பேஸ்புக், வட்ஸ்எப், வைபர் உட்பட சமூக வலைத்தளங்கள் முடக்கம்: நாட்டின் சூழ்நிலையை கருத்திற்கொண்டு நடவடிக்கை

(ரெ.கிறிஷ்­ணகாந்)

நாட்டில் பாது­காப்பு கார­ணங்­க­ளுக்­காக பேஸ்புக், வட்ஸ்எப், இன்ஸ்­ட­கிரம் மற்றும் வைபர் உள்­ளிட்­ட­ச­மூக வலைத்­த­ளங்­களின் பாவனை நேற்று முதல் தற்­கா­லி­க­மாக முடக்­கப்­பட்­டுள்­ள­தாக தேசிய தொலைத்­தொ­டர்பு ஒழுங்­குப்­ப­டுத்தல் ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது.


பாது­காப்பு அமைச்சின் வேண்­டு­கோ­ளுக்­க­மைய தேசியப் பாது­காப்பைக் கருத்­திற்­கொண்டு இந்தத் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக ஆணைக்­குழு மேலும் தெரி­வித்­துள்­ளது.

தற்­போ­தைய பதற்­ற­மான சூழலில் சில விஷ­மிகள் இன­வா­தத்தை தூண்டும் வகையில் சமூ­க­வ­லைத்­த­ளங்­களை தவ­றான முறையில் பயன்­ப­டுத்­து­வதால் நிலைமை மேலும் மோச­ம­டை­வ­தனை தவிர்க்கும் பொருட்டு இன்­று­காலை வரை சமூ­க­வ­லைத்­த­ளங்­களை முடக்கி வைத்­தி­ருப்­ப­தற்கு தீர்­மா­னித்­த­தா­கவும் இந்­நி­லைமை தொடரும் பட்­சத்தில் தொடர்ந்தும் மேலும் சில தினங்­க­ளுக்கு இந்தக் கட்­டுப்­பாடு நீடிக்­கப்­ப­டலாம் எனவும் தொலைத்­தொ­டர்பு ஒழுங்­குப்­ப­டுத்தல் ஆணைக்­குழு ளுக்கு இந்தக் கட்­டுப்­பாடு நீடிக்­கப்­ப­டலாம் எனவும் தொலைத்­தொ­டர்பு ஒழுங்­குப்­ப­டுத்தல் ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது.கு இந்தக் கட்டுப்பாடு நீடிக்கப்படலாம் எனவும் தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

(Visited 75 times, 1 visits today)

Post Author: metro