10 பள்ளிவாசல்கள், 50 வர்த்தக நிலையங்கள், 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்: கைதான 24 பேருக்கும் விளக்கமறியல்; விசாரணைகள் சி.ஐ.டி.யிடம் கையளிப்பு

(எம்.எப்.எம்.பஸீர்)

கண்டி, தெல்­தெ­னிய பொலிஸ் பிரி­விலும் பல்­லே­கல மற்றும் கட்­டு­கஸ்­தோட்டை பொலிஸ் பிரி­வு­க­ளில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள நிலையில், தெல்­தெ­னிய பொலிஸ் பிரிவின் திகன- ராஜ­வல பகு­தியில் இன­வா­தி­களால் தீ மூட்­டப்­பட்டு எரிக்­கப்­பட்ட வீட்­டுக்­குள்­ளி­ருந்து முஸ்லிம் இளைஞர் ஒருவர் சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்ளார்.

21 வய­து­டைய அப்துல் பாஸித் என்ற இளை­ஞரே சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்­ள­துடன் அவ­ரது ஜனாஸா நேற்று மாலை நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.

இந்­நி­லையில் நேற்று இரவு எட்டு மணி­முதல் இன்று காலை 6.00 மணி வரை கண்டி நிர்வாக மாவட்­டத்­துக்கு உட்­பட்ட பகு­தி­களில் ஊர­டங்கு அமுல்ப­டுத்­தப்­பட்­டது. நேற்று முன்­தினம் கண்டி பொலிஸ் நிர்­வாகப் பிரிவில் பொலிஸ் ஊர­டங்கு பிறப்­பிக்­கப்­பட்ட நிலையில் நேற்றுக் காலை அது தளர்த்­தப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

மீண்டும் தெல்­தெ­னிய மற்றும் பல்­லே­கல பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­க­ளுக்கு மட்டும் நேற்றுப் பகல் 11 மணி முதல் ஊர­டங்கு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்­த நிலையில் அது நேற்றிரவு 8 மணி முதல் இன்று காலை 6 மணி வரை கண்டி நிர்வாக மாவட்டம் முழுவதும் விஸ்தரிக்கப்பட்டது.

அத்­துடன், தெல்­தெ­னிய – திகன பகு­திகளை மையப்­ப­டுத்தி இடம்­பெற்ற வன்­மு­றைகள் தொடர்பில் சந்­தேக நபர்­க­ளையும் அதன் பின்­ன­ணியில் செயற்­பட்­டோ­ரையும் கைது செய்யும் பொறுப்பு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ரவின் உத்­த­ர­வுக்கு அமைய குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பாரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இதன்­படி குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் சானி அபே­சே­க­ரவின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக சிறப்புக் குழு­வொன்று நேற்று தெல்­தெ­னிய சென்­ற­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

நேற்று வன்­மு­றைகள் எதுவும் குறித்த பிர­தே­சங்­களில் பதி­வா­காத போதும், பொலிஸ் விசேட அதி­ர­டிப்­படை மற்றும் இரா­ணுவ பாது­காப்பு தொடர்ந்தும் அமுலில் இருப்­ப­தாக பொலிஸ் பேச்­சாளர் சுட்­டிக்­காட்­டினார்.

அத்­துடன் ஏற்­க­னவே முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு தீ வைத்­தமை தொடர்பில் கைது செய்­யப்­பட்ட 24 சந்­தேக நபர்­க­ளையும் நேற்று தெல்­தெ­னிய நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­த­தா­கவும் அதன்­போது அவர்­களை எதிர்­வரும் 19 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­ட­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் கூறினார்.

இத­னி­டையே இரா­ணுவ பாது­காப்­பா­னது கண்டி நக­ருக்கும், தெல்­தெ­னிய , திகன மற்றும் கட்­டு­கஸ்­தோட்டை உள்­ளிட்ட பகு­தி­க­ளுக்கும் தொடர்ந்தும் வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் மேல­திக படை­யணி ஒன்று தயார் நிலையில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இரா­ணுவ ஊடகப் பேச்­சாளர் பிரி­கே­டியர் சுமித் அத்­த­பத்து தெரி­வித்தார்.

நேற்று முன்­தினம் திரண்ட 5000 க்கும் மேற்­பட்ட வன்­மு­றை­யா­ளர்கள், திக­னவில் மட்­டு­மன்றி கட்­டு­கஸ்­தோட்டை வரை­யுள்ள பல முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள், பள்­ளி­வா­சல்கள் மற்றும் குடி­யி­ருப்­புக்கள் மீது தாக்­குதல் நடாத்­தி­யுள்­ளனர்.

இதனால் பல்­லே­கல பொலிஸ் பிரி­விலும் தெல்­தெ­னிய பொலிஸ் பிரி­விலும் பலத்த சேதங்கள் ஏற்­பட்­டுள்­ள­துடன் கட்­டு­கஸ்­தோட்டை பொலிஸ் பிரி­விலும் பள்­ளி­வா­சல்கள், வர்த்­தக நிலை­யங்கள் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

திக­னவில் மட்டும் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான 15 கடைகள் வரை தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தன. மொத் தமாக கட்டுகஸ்தோட்டை, தெல்தெனிய மற்றும் பல்லேகலை பொலிஸ் பிரிவுகளில் 10 பள்ளிவாசல்கள், 50 வரையிலான வர்த்தக நிலையங்கள் 30 வரையிலான வீடுகள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளன.

இவற்றில் ஒரு பள்ளிவாசல் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டுள்ள நிலையில் ஏனையவை பகுதியளவிலும் சிறு அளவிலும் சேதங்களுக்கு உள்ளாமை குறிப்பிடத்தக்கது.

(Visited 107 times, 1 visits today)

Post Author: metro