நாவலப்பிட்டியில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கூறி வீதியில் பாய் போட்டு படுத்த எம்.பி ஆனந்த அளுத்கமகே

(கம்­பளை நிருபர்,க.கிஷாந்தன்)

நாவ­லப்­பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரியை உட­ன­டி­யாக இடம் மாற்­றக்­கோரி கண்டி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பினர் ஆனந்த அளுத்­க­மகே கம்­பளை நாவ­லப்­பிட்­டிய பிர­தான வீதியில் நாவ­லப்­பிட்டி பொலிஸ் நிலை­யத்­துக்கு முன்­பாக நடு வீதியில் பாய் போட்டு படுத்துக் கொண்டு சத்தியாக்கிரகம் மேற்­கொண்டார்.


சம்­ப­வ­தி­ன­மான நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை காலை 5.30 மணி­முதல் மதியம் 2.10 மணி­வரை அவர் முன்­னெ­டுத்த இந்தச் சத்­தி­யா­கி­ர­கத்­தினால் ஹட்டன் – கினி­கஸ்­ஹேன உட்­பட பிர­தான நக­ரங்­க­ளுக்­கான போக்­கு­வ­ரத்­துக்கு இடை­யூறு ஏற்­பட்­ட­தை­யடுத்து பொலிஸார் மாற்று வழி­யாக வாக­னங்கள் செல்ல ஏற்­பா­டுகள் செய்­தி­ருந்­தனர்.

இது தொடர்பாக நாடா­ளு­மன்ற உறுப்­பினர் ஆனந்த அளுத்­க­மகே கருத்து தெரி­விக்­கையில், நாவ­லப்­பிட்­டிய பிர­தே­சத்தில் சட்டம், ஒழுங்கு சீர்­கெட்­டுள்­ள­தா­கவும் அதனை சீர்­செய்யும் நோக்­கு­ட­னேயே தாம் இந்த சத்­தி­யாக்­கி­ர­கத்தை மேற்­கொள்­வ­தா­கவும் குறிப்­பிட்டார்.


இச்­சம்­பவம் தொடர்­பாக நாவலப்­பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்­ப­திகாரி ஆனந்த ராஜபக் ஷவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த நாடா­ளு­மன்ற உறுப்­பினர் சம்­ப­வ­தி­னத்­துக்கு முதல் நாள் இரவு 11.30 மணி­ய­ளவில் தம்­மிடம் வந்து எரி­பொருள் பெற்றுத் தரு­மாறு கேட்­ட­தா­கவும் அதனை பெற்­றுக்­கொ­டுக்க தாம­த­மா­ன­தை­ய­டுத்து வெளி­யே­றியே இவ்­வாறு சத்­தி­யா­க்கி­ரகம் மேற்­கொண்­டா­ரெ­னவும் தெரி­வித்தார்.

இந்த நிலையில், கண்­டியில் இடம்­பெற்ற அசம்­பா­வி­தங்­களை பார்­வை­யிட அங்கு சென்­றி­ருந்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­வுடன் வருகை தந்­தி­ருந்த நீதி மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்­சித் ­மத்­தும பண்­டார மேற்­படி விட­யத்தை கேள்­வி­யுற்று ஆனந்த அளுத்­க­ம­கே­யிடம் தொலை­பேசி ஊடாக தொடர்பு­ கொண்டு பேசியபோதும் அவர் அதற்கும் இணக்கம் தெரி­விக்­க­வில்லை. இறு­தி­யாக மத்­திய மாகாண சபை உறுப்­பினர் முத்­தலிப் ஹாஜியார் அங்கு சென்று இரு தரப்­புடன் பேசி பிரச்­சி­னையை முடி­வுக்கு கொண்டு வந்தார்.


மேலும் இச்­சம்­பவம் தொடர்­பாக நாவ­லப்­பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி கூறுகையில், ஆனந்த அளுத்கமகேவிடமிருந்து இதுவரையில் எவ்விதமான முறைப்பாடுகளும் கிடைக்கவில்லையெனவும் அப்படி கிடைக்கும் பட்சத்தில் உயர் அதிகாரிகள் அது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வர் எனவும் குறிப்பிட்டார்.

(Visited 41 times, 1 visits today)

Post Author: metro