கண்டி வன்முறைகள் தொடர்பில் ‘மஹசொஹொன் பலகாய’ தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 10 பேர் கைது

(எம்.எப்.எம்.பஸீர்)

கண்டி மாவட்­டத்தின் பல பகு­தி­க­ளிலும் கடந்த மூன்று நாட்­க­ளாக இடம்­பெற்ற இன ரீதி­யி­லான வன்­மு­றை­க­ளுக்கு சதித் திட்டம் தீட்டி இன­வா­தத்தை தூண்டி வழி நடத்­தி­ய­தாக கூறப்­படும் பிர­தான சந்­தேக நப­ரான ‘மக­சொஹொன் பல­காய’ எனும் அமைப்பின் தலை­வ­ராக கரு­தப்­படும் அமித் வீர­சிங்க, அவரின் சகா சுரேந்ர சுர­வீர உள்­ளிட்ட 10 பேரை பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் நேற்றுக் கைது செய்­தனர்.

கொழும்­பி­லி­ருந்து நேற்றுக் காலை சென்ற பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் பிர­தானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா தலை­மை­யி­லான உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் விஷாந்த உள்­ளிட்ட குழு­வினர் இவர்­களை பூஜா­பிட்­டிய மற்றும் திகன பகு­தி­களில் வைத்து கைது செய்­த­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

கைது செய்­யப்­பட்ட 10 பேரில் இருவர் மட்­டுமே அந்தப் பகு­தி­களைச் சேர்ந்­த­வர்கள் எனவும் ஏனையோர் வெளி­யி­டங்­களைச் சேர்ந்­த­வர்கள் எனவும் அவர் தெரி­வித்தார்.

அத்­துடன் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரால் இவர்கள் 10 பேரும் கைது செய்­யப்­படும் போதும் வன்­மு­றை­க­ளுக்கு சதித் திட்டம் தீட்­டிய வண்ணம் அவர்கள் இருந்­துள்­ள­தா­கவும், அவர்­க­ளிடம் தொடர்ச்­சி­யாக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர மேலும் குறி­பிட்டார்.

இந் நிலையில் கண்டி வன்­மு­றைகள் தொடர்பில் சதித் திட்டம் தீட்­டி­யமை, வன்­மு­றை­களை வழி நடத்­தி­யமை, இன­வா­தத்தை தூன்­டி­யமை, அது தொடர்பில் கட்­டளை செய்­தமை, சமூக வலைத்­த­ளங்கள் ஊடாக வன்­மு­றை­க­ளுக்கு தூப­மிட்­டமை உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் இந்த 10 பேரையும் கைது செய்­துள்ள பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் நேற்­றி­ரவு அவர்­களை கொழும்­புக்கு அழைத்து வந்­தனர்.

இவ்­வாறு கொழும்­புக்கு அழைத்து வரப்­பட்ட 10 பேரும், 2018 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க அவ­சர கால சட்­டத்தின் விட­ய­தா­னங்­க­ளுக்கு அமை­வாக பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ருக்கு உள்ள அதி­கா­ரத்தின் கீழ், 14 நாட்கள் நான்காம் மாடியில் தடுத்து வைத்து விசா­ரணை செய்ய தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

அதன்­படி நேற்று இரவு முதல் தடுப்புக் காவலின் கீழான விசா­ர­ணை­களை பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் பிர­தானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்­வாவின் ஆலோ­ச­னைக்கு அமைய உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் விஷாந்த தலை­மை­யி­லான சிறப்புக் குழு­வினர் ஆரம்­பித்­துள்­ளனர்.

இத­னி­டையே கண்­டியின் பல பகு­தி­க­ளிலும் பதி­வான வன்­மு­றை­களில் ஈடு­பட்ட மேலும் 71 பேரை கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் பிரி­வுக்கு உட்­பட்ட 7 பொலிஸ் நிலை­யங்­களின் அதி­கா­ரிகள் இணைந்து இது­வரைக் கைது செய்­துள்­ளனர். இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் ஊர­டங்கு உத்­த­ரவை மீறி நட­மா­டிய நால்வர் அடங்­கு­வ­தா­கவும் பொலிஸார் அறி­வித்­தனர்.

