இலவசமாக பாலியல் சேவை வழங்குவதாகக் கூறிய சீன யுவதி: ஆயிரக்கணக்கானோர் ஹோட்டல் அறைக்கு படையெடுப்பு – கைதான யுவ­திக்கு சிறைத்­தண்­டனை

இல­வ­ச­மாக பாலியல் சேவை வழங்­கப்­போ­வ­தாகக் கூறி, தனது ஹோட்டல் அறைக்கு மக்­க­ளுக்கு அழைப்பு விடுத்து பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­திய சீன யுவதி சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டுள்ளர்.

யே மவ்யீ எனும் இந்த யுவதி ஒரு வலைப்­ப­திவர் ஆவார். சீன சமூக வலைத்­த­ளங்­களில் கியான்ஜின் யேயே எனும் பெயரில் பதி­வு­களை எழுதி வரு­பவர்.

அண்­மையில் சமூக வலைத்­த­ள­மொன்றில் வீடி­யோ­வொன்றை வெளி­யிட்ட யே மவ்யீ, யாரேனும் என்­னுடன் இல­வ­ச­மாக செக்ஸ் அனு­ப­வி­யுங்கள் எனத் தெரி­வித்­தி­ருந்தார். பிர­பல நட்­சத்­திர ஹோட்­ட­லொன்றில் 6316 இலக்க அறையில் தான் தங்­கி­யி­ருப்­ப­தா­கவும் அவர் மேற்­படி வீடி­யோவில் தெரி­வித்­தி­ருந்தார்.

அதை­ய­டுத்து பெரும் எண்­ணிக்­கை­யானோர் யே மவ்­யீயின் ஹோட்டல் அறைக் கதவை தட்ட ஆரம்­பித்­தனர். அத்­துடன் மேற்­படி ஹோட்­ட­லுடன் தொலை­பேசி மூலம் தொடர்பு கொண்ட பலர், அறை எண் 6316 இல் தங்­கி­யி­ருப்­பவர் யார் என விசா­ரிக்க ஆரம்­பித்­தனர்.

சுமார் 3000 பேர் மேற்­படி ஹோட்­ட­லுக்கு நேரில் வந்­த­தாக அல்­லது தொலை­பேசி மூலம் தொடர்பு கொண்டு இது குறித்து விசா­ரித்­த­தாக ஊட­க­மொன்று தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக ஹோட்டல் அதி­கா­ரி­களால் பொலி­ஸா­ருக்கு முறைப்­பாடு செய்­யப்­பட்­டது. இரவு 10 மணி­ய­ளவில் பொலிஸார் அங்கு வந்­த­போது ஹோட்டல் அறை­யி­லி­ருந்து யே மவ்யீ வெளி­யே­றி­யி­ருந்தார். தனது வீடியோ ஒரு ஜோக் எனவும் அவ்­வீ­டி­யோவை பகிர்­வதை நிறுத்­து­மாறும் கோரினார்.

எனினும் அவரை பொலிஸார் தேடத் தொடங்­கி­னர். கடந்த வெள்­ளிக்­கி­ழமை சீனாவின் சான்யா நக­ரி­லுள்ள சான்யா பீனிக்ஸ் விமான நிலையத்தில் வைத்து யே மவ்யீ கைது செய்யப்பட்டார். யே மவ்யீக்கு நீதிமன்றமொன்று 15 நாள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

(Visited 143 times, 1 visits today)

Post Author: metro