சர்வதேச மகளிர் தினம் இன்று

மார்ச் 8 ஆம் திகதி உல­கெங்கும் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது. 1911 ஆம் ஆண்­டி­லி­ருந்து சர்­வ­தேச மகளிர் தினம் அனுஷ்­டிக்­கப்­பட்டு வரு­கி­றது.

1789ஆம் ஆண்டில் பிரஞ்ச் புரட்­சியின் போது பெண்­களும் போராட்ட களத்தில் இறங்­கினர். சமத்­துவ உரி­மைகள் வேண்டும், வேலைக்கு ஏற்ற ஊதியம், பெண்­க­ளுக்கு வாக்­கு­ரிமை, பெண்களை அடி­மை­க­ளாக நடத்தக் கூடாது என வலி­யு­றுத்தி போரா­டினர்.

அதை அடக்க நினைத்த மன்னன் 16 ஆம் லூயி போராட்­டத்தின் வேகத்­துக்கு ஈடு­கொ­டுக்க முடி­யாமல் தோல்­வி­யுற்றான். 1792 இல் பிரான்ஸ் குடி­ய­ர­சாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது. பதி­னாறாம் லூயியும் அவனின் மனைவி மரீ அண்­டோ­னெட்டும் மரண தண்­டனை விதிக்­கப்­பட்டு கில்­லட்டின் தலை­வெட்டு எந்­தி­ரம்­மூலம் கொல்­லப்­பட்­டனர்.

இப்­போ­ராட்­டத்தின் வெற்றி ஐரோப்பா முழுக்க பெண்கள் போராட்டம் நடத்த உத்­வேகம் ஊட்­டி­யது. ஜேர்­மனி, ஆஸ்­தி­ரியா, டென்மார்க் ஆகிய நாடு­களை சேர்ந்த பெண்­களின் தொடர் போராட்­டங்­களைக் கண்டு அரசு ஆடிப்­போ­னது.

இத்­தா­லிய பெண்கள், வாக்­கு­ரிமை கேட்டு போரா­டினர். பிரான்ஸில் பிரஷ்­யனில் இரண்­டா­வது குடி­ய­ரசை நிறு­விய லூயிஸ் பிளாங் பெண்­களை அர­சவை ஆலோ­சனை குழுக்­களில் சேர்க்­கவும் பெண்­க­ளுக்கு வாக்­கு­ரிமை அளிக்­கவும் ஒப்­புக்­கொண்ட அந்த நாள் 1848 மார்ச் 8.

பெண்­களின் போராட்டம் அமெ­ரிக்­கா­விலும் நடை­பெற்­றது. 1908ஆம் ஆண்டு வாக்­கு­ரிமை கேட்டு பெண்கள் பாரிய ஆர்ப்­பாட்ட பேர­ணியை நடத்­தினர். 1909 ஆம் ஆண்டு பெப்­ர­வரி 28 ஆம் திகதி நியூ­யோர்க்கில் அனைத்­துலக உழைக்கும் மகளிர் தினம் அனுஷ்­டிக்­கப்­பட்­டது.

1910ஆம் ஆண்டு டென்மார்க் தலை­நகர் கொப்­பன்­ஹே­கனில் அனைத்­து­லக பெண்கள் மாநாடு நடை­பெற்­றது. இதில் கலந்­து­கொண்ட ஜேர்­மனி சமூக ஜன­நா­யகக் கட்­சியின் தலை­வி­யான லூயிஸ் ஸியெட்ஸ், ஒவ்­வொரு வரு­டமும் மகளிர் தினம் உலகம் முழு­வதும் ஒரே தினத்தில் அனு­ஷ்டிக்­கப்­பட வேண்டும். அதில் பெண்கள் தங்கள் உரி­மைக்­காக குரல் கொடுக்க வேண்டும் என்ற யோச­னையை முன்­வைத்தார்.

இந்த யோச­னையை ஜேர்மன் சமூக ஜன­நா­யகக் கட்­சியின் செயற்­பாட்­டாளர் கிளாரா ஸெட்கின் வழி­மொ­ழிந்தார். அத்­துடன் இந்த மாநாட்டில் கலந்­து­கொண்ட 17 நாடு­களைச் சேர்ந்த சுமார் 100 பெண்­களும் ஏக­ம­ன­தாக இந்த யோச­னையை வர­வேற்­றனர்.
பின்னர் சர்­வ­தேச மாதர் அமைப்பு உரு­வா­னது. இந்த அமைப்பின் சார்­பாக 1911ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் திகதி முதல் தட­வை­யாக சர்­வ­தேச மகளிர் தினம் அனுஷ்­டிக்­கப்­பட்­டது. டென்மார்க் ஆஸ்­தி­ரியா, ஜேர்­மனி இன்னும் சில ஐரோப்­பிய நாடு­களின் பெண் பிர­தி­நி­திகள் முத­லா­வது சர்­வ­தேச மகளிர் தினத்தைக் கொண்­டா­டினர்.