நேற்று பொலிஸ் தலை­மை­ய­கத்தில் இடம்­பெற்ற விசேட ஊட­க­வி­ய­லா­ளர்கள் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யிட்ட பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர இந்த விவ­காரம் தொடர்பில் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது,
‘கண்டி மாவட்டம் எங்கும் கடந்த 04 ஆம் திகதி முதல் நேற்று 8 ஆம் திகதி காலை 6.00 மணி வரை பதி­வான வன்­முறைச் சம்­ப­வங்கள் தொடர்பில் பொலிஸார் சிறப்பு விசா­ர­ணை­களை நடத்­து­கின்­றனர்.

குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விசா­ர­ணை­க­ளுக்கு மேல­தி­க­மாக மூன்று பிரதிப் பொலிஸ் மா அதி­பர்­களின் கீழ் தனி­யான விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன. இந் நிலையில் இது­வரை இந்த வன்­மு­றைகள் தொடர்பில் நாம் 71 பேரை கைது செய்து செய்­துள்ளோம்.

அத்­துடன் இந்த வன்­மு­றை­களை தூண்­டிய பிர­தான சந்­தேக நப­ரான வித்­தான பத்­தி­ர­ன­லாகே அமித் ஜீவன் வீர­சிங்க என்­ப­வ­ரையும் அவ­ரது சகா­வான நஸ்­னம்­பட்­டி­யகே சுரேந்ர சுர­வீர என்­ப­வ­ரையும் பொலிஸ் மா அதி­பரின் உத்­த­ர­வுக்கு அமைய நேற்று கண்­டிக்கு சென்ற பயங்­க­ர­வாத புல­ன­யவுப் பிரிவின் பிர­தானி தலை­மை­யி­லான குழு­வினர் பூஜா­பிட்­டிய மற்றும் திகன பகு­தி­களில் வைத்து கைது செய்­தனர்.

வன்­மு­றைகள் தொடர்பில் கைதான 71 பேரில், கண்டி பொலி­ஸாரால் 8 பேரும், தெல்­தெ­னிய பொலி­ஸாரால் 30 பேரும், மெனிக்­ஹின்ன பொலி­ஸாரால் 7 பேரும் கட்­டு­கஸ்­தோட்டை பொலி­ஸாரால் 6 பேரும், வத்­தே­கம பொலி­ஸாரால் 6 பேரும், தல­வத்­து­கொட பொலி­ஸாரால் 13 பேரும் பல்­லே­கலை பொலி­ஸாரால் ஒரு­வரும் கைது செய்­யப்­பட்­டனர். இவர்கள் அனை­வரும் அவ்­வந்த பிரி­வு­களின் நீதிவான் முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.

இந்த வன்­மு­றை­களை பிர­தா­ன­மாக திட்­ட­மிட்டு, சதி செய்து, இன­வா­தத்தை தூண்டி, சமூக வலைத்­த­ளங்கள் ஊடாக வதந்­தி­களை பரப்பி வன்­மு­றை­களை வழி நடாத்­திய அமித் வீர­சிங்க உள்­ளிட்ட 10 பேரி­டமும் தொடர்ச்­சி­யாக விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன. அவர்­க­ளது சதி மற்றும் பின்­னணி குறித்தும் விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன.

தற்­போது வரை­யி­லான விசா­ர­ணை­களில் அர­சி­யல்­வா­தி­களின் தொடர்­பு­கு­றித்து வெளிப்­ப­டுத்­தப்­ப­டாத போதும், அவ்­வா­றான தொடர்­புகள் இருப்­பது மேல­திக விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­மானால் நிச்­சயம் அதனை நாம் இதே போல் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பை வைத்து வெளிப்­ப­டுத்­துவோம்.

அதற்கு ஒரு போதும் பின்­வாங்­க­மாட்டோம். கைதா­கி­யுள்ள சதி­கா­ரர்கள் 10 பேர் தொடர்­பி­லு­மான விரி­வான விசா­ர­ணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது முன்னைய செயற்பாடுகள் தொடர்பிலும், அவசரகால சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாகவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கண்டியின் பாதுகாப்பை தற்போது நாம் உறுதி செய்துள்ளோம். யாரும் பயப்படத் தேவையில்லை. வீண் அச்சம் வேண்டாம். எம் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். முக்கிய சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்ட 10 பேருக்கு மேலதிகமாக அவர்களுடன் இணைந்து சதித் திட்டம் தீட்டி வன்முறைகளை வழிநடத்திய ஏனையோர் தொடர்பிலும் அவதானம் செலுத்தியுள்ளோம். என்றார்.

(Visited 116 times, 1 visits today)

Post Author: metro