பேஸ்புக்கில் அறிமுகமான நபர் பெண்ணின் நிர்வாணப் படங்களை இணையத்தில் பதிவேற்றப் போவதாக அச்சுறுத்தியதால் தாக்கப்பட்டார் – வென்னப்புவயில் சம்பவம், தம்பதி கைது

(மது­ரங்­குளி நிருபர், எஸ்.கே)

பேஸ்­புக்கில் அறி­மு­க­மான பெண் ஒரு­வ­ருடன் நட்பை ஏற்­ப­டுத்தி, அவ­ரது நிர்வாணப் படங்­களை இணை­யத்தில் பதி­வேற்­று­வ­தாக அச்­சு­றுத்­திய நபர் ஒரு­வரை வீட்­டுக்கு வர­வ­ழைத்து தாக்­கி­ய­தாக கூறப்­படும் தம்­ப­தியை கைது செய்­துள்­ள­தாக வென்­னப்­புவ பொலிஸார் தெரி­வித்­தனர். வென்­னப்­புவ பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட லுணு­வில சிரி­கம்­பல பிர­தே­சத்தைச் சேர்ந்த தம்­ப­தியே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளாவர்.

குறித்த பெண் முக­நூலில் தம்­புள்ள பிர­தே­சத்தைச் சேர்ந்த இளைஞர் ஒரு­வ­ருடன் நட்பை ஏற்­ப­டுத்தி சில காலம் பழகி வந்­துள்­ள­துடன் பின்னர் அப்பெண் அந்த இளை­ஞரை தனது வீட்­டுக்கு வர­வ­ழைத்து கள்ளத் தொடர்பில் ஈடு­பட்டு வந்­தமை விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரிய வந்­தி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இவ்­வா­றான தொடர்பை தனது போனில் படம் பிடித்துக்கொண்­டுள்ள குறித்த இளைஞர், அதனை இணை­யத்தில் பதி­வேற்­று­வ­தாக அப்­பெண்ணை அச்­சு­றுத்­தி­யி­ருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இந்­நி­லையில் இவ்­வாறு அப்­பெண்­ணுக்கும் இளை­ஞ­ருக்கும் இடை­யி­லான கள்ளத் தொடர்பு அப்­பெண்ணின் கண­வ­ருக்கு தெரியவந்­ததால் தனது மனை­வியின் ஊடாக குறித்த இளை­ஞரை தமது வீட்­டுக்கு வர­வ­ழைத்த பெண்ணின் கணவர், அந்த இளை­ஞரை வீட்டு அறையில் அடைத்து வைத்து அவ­ரது கைத்­தொ­லைபே­சியில் பதி­வா­கி­யி­ருந்த நிர்­வாணப் படங்­களை அழித்து விட்­ட­பின்னர் அவ்­வி­ளை­ஞரைத் தாக்­கி­யுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். இத்­தாக்­கு­தலில் காய­ம­டைந்த இளைஞர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

இளை­ஞரைத் தாக்­கிய நபரும் அதற்கு உடந்­தை­யாக இருந்த அவ­ரது மனை­வியும் கைது செய்யப்ப ட்டுள்ளதோடு, அவர்களை மாரவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள வென்னப்புவ பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 104 times, 1 visits today)

Post Author: metro