2014 : எம்.எச்.370 விமானம் 239 பேருடன் காணாமல் போனது

வரலாற்றில் இன்று

மார்ச் – 08

 

1618 : ஜேர்­ம­னியைச் சேர்ந்த வானி­ய­லா­ளரும் கணி­த­வி­ய­லா­ள­ரு­மான ஜொஹான்னெஸ் கெப்லர், கோள்­களின் இயக்­கங்­க­ளுக்­கான மூன்­றா­வது விதியைக் கண்­டு­பி­டித்தார்.

1782 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் ஒஹையோ மாநி­லத்தில் கிறிஸ்­த­வத்­துக்கு மதம் மாறிய 90 அமெ­ரிக்க இந்­தியப் பழங்­கு­டிகள் பென்­சில்­வே­னி­யாவின் துணை இரா­ணு­வத்­தி­னரால் படு­கொலை செய்­யப்­பட்­டனர். கொல்­லப்­பட்­ட­வர்­களில் 68 பேர் குழந்­தை­களும் பெண்­க­ளு­மாவர்.

1817 : நியூ யோர்க் பங்குச் சந்தை ஸ்தாபிக்­கப்­பட்­டது.

1917 : ரஷ்­யாவின் சென் பீட்­டர்ஸ்பேர்க் நகரில் மகளிர் தின ஆர்ப்­பாட்­டங்கள் ஆரம்­ப­மா­கின. (இது பழைய ஜூலியன் நாட்­காட்­டியில் பெப்­ர­வரி 23 ஆம் திக­தி­யாகும்)

1921 : ஸ்பெயின் பிர­தமர் எடு­வார்டோ டாட்டோ, மட்றிட் நகரில் நாடா­ளு­மன்­றத்­தி­லி­ருந்து வெளி­யே­றும்­போது கெட்­ட­லோ­னியா கிளர்ச்சி அமைப்­பி­னரால் சுட்டுக் கொல்­லப்­பட்டார்.

1924 : அமெ­ரிக்­காவின் உட்டா மாநி­லத்தில் நிலக்­கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்­பெற்ற விபத்தில் 172 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1942 : இரண்டாம் உலகப் போர்: இந்­தோ­னே­ஷி­யாவின் ஜாவாவில் ஜப்­பா­னியப் படை­க­ளிடம் டச்சுப் படைகள் சர­ண­டைந்­தனர்.

1942 : இரண்டாம் உலகப் போர்: பர்­மாவின் ரங்கூன் நகரை ஜப்பான் கைப்­பற்­றி­யது.

1950 : சோவியத் ஒன்­றியம் தன்­னிடம் அணுகுண்டு இருப்­ப­தாக அறி­வித்­தது.

1957 : எகிப்து சூயஸ் கால்­வாயை மீண்டும் திறந்­தது.

1965 : வியட்நாம் போர்: 3,500 அமெ­ரிக்கப் படைகள் தென் வியட்­நாமில் தரை­யி­றங்­கினர்.

1979 : பிலிப்ஸ் நிறு­வனம் இறு­வட்டை (கொம்பாக்ட் டிஸ்க் – சி.டி) முதல் தட­வை­யாக பகி­ரங்­க­மாக செயற்­ப­டுத்தி காண்­பித்­தது.

2004 : ஈராக்கில் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

2014 : மலே­ஷியா எயார்­லைன்ஸின் பிளைட் எம்.எச்.370 விமானம் 239 பேருடன் கோலா­லம்பூரிலி­ருந்து சீனாவின் பெய்ஜிங் நகரை நோக்கி சென்­று­கொண்­டி­ருந்­த­போது மர்­ம­மாக காணாமல் போனது. இவ்­வி­மானம் இந்து சமுத்­தி­ரத்தில் வீழ்ந்­த­தாக நம்­பப்­ப­டு­கி­றது.

2014 : கொழும்பு வெளிச்­சுற்று அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்டமாக கொட்டாவை- கடுவலை வரையான பகுதி திறந்து வைக்கப்பட்டது.

2017 : தலாவாக்கலை மெராயா பகுதியில் சூறாவளியினால் 35 வீடுகள் சேதமடைந்தன.

(Visited 33 times, 1 visits today)

Post Author: metro