90 ஆவது ஒஸ்கார் விருது விழா இன்று

2018 ஒஸ்கார் விருது வழங்கல் விழா இன்று நடை­பெ­ற­வுள்­ளது. அமெ­ரிக்­காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நக­ரி­லுள்ள ஒரு பகு­தி­யான ஹொலிட்டின் டொல்பி அரங்கில் உள்ளூர் நேரப்படி இன்று ஞாயிறு மாலை இவ்­விழா நடை­பெறும்.

1929 ஆம் ஆண்டு முதல் தட­வை­யாக ஒஸ்கார் விரு­துகள் வழங்­கப்­பட்­டன. இம்­முறை 90 ஆவது தட­வை­யாக ஒஸ்கார் விருது விழா நடை­பெ­ற­வுள்­ளது.

ஹொலிவூட் எனும் அமெ­ரிக்க திரைப்­ப­டத்­து­றையின் சிறந்த கலை­ஞர்­க­ளையும் தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்­க­ளையும் கௌர­விப்­ப­தற்­கா­கவே ஒஸ்கார் விரு­துகள் வழங்­கப்­ப­டு­கின்­றன. ஹொலிவூட் திரைப்­ப­டங்­களில் பணி­யாற்­றிய வெளிநாட்­ட­வர்­க­ளுக்கும் இவ்­வி­ரு­துகள் வழங்­கப்­படும். இவை தவிர வரு­டாந்த சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்­ப­ட­மொன்­றுக்கும் ஒஸ்கார் விரு­தொன்று வழங்­கப்­ப­டு­கி­றது.

Academy of Motion Picture Arts and Sciences எனும் அமைப்­பினால் 1929 ஆம் ஆண்டு முதல் வழங்­கப்­படும் இவ்­வி­ரு­துகள் அக்­க­டமி விரு­துகள் என அழைக்­கப்­ப­டு­கின்­றன. இதற்கு ஒஸ்கார் (Oscar) எனும் பெயர் பல வரு­டங்­களின் பின்னர் சூட்­டப்­பட்­டது.

ஒஸ்கார் எனும் பெயர் ஏற்­ப­டு­வ­தற்கு கார­ணங்­க­ளாக பல கதைகள் கூறப்­ப­டு­கின்­றன. இவ்­வி­ருதை வழங்கும் அக்­க­டமி அமைப்பின் தலை­வி­யா­கவும் பதவி வகித்த பெட்டி டேவிஸ், தானே முதன் முதலில் இவ்­வி­ரு­துக்கு ஒஸ்கார் எனும் பெயரை சூட்­டி­ய­தாக தனது சுய­ச­ரி­தையில் தெரி­வித்­துள்ளார். தனது முதல் கண­வ­ரான ஹேரமன் ஒஸ்கார் நெல்­சனின் பெயரை இதற்கு சூட்­டி­ய­தாக அவர் கூறினார்.

அதே­வேளை இவ்­வ­மைப்பின் நிறை­வேற்று செய­லா­ள­ராக பதவி வகித்த மார்­கரெட் ஹேரிக், 1931 ஆம் ஆண்டு இவ்­வி­ருது சிலையை தான் முதன் முதலில் பார்த்­த­வுடன் அச்­சிலை தனது மாமா ஒஸ்கார் பியர்ஸின் சாயலில் இருந்­தாக கூறி­ய­தா­கவும் அதை­ய­டுத்து இச்­சிலை ஒஸ்கார் என அழைக்­கப்­பட்­ட­தா­கவும் மற்­றொரு கதை கூறப்­ப­டு­கி­றது. ஒஸ்கார் விருது வழங்கும் அக்­க­டமி அமைப்­பினால் 1939 ஆம் ஆண்டு இவ்­வி­ருதுச் சிலைக்கு ஒஸ்கார் என உத்­தி­யோ­க­பூர்­வ­மாக பெய­ரி­டப்­பட்­டது.

கடந்த வருடம் வெளியான படங்­க­ளுக்­காக இன்று ஒஸ்கார் விரு­துகள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. இதற்­கான பரிந்­து­ரைப்­பட்­டியல் கடந்த ஜன­வரி மாதம் வெளியி­டப்­பட்­டது.

இப்­பட்­டி­யலில் ஷேப் ஒவ் தி வோட்டர் திரைப்­படம் 13 விரு­து­க­ளுக்குப் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது. மெக்­ஸி­கோவில் பிறந்த குய்­லெர்மோ டெல் டோரோ இயக்­கிய படம் இது. கிறிஸ்­டோபர் நோலன் இயக்­கிய டன்கிர்க் படம் 8 விரு­து­க­ளுக்குப் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

சிறந்த திரைப்­ப­டங்­க­ளுக்­கான பரிந்­துரைப் பட்­டி­யலில், கோல் மீ பை யுவர் நேம், டார்க்கெஸ்ட் ஹவர், டன்கிர்க், கெட் அவுட் ஆகிய படங்கள் இடம்­பெற்­றள்­ளன.

சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்­ப­டத்­துக்­கான விரு­துக்கு, எ ஃபெண்­டாஸ்டிக் வுமன் (சிலி), தி இன்சல்ட் (லெபனான்), லவ்லெஸ் (ரஷ்யா), ஆன் பாடி அண்ட் சோல் (ஹங்­கேரி), தி ஸ்கொயர் (ஸ்வீடன்) ஆகிய படங்கள் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளன.

கெட் அவுட் திரைப்­பட இயக்­குநர் ஜோர்டன் பீலே சிறந்த இயக்­குநர் பிரிவில் பரிந்­து­ரைக்­கப்­பட்­டதன் மூலம், இந்தப் பிரிவில் பரிந்­து­ரைக்­கப்­படும் 5ஆவது கறுப்­பின இயக்­குநர் என்ற பெரு­மையை பெற்றார்.

இதே­வேளை, லேடி பேர்ட் (Lady Bird) படத்தின் இயக்­குநர் க்ரேடா கெர்விக் சிறந்த இயக்­குநர் விரு­துக்கு பரிந்­து­ரைக்­கப்­பட்­டதன் மூலம், ஒஸ்­கரில் சிறந்த இயக்­கு­ந­ருக்கு பரிந்­து­ரைக்­கப்­பட்­டி­ருக்கும் 5 ஆவது பெண் இயக்­குநர் என்ற பெருமையைப் பெற்றார்.
2009 இல் வெளியான தி ஹர்ட் லொக்கர் படத்­துக்­காக கெத்­தரின் பிகிலோ சிறந்த இயக்­கு­ந­ருக்­கான ஒஸ்கார் விருதை வென்றார். சிறந்த இயக்­குநர் விருதை வென்ற ஒரே பெண் பிகிலோ ஆவார். இவ்­வி­ருதை வெல்லும் இரண்­டா­வது பெண் எனும் பெரு­மையை க்ரேடா கெர்விக் பெறு­வாரா என அறிய பலரும் காத்­தி­ருக்­கின்­றனர்.

(Visited 39 times, 1 visits today)

Post Author: metro