ஹிந்திக்கு செல்லும் அமலா பால்

திரு­மணம், விவா­க­ரத்து போன்ற சம்­ப­வங்கள் அம­லா­பாலின் வாழ்வில் நடந்­த­போதும் அவ­ரது சினிமா மார்க்­கெட்­டுக்கு எந்த பாதிப்பும் ஏற்­ப­ட­வில்லை. இப்­போது வரை அவர் தென்­னிந்­திய மொழி­களில் கதா­நா­ய­கி­யாக பர­வ­லாக நடித்துக் கொண்­டி­ருக்­கிறார்.

இந்த நிலையில், தென்­னிந்­திய சினி­மாவில் இருந்து த்ரிஷா, ராய் லட்­சுமி, ஐஸ்­வர்யா ராஜேஷ் என சில நடி­கைகள் இந்தி படங்­களில் நடித்­துள்ள நிலையில், தற்­போது அம­லா­பாலும் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இந்­தியில் நரேஷ் மல்­ஹோத்ரா இயக்கும் படத்தில் அர்ஜூன் ராம்­பா­லுக்கு ஜோடி­யாக நடிக்­கிறார் அம­லாபால்.

இன்னும் பெய­ரி­டப்­ப­டாத இந்த படத்தில் நடிக்க பல நடி­கை­களை வைத்து போட்­டோசூட் நடத்தி திருப்தி இல்­லாமல் இருந்து வந்த நரேஷ் மல்­ஹோத்ரா, அம­லா­பாலை அழைத்து போட்டோ சூட் நடத்­தி­ய­போது, அந்த கதா­பாத்­தி­ரத்­திற்கு அவர் பொருத்­த­மாக இருந்­ததால் உடனே அவரை ஒப்­பந்தம் செய்து விட்­டாராம்.

இந்த செய்­தியை தனது சினிமா நண்பர்களிடம் சொல்லி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு வருகிறார் அமலா பால்.

 

 

(Visited 27 times, 1 visits today)

Post Author: metro