வடக்கின் சமரில் யாழ். மத்திய கல்லூரி அபார வெற்றி!

(நெவில் அன்­தனி)

யாழ். செய்ன்ற் ஜோன்ஸ் அணிக்கும் யாழ். மத்­திய அணிக்கும் இடையில் நடை­பெற்ற விறு­வி­றுப்­பான 112ஆவது வடக்கின் சமரில் மத்­திய கல்­லூரி ஒரு விக்­கெட்­டினால் அபார வெற்­றி­யீட்­டி­யது.


109 ஓட்­டங்­களை வெற்றி இலக்­காகக் கொண்டு மூன்றாம் நாளான நேற்­று­முன்­தினம் தேநீர் இடை­வே­ளைக்கு சற்­று­முன்னர் தனது இரண்­டா­வது இன்­னிங்ஸை ஆரம்­பித்த யாழ். மத்­திய கல்­லூரி அணி தடு­மாற்­றத்­துக்கு மத்­தியில் 2.3 ஓவர்கள் மீத­மி­ருக்க 9 விக்­கெட்­களை இழந்து 110 ஓட்­டங்­களைப் பெற்று வெற்­றியை ருசித்­தது. மத்­திய அணி வீரர் துஷாந்தன் வெற்றி ஓட்­டங்­களை பவுண்ட்றி மூலம் பெற்­றுக்­கொ­டுத்தார்.

கடந்த வருட ஹீரோ கன­க­ரட்னம் கபில்ராஜ் துடுப்­பாட்­டத்­திலும் பந்­து­வீச்­சிலும் அபார ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்தி செய்ன்ற் ஜோன்ஸ் அணிக்கு நம்­பிக்கை ஊட்­டினார். ஆனால் கடைசிக் கட்­டத்தில் அவ­ரது தனி­நபர் போராட்டம் வீண் போக யாழ். மத்­திய கல்­லூரி வடக்கின் சமரில் தனது 28ஆவது வெற்­றியைப் பதிவு செய்­தது. எனினும் இத் தொடரில் செய்ன்ற் ஜோன்ஸ் 36 வெற்­றி­க­ளுடன் தொடர்ந்தும் முன்­னி­லையில் இருக்­கின்­றது.

மத்­திய கல்­லூரி மைதா­னத்தில் வியா­ழ­னன்று ஆரம்­ப­மான இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தாட அழைக்­கப்­பட்ட செய்ன்ற் ஜோன்ஸ் அணி, முதல் இன்­னிங்ஸில் சகல விக்­கெட்­க­ளையும் இழந்து 217 ஓட்­டங்­களைப் பெற்­றது.

பதி­ல­ளித்து முதல் இன்­னிங்ஸில் துடுப்­பெ­டுத்­தா­டிய மத்­திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்­கெட்டை இழந்து 33 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­தது. இரண்டாம் நாள் ஆட்­டத்தைத் தொடர்ந்த மத்­திய அணி திற­மையை வெளிப்­ப­டுத்தி 333 ஓட்­டங்­களைக் குவித்­தது.  இதனைத் தொட­ர்ந்து இரண்­டா­வது இன்­னிங்ஸில் துடுப்­பெ­டுத்­தா­டிய செய்ன்ற் ஜோன்ஸ் இரண்டாம் நாள் ஆட்­ட­நேர முடிவில் 8 ஓட்­டங்­க­ளுக்கு 4 விக்­கெட்­களை இழந்து பெரும் தடு­மாற்­றத்தை எதிர்­கொண்­டது.

ஆனால் கடைசி நாளன்று 6ஆம் இலக்­கத்­தி­லி­ருந்து 10ஆம் இலக்­கம்­வ­ரை­யான துடுப்­பாட்ட வீரர்­களின் விவே­கமும் துணிச்­சலும் கலந்த துடுப்­பாட்­டங்­களின் உத­வி­யுடன் 219 ஓட்­டங்­களைப் பெற்­றது.

இதனைத் தொடர்ந்து 39 ஓவர்­களில் 109 ஓட்­டங்­களை வெற்றி இலக்­காகக் கொண்டு இரண்­டா­வது இன்­னிங்ஸில் துடுப்­பெ­டுத்­தாடி யாழ். மத்­திய அணி 36.3 ஓவர்­களில் வெற்றி இலக்கை கடந்­தது.

எண்­ணிக்கை சுருக்கம்

செய்ன்ற் ஜோன்ஸ் 1ஆவது இன்: சக­லரும் ஆட்­ட­மி­ழந்து 217 (தேவதாஸ் ஷெரோபன் 65, எல்ஷான் டினுஷன் 32, தெய்­வேந்­திரன் டினோஷன் 28, நாகேந்­தி­ர­ராஜா சௌமியன் 22, செல்­வ­கு­ணாளன் ஜோயல் பிரவீன் 21, விஜ­யகாந்த் வியாஸ்காந்த் 58–4 விக்., சிவ­லிங்கம் தசோபன் 34–3 விக்.,)

மத்­திய அணி 1ஆவது இன்: சக­லரும் ஆட்­ட­மி­ழந்து 333 (அன்­த­னி­டயஸ் ஜெய­தரன் 75, ராஜ­ரட்னம்
ராஜ்கி­ளின்டன் 53, செல்­வ­ராஜா மதுஷன் 52, தசோபன் 49, சுதா­கரன் நிஷான் 30, கம­ல­ராசா இய­ல­ரசன் 22, கபில்ராஜ் 96–5 விக்.), மேர்பின் அபினாஷ் 72–2 விக்.)

செய்ன்ற் ஜோன்ஸ் 2ஆவது இன்: சக­லரும் ஆட்­ட­மி­ழந்து 219 (கபில்ராஜ் 56, வசந்தன் யதுஷன் 50, ஷேரோபன் 46, டினோஷன் 33, சூரி­ய­குமார் சுஜான் 49–4 விக்., மதுஷன் 30–3 விக்.)

மத்திய அணி 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 109) 110–9 விக். (மதுஷன் 53, சுதர்ஷன் துஷாந்தன் 14 ஆ.இ., கபில்ராஜ் 45–5 விக்.) ஆட்டநாயகன்: செல்வராஜா மதுஷன்.

(Visited 32 times, 1 visits today)

Post Author: metro