இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயானார் சன்னி லியோன்

நடிகை சன்னி லியோன் தம்­ப­தியினர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்­தைகளைப் பெற்றுள்ளனர்.


இந்­தியில் ‘ஜிஸ்ம் 2’ படம் வழியே அறி­முகம் பெற்று ‘ராகினி எம்.எம்.எஸ். 2’ வழியே பிர­ப­ல­ம­டைந்த நடிகை சன்னி லியோன் தமிழில் ‘வட­கறி’ என்ற படத்தில் ஒரு பாட்­டுக்கு ஆடி­யுள்ளார். தற்­போது வீர­மா­தேவி எனும் படத்தில் நடித்து வரு­கிறார்.

கடந்த வருடம் நடிகை சன்னி லியோன் மற்றும் அவ­ரது கணவர் டேனியல் வெபர் இரு­வரும் நிஷா என்ற பெண் குழந்தை ஒன்றை தத்­தெ­டுத்து வளர்த்து வரு­கின்­றனர்.

இந்த நிலையில், இந்த தம்­பதி வாடகைத் தாய் மூலம் 2 ஆண் குழந்­தை­களைப் பெற்­றுள்­ளனர்.

இது­பற்றி சன்னி லியோன் வெளி­யிட்­டுள்ள அறிக்கை ஒன்றில், இது உண்­மையில் கட­வுளின் திட்டம்! இது­போன்ற ஒரு பெரிய அழ­கான குடும்பம் கிடைக்கும் வாய்ப்­பினை பெறப் போகிறோம் என்று எங்­க­ளுக்கு தெரி­யாது.

நாங்கள் மகிழ்ச்­சியை கடந்த நிலையில் உள்ளோம். எங்­க­ளது வாழ்வில் 3 அதி­ச­யங்கள் கிடைத்­துள்­ளன. உண்­மையில் கட­வுளின் ஆசியைப் பெற்­றுள்ளோம். எங்­க­ளது குடும்பம் நிறை­வ­டைந்து உள்­ளது.

டேனியல் மற்றும் எனது மர­ப­ணுக்­களைக் கொண்டு வாடகைத் தாய் வழியே குழந்தைப் பெற்றுக் கொள்ள முடி­வெ­டுத்தோம்.

ஆஷர் மற்றும் நோவா ஆகியோர் எங்­க­ளது உயி­ரியல் குழந்­தை­க­ளாக உள்­ளனர். எங்கள் குழந்­தைகள் பிறக்­கும்­வரை அவர்­களை சுமப்­ப­தற்கு தேவதை ஒன்றை கடவுள் எங்­க­ளுக்கு அனுப்பி உள்ளார் என்று தெரி­வித்­துள்ளார்.

லியோன் தனது இன்ஸ்­டா­கி­ராமில் 3 குழந்­தை­க­ளுடன் இருப்­பது போன்ற குடும்பப் படம் ஒன்றை பதி­வேற்றம் செய்­துள்ளார். அதில், எங்­க­ளது குழந்­தைகள் கடந்த சில வாரங்­க­ளுக்கு முன் பிறந்­துள்­ளனர்.

ஆனால், பல வரு­டங்­க­ளுக்கு எங்­க­ளது இரு­த­யங்கள் மற்றும் கண்­களில் அவர்கள் வாழ்ந்து வருவர்.

எங்­க­ளுக்­காக கடவுள் சில சிறப்­பு­டைய விச­யங்­களை திட்­ட­மிட்டு உள்ளார்.

பெரிய குடும்­பத்­தி­னையும் அளித்து உள்ளார். 3 அழகான குழந்தை களுக்கு நாங்கள் பெற்றோர் என பெருமை கொள்கிறோம் என்று தெரிவித்து உள்ளார்.

(Visited 140 times, 1 visits today)

Post Author: metro