இந்த கொண்­டாட்­டத்தின் போதுதான் மார்ச் 8 ஆம் திக­தியை சர்­வ­தேச மகளிர் தின­மாக கொண்­டாட வேண்­டு­மென தீர்­மா­னிக்­கப்­பட்­டது. 1913ஆம் ஆண்டு தொடக்கம் மார்ச் 8ஆம் திகதி சர்­வ­தேச மகளிர் தினமாக உலகம் முழு­வதும் அனு­ஷ்டிக்­கப்­பட்டு வரு­கி­றது.

2030 ஆம் ஆண்டில் அனைத்து சிறு­மிகள், சிறார்­களும் இல­வ­ச­மாக சமத்­துவ, தர­மான ஆரம்பக் கல்­வியை பூர்த்தி செய்­வதை உறு­திப்­ப­டுத்த வேண்டும். அனைத்து சிறுவர் சிறு­மி­யரும் சமத்­து­வ­மான ஆரம்பப் பிள்ளைப் பருவ அபி­வி­ருத்தி நிலை­களை அடை­வதை உறு­திப்­ப­டுத்த வேண்டும். பெண்கள் மற்றும் சிறு­மிகள் மீதான அனைத்து வித பாகு­பா­டு­களும் ஒழிக்­கப்­பட வேண்டும் என்­ப­னவும் நிலை­யான அபி­வி­ருத்தி இலக்­கு­க­ளுக்­கான ஐ.நா.வின் நிகழ்ச்­சி­நி­ரல்­களில் அடங்­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

1977ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபை­யா­னது மார்ச் 8ஆம் திக­தியை பெண்கள் உரி­மைக்கும் உலக சாமா­தா­னத்­துக்­கு­மான ஐ.நா. தின­மாக அனுஷ்­டிக்­கு­மாறு தனது அங்­கத்­துவ நாடு­க­ளுக்கு அழைப்பு விடுத்­தது.

2018ஆம் ஆண்டின் சர்­வ­தேச மகளிர் தினத்­துக்­கான ஐ.நா.வின் தொனிப்­பொருள் ”இதுவே நேரம்: கிரா­மிய மற்றும் நகர செயற்­பா­டுகள் பெண்­களின் வாழ்க்­கையை மாற்­று­கின்­றன” என்­ப­தாகும்.

“பாலின சமத்­து­வத்தை அடை­வதும், பெண்கள் மற்றும் சிறு­மி­களை வலு­வூட்­டு­வதும் எமது காலத்தில் முடி­வ­டை­யாத விட­ய­மா­க­வுள்­ளது. இது எமது உலகில் மாபெ­ரும் மனித உரிமை சவா­லா­கவும் உள்­ளது” என ஐ.நா. செய­லாளர் நாயகம் அன்­டோ­னியோ குட்­டெரஸ் கூறி­யுள்ளார்.

ஐ.நா.வின் மகளிர் விவ­கார நிறை­வேற்றுப் பணிப்­பாளர் பும்ஸில் எம்­லாம்போ என்­குகா இது தொடர்­பாக விடுத்­துள்ள செய்­தியில்,
பல தலை­மு­றை­க­ளாக பெண்­களின் உரி­மை­களை வெற்றி பெற வைத்த ஈடு­பாடும் அர்ப்­ப­ணிப்பும் கொண்ட பெண்கள் செயற்­பாட்­டா­ளர்­களின் துடிப்­பான வாழ்க்­கையை இவ்­வ­ருட தொனிப்­பொருள் பிர­தி­ப­லிக்­கி­றது எனத் தெரி­வித்­துள்ளார்.

பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்கள், தொந்­த­ர­வு­க­ளுக்­குள்­ளான பெண்கள் தொடர்­பான விழிப்­பு­ணர்வை ஏற்படுத்துவதற்காக மீ ரூ (Me Too) மற்றும் டைம்ஸ் அப் (Time’s up) செயற்பாடுகள் உலகெங்கும் பரவி வரும் நிலையில், இவ்வருடம் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி முன்னேற்றத்துக்கு அழுத்தம் கொடுங் கள் (Press for Progress) எனும் அர்த்தத் தில் மகளிர் தின செயற்பாடுகள் மேற் கொள்ளப்படுகின்றன. சமூக வலைத் தளங்களில் ; #PressforProgress எனும் ஹேஷ்டெக்குடன் இது தொடர்பான பிரசாரங்கள் மேற்கொள்ளப் படுகின்றன.

(Visited 42 times, 1 visits today)

Post Author: metro