தவறான நோயாளிக்கு மூளையில் சத்திரசிகிச்சை செய்த மருத்துவர்

நோயாளி ஒரு­வ­ரின் மூளையில் சத்­தி­ர­சி­கிச்சை செய்­வ­தற்குச் சென்ற நபர் தவ­று­த­லாக மற்­றொரு நோயா­ளி யின் மூளையில் சத்­தி­ர­சி­கிச்சை செய்த சம்­ப­வம் கென்­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

தலை­நகர் நைரோ­பி­யி­லுள்ள கென்ய தேசிய வைத்­தி­ய­சா­லையில் பணி­யாற்­றிய நரம்­பியல் மருத்­துவர் ஒருவர் இவ்­வாறு மற்­றொ­ரு­வ­ருக்கு சத்­தி­ர­சி­கிச்சை செய்­துள்­ள­தாக மேற்­படி வைத்­தி­ய­சாலை கடந்த வார இறு­தியில் அறிக்­கை­யொன்றில் தெரி­வித்­தது.

தவ­றான நோயாளி ஒரு­வரின் மண்­டை­யோட்டைத் திறந்து இவ்­வாறு மூளையில் சத்­தி­ர­சி­கிச்சை செய்­யப்­பட்­டமை தொடர்­பாக சமூக வலைத்­த­ளங்­களில் கடு­மை­யான விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டன.

இதை­ய­டுத்து மேற்­படி மருத்­து­வ­ரையும் தாதிகள் இருவர் உட்­பட நால்­வரை வைத்­தி­ய­சாலை நிர்­வாகம் சேவை­யி­லி­ருந்து இடை நிறுத்­தி­யது. வைத்­திய சாலையின் பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரியும் அந்­நாட்டு சுகா­தார அமைச்­சினால் இடை­நி­றுத்­தப்­பட்டார்.

கென்ய மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சமுவெல் ஒரோகா


இத்­தீர்­மா­னத்­துக்கு வைத்­தி­ய­சா­லை யின் மருத்­து­வர்­களும் ஏனைய உத்­தி­யோ­கத்­தர்­களும் எதிர்ப்புத் தெரி­வித்­தனர்.

இந்­நி­லையில், இது தொடர்­பான விசா­ர­ணையை கென்ய மருத்துவ அதிகாரிகளின் சங்கத்திடம் ஒப்படைத் துள்ளதுடன், இடைநிறுத்தல் கடிதங் களை வைத்தியசாலை நிர்வாகம் வாபஸ் பெற்றுள்ளது.

(Visited 53 times, 1 visits today)

Post Author: metro