோ­வி­லுள்ள நீதி­மன்­ற­மொன்றில் இது தொடர்­பாக ந­டை­பெற்ற வழக்கில் பாடகி ஷெரீ­னுக்கு 6 மாத சிறைத்­தண்­டனை விதித்து நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

அத்­துடன் 5000 எகிப்­திய பவுண்ட்ஸ் (சுமார் 44.000 ரூபா) செலுத்­து­மாறு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

இத்­தீர்ப்­புக்கு எதி­ராக பாடகி ஷெரீன் மேன்­மு­றை­யீடு செய்ய அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளதால் அவர் இன்னும் சிறையில் அடைக்­கப்­ப­ட­வில்லை.

 

(Visited 68 times, 1 visits today)

Post Author: metro