வேறு பெண்களுடன் தொடர்பு என மனைவி புகார்; மொஹமத் ஷமியின் சம்பள ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் சபை நிறுத்தியது

இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபையின் வீரர்­க­ளுக்­கான சம்­பள ஒப்­பந்தப் பட்­டி­ய­லி­லி­ருந்து இந்­திய வேகப்­பந்­து­வீச்­சாளர் மொஹமத் ஷமியின் பெயர் நிறுத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

மொஹமத் ஷமிக்கு வேறு பெண்­க­ளுடன் சக­வாசம் இருப்­ப­தா­கவும் தன்னை அடித்து துன்­பு­றுத்­து­வ­தா­கவும் ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் செய்த புகாரை அடுத்தே அவ­ரது ஒப்­பந்தம் நிறுத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

இது சம்­பந்­த­மான விசா­ரணை முடி­வ­டைந்த பின்­னரே அவரை சம்­பள ஒப்­பந்­தத்தில் சேர்ப்­பது குறித்து முடிவு செய்­யப்­படும் என இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபையின் நிரு­வாகி ஒருவர் தெரி­வித்­துள்ளார்.
வரு­டாந்தம் 3 கோடி இந்­திய ரூபா சம்­பளம் வழங்­கப்­படும் வீரர்­க­ளுக்­கான பி தர ஒப்­பந்­தத்தில் ஷமியின் பெயர் சேர்க்­கப்­ப­ட­வி­ருந்­தது.

ஆனால் பொலி­ஸாரின் விசா­ரணை முடியும் வரை அதை நிறுத்­தி­வைக்க இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டு சபை தீர்­மா­னித்­தது. தனக்கு நேர்ந்த கதி குறித்து சமூக வலை­ய­மைப்பில் குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்த ஹசின் ஜஹான், அதன் பின்னர் பொலிஸ் நிலையம் சென்று முறை­யிட்­டுள்ளார்.

முக­மது ஷமி குறித்து அவ­ரது மனைவி ஹசின் ஜஹான் சமூக வலை­ய­மைப்பில் பல திடுக்­கிடும் தக­வல்­களை வெளி­யிட்டு பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி இருக்­கிறார். முக­மது ஷமிக்கு பல பெண்­க­ளுடன் தொடர்பு இருப்­ப­தாக கூறி இருக்கும் அவர் ஒரு சில பெண்­க­ளுடன் ஷமி நெருக்­க­மாக இருக்கும் புகைப்­ப­டங்­க­ளையும், அந்த பெண்­களின் தொலை­பேசி எண்­க­ளையும் வெளி­யிட்டு இருக்­கிறார். மேலும் ஒன்-­லைனில் முக­மது ஷமி பெண்­க­ளுடன் காதல் ரசம் சொட்டும் வகையில் உரை­யா­டிய பதி­வு­களின் ஆதா­ரத்­தையும் அந்த பதிவில் அம்­ப­லப்­ப­டுத்தி உள்ளார்.

எனினும் இந்த செய்தி முற்­றிலும் தவ­றா­னது என தரம்­சா­லாவில் டியோடார் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் விளை­யா­டி­வரும் மொஹமத் ஷமி தனது டுவிட்­டரில் குறிப்­பிட்­டுள்ளார்.

தனது நற்­பெ­ய­ருக்கு களங்கம் ஏற்­ப­டுத்­தவும் தனது கிரிக்கெட் ஆற்­றலை மழுங்­க­டிக்­கவும் செய்­யப்­படும் திட்­ட­மி­டப்­பட்ட சதி இது­வென அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

எவ்­வா­றா­யினும் ஷமி மீதான குற்­றச்­சாட்டு குறித்து தீர்ப்­பி­டாத இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டு சபை, முறைப்­பாடு மீதான முடிவு கிடைக்­கும்­வரை அவ­ரது பெயரை சம்­பள ஒப்­பந்­தத்தில் இணைப்­பதை நிறுத்­தி­யுள்­ளது.

‘‘சாதா­ர­ண­மாக ஷமி மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்டு தனிப்­பட்ட விடயம் எனவும் ஒப்­பந்த விடயம் தொழில்சார் விடயம் எனவும் அதைப் பொருட்­படுத்த­ வேண்­டி­ய­தில்லை என சிலர் கரு­தலாம்.

ஆனால் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டி­ருக்­கும்­போது எவ்வாறு சம்பளம் வழங்க முடியும் என இன்னும் சிலர் கேட்கலாம். அதனால் தான் விசாரணை முடியும்வரை அவரது ஒப்பந்தத்தை நிறுத்திவைத்துள்ளோம்’’ என இந்திய கிரிக்கெட் சபையை நிருவகிக்கும் குழுவின் தலைவர் விநோத் ராய் தெரிவித்தார்.

(Visited 101 times, 1 visits today)

Post Author: metro