அனிதாவாக மாறும் ‘பிக்பொஸ்’ ஜூலி

‘டாக்டர் அனிதா எம்.பி.பி.எஸ்’ படத்தின் போஸ்டரை நேற்று முன்தினம் பிக்பொஸ் நிகழ்ச்சிமூலம் பிரபல்யமான ஜுலி சமூகவலைதளத்தில் வெளியிட்டிருந்தார். தற்போது இந்த போஸ்டர் வைர­லா­கி­வ­ரு­கி­றது. இது குறித்து ஜுலியிடம் கேட்டபோது,

 ‘டாக்டர் அனிதா எம்.பி.பி.எஸ்’ படத்தின் போஸ்டர் வைர­லா­கி­வ­ரு­கி­றது. அது உண்­மை­தானா?
ஆமாம். பெண்­களை மையப்­ப­டுத்­தின மற்றும் சமூக மாற்­றத்­துக்­கான படங்கள் மிகக் குறை­வா­கவே வருது. அதில் ஒண்­ணுதான், இந்தப் படம். கடந்த வருஷம், அனி­தாவின் மரணம் மிகப்­பெ­ரிய அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­துச்சு. அனி­தாவின் டாக்­ட­ராகும் லட்­சியம் நிறை­வே­றாம போயி­டுச்சு.

அத­னால வருத்­தப்­பட்­ட­வங்­கள்ல நானும் ஒருத்தி. இன்­னிக்கு அனி­தாவின் பிறந்த நாள். அவ­ருக்கு ட்ரிப்யூட் பண்ற விதமா, இன்­னிக்குப் படத்தின் போஸ்­டரை என் சோஷியல் மீடி­யா­வுல ரிலீஸ் பண்­ணினேன்.

நீங்க அனி­தாவாக நடிக்­கி­றீங்­களா…?
இந்தப் படம் அனி­தாவை மையப்­ப­டுத்­தின கதை கொண்­டது. அதில், நான் அனி­தாவா நடிக்­கிறேன். ஏன்… நான் அனி­தாவா நடிக்கக் கூடாதா? ஒரு மிடில் கிளாஸ் பொண்­ணோட வாழ்க்கை கதை.

படத்தைப் பார்த்தா நல்லா புரியும். தவிர, நீங்க எப்­படி துருவித் துருவிக் கேட்­டாலும், படத்தைப் பத்­தின மற்ற விஷ­யங்­களைச் சொல்­ல­மாட்டேன். அவை பரம ரக­சியம். சீக்­கி­ரமே பிரஸ் மீட் வெச்சு, அவற்றைச் சொல்லப் போறோம்.

பிக்பொஸ்’ நிகழ்ச்­சிக்கு அப்­புறம் உங்க லைஃப் எப்­படி சேஞ்ச் ஆகி­யி­ருக்கு?
நிறையப் பய­னுள்ள மாற்­றங்கள் நடந்­து­கிட்டு இருக்­குது. நர்ஸிங் ஃபீல்­டுல இருந்து மீடி­யா­வுக்குள் வந்­தி­ருக்கேன். சினி­மா­வு­லேயும் நடிச்­சி­ருக்கேன். சமீ­பத்­துல ‘மன்னர் வகை­யரா’ படத்தில் நடிச்சேன்.

பிடிச்ச கெரக்­டர்­கள்ல அடுத்­த­டுத்து நடிச்­சு­கிட்டிருக்கேன். வெளிய போகும்­போது நிறையப் பேர் ெபாசிட்­டிவா பாராட்­டு­றாங்க. எல்லா வீட்­டு­லேயும் பெண்­களின் ரோல்தான் பெரிசு. அப்­ப­டித்தான் எங்க வீட்­டு­லயும். சின்னப் பொண்ணா இருந்தும், என் குடும்­பத்தை நான்தான் கவ­னிச்­சுக்­கிறேன். அதில் எனக்கு ரொம்­பவே சந்­தோஷம்.

உங்­களைப் பற்­றிய விமர்­ச­னங்­களை எப்­படி எடுத்­துக்­கி­றீங்க?
யார்­மே­லதான் விமர்­சனம் இல்லை. இன்­னிக்கு என்னை விமர்­சனம் செய்­ற­வங்க, நாளைக்குப் புதுசா இன்­னொ­ருத்­தரை விமர்­சிப்­பாங்க. அவங்­க­ளோட எண்ணம், விமர்­சனம் பண்­றது மட்­டும்தான். நம்ம வள­ர­ணும்னு நினைச்சா, அதை­யெல்லாம் கடந்து போயிட்டே இருக்­கணும். மத்­த­வங்­க­ளுக்­காக வாழ்ந்தா, நம்ம வாழ்க்கை சரியா இருக்­காது. அத­னால, விமர்­ச­னங்­களைப் பெரிசா எடுத்­துக்­க­மாட்டேன்.

தொகுப்­பா­ளினி பயணம் எப்­படிப் போயிட்டு இருக்­குது?
நல்லா போயிட்டு இருக்­குது. என் திற­மையை நம்பி, ‘ஓடி விளை­யாடு பாப்பா’ நிகழ்ச்­சி­யில கலா மாஸ்டர் எனக்கு வாய்ப்பு கொடுத்­தாங்க. அதை நானும் சரியா பயன்­ப­டுத்­தி­கிட்டு இருக்கேன். போட்­டி­யா­ளர்­களா வர்ற எல்லாக் குழந்­தை­களும் தங்­க­ளோட டான்ஸ் திற­மையைச் சிறப்பா வெளிப்­ப­டுத்­து­றாங்க. என் சின்ன வய­சுல இந்த மாதி­ரி­யான வாய்ப்­புகள் கிடைக்­க­லை­யேனு ஃபீல் பண்றேன்.

திரைப்­ப­டங்­களில் நடிப்­பது தொட­ருமா?.
தொடர்ந்து நடிக்­கி­றது சந்­தோ­ஷமா இருக்­குது. எனக்கு ஹீரோயினாகணும்னு ஆசையில்லை. எந்தக் கெரக்டரா இருந்தாலும்சரி, அதில் என் முழுத்திறமையை வெளிப்படுத்தி, பெயர் வாங்கணும். அவ்ளோதான். என் ரோல் ெமாடல், ‘ஆச்சி’ மனோரமா. அவங்களைமாதிரி நீண்ட காலம் மக்கள் மனசுல இடம் பிடிக்கணும்னு ஆசை.

(Visited 44 times, 1 visits today)

Post Author: metro