இலங்கை கனிய மணல் கூட்­டுத்­தா­ப­னத்தின் 60 ஆவது ஆண்டு விழா

இலங்கை கனிய மணல் கூட்­டுத்­தா­ப­னத்தின் 60 ஆவது ஆண்டு விழா கடந்த முதலாம் திகதி புல்­மோட்­டையில் கொண்­டா­ட­ப்­பட்­டது.

கைத்­தொழில், வர்த்தக அமைச்­சரும் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வ­ரு­மான ரிஷாட் பதி­யுதீன் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டார்.

கைத்­தொழில், வர்த்­தக இரா­ஜாங்க அமைச்சர் சம்­பிக பிரே­ம­தாச, அப்­துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி, நிறு­வ­னத்தின் தலைவர் திரு­மதி. இந்­திகா, முகா­மைத்­துவப் பணிப்­பாளர் சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப், பணிப்­பாளர் சபை உறுப்­பினர் அப்துல் ரசாக், மக்கள் காங்­கி­ரஸின் முக்­கி­யஸ்­தர்­க­ளான தௌபீக், சல்மான் பாரிஸ், பது­ருதீன், நியாஸ் மற்றும் குச்­ச­வெளி பிர­தேச சபை உறுப்­பி­னர்கள் என பலரும் அதி­தி­க­ளாக கலந்­து­கொண்­டனர்.

அர­சாங்கம் இன்று விழுந்­து­விடும், நாளை விழுந்­து­விடும் என ஊட­கங்கள் கட்­டி­யங்­க­ளையும், ஊகங்­க­ளையும் வெளிப்­ப­டுத்தி வரும் நிலையில், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் நாட்டின் ஸ்திர­மான ஆட்சி ஒன்­றையே வலி­யு­றுத்­து­கி­றது.

இவ்­வி­ழாவில் அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் உரை­யாற்­று­கையில், ‘‘ஆட்­சியின் ஸ்திரம் இல்­லாத போக்கு நாட்­டுக்கோ, மக்­க­ளுக்கோ உகந்­த­தாக அமை­யாது. இதனால் பொரு­ளா­தார வளர்ச்சி பாதிக்­கப்­படும் என்­பதை அரச தலை­மைகள் உணர்ந்து பணி­யாற்ற வேண்டும்.

இலங்கை கனிய மணல் நிறு­வ­னத்தின் அரச வளங்­களை, தமது சொந்த வளங்கள் போல கருதி அதனை சீர­ழிப்­ப­தற்கு சிலர் முயற்சி எடுத்த போதும், நாம் அதற்கு இட­ம­ளிக்­கா­ததால், இங்­கி­ருக்கும் சில ஊழி­யர்­களின் துணை­யுடன் எமக்­கெ­தி­ராக அபாண்­டங்­க­ளையும், பழி­க­ளையும் பரப்­பினர். ஆர்ப்­பாட்­டங்­களை ஏற்­பாடு செய்து, நிறு­வ­னத்தை ஸ்தம்­பிதமடையச் செய்யும் நட­வ­டிக்­கை­களை அவர்கள் மேற்­கொண்­டனர்.


இந்தப் பிர­தே­சத்தில் உள்ள சுமார் 150 பேருக்கு நாம் தொழில் வாய்ப்­புக்­களை வழங்­கிய போதும், எமக்­கெ­தி­ராக அவர்கள் போராட்­டத்தை நடத்­தினர். எனினும், இங்கு தொழில் புரியும் பெரும்­பா­லான ஊழி­யர்கள் உண்­மையை அறிந்து, எமது நேர்­மை­யான பணி­க­ளுக்கு பக்­க­ப­ல­மாக இருந்­தனர். அவர்­களை நாம் கௌர­வத்­தோடு இந்த சந்­தர்ப்­பத்தில் நினை­வு­கூர விரும்­பு­கின்றோம்.

கடந்த காலங்­களில் இந்த நிறு­வ­னத்தைப் பொறுப்­பெ­டுத்­த­வர்­களும், நிரு­வ­கித்­த­வர்­களும், தாங்கள் இந்த நிறு­வ­னத்­தி­லி­ருந்து எதனைப் பெற்­றுக்­கொள்ள முடியும் என்றே சிந்­தித்­தனர். ஆனால், நாம் பொறுப்­பேற்று இரண்டு வருட காலங்­களில் எவ்­வாறு நிறு­வ­னத்தின் வரு­மா­னத்தைப் பெருக்­கு­வது, இங்கு பணி­யாற்­று­ப­வர்­களின் ஊதி­யத்தை எவ்­வாறு அதி­க­ரிப்­பது என்று சிந்­தித்து அதற்­கான திட்­டங்­களை மேற்­கொண்டோம்.

இருக்கும் வளங்­களைப் பயன்­ப­டுத்தி, முத­லீட்­டா­ளர்­களை வர­வ­ழைத்து, உற்­பத்தித் திறனை அதி­க­ரிக்க முயற்­சிகள் மேற்­கொண்டு வரு­கின்றோம். இது தொடர்பில், ஜனா­தி­ப­தி­யி­டமும், பிர­த­ம­ரி­டமும் பல­த­டவை பேசி­யி­ருக்­கின்றோம். அமைச்­ச­ர­வையில் பத்­திரம் சமர்ப்­பித்து, திட்­டங்­களை வகுத்து வரு­கின்றோம். திரு­கோ­ண­மலை மாவட்­டத்­திலும், இந்தப் பிர­தே­சத்­திலும் வாழ்­ப­வர்­க­ளுக்கு தொழில் வழங்கி, அவர்­களின் வாழ்­வா­தா­ரத்தை மேம்­ப­டுத்­து­வது பற்றி சிந்­திக்­கின்றோம்.


எனது தொகு­தி­யான வன்னி மாவட்­டத்­திலோ அல்­லது புத்­தளம் மாவட்­டத்­திலோ வாழ்­ப­வர்­க­ளுக்கு இந்த நிறு­வ­னத்தில் நாம் நிய­ம­னங்கள் வழங்­க­வில்லை. இந்தப் பிர­தே­சத்தில் உள்­ள­வர்­க­ளுக்கே தொழில்­களை வழங்­கினோம். எனினும், இந்தப் பிர­தே­சத்தில் உள்ள ஒரு­சி­லரும், இன்னும் சில அமைப்புக்களும் எனக்கு இந்த நிறுவனத்தை வழங்க வேண்டாமென உயர்மட்டத்துக்கு கடிதம் எழுதியதை நாம் அறிவோம்.

இந்த நிறுவனம் எனது அமைச்சின் கீழ் இருந்த காலப்பகுதிதான் “பொற்காலம்” என வரலாறு சொல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. நாங்கள் செய்துவரும் மற்றும் செய்யப் போகும் விடயங்கள் வரலாற்றில் எழுதப்படும்” என்றார்.

(Visited 16 times, 1 visits today)

Post Author: metro