துரி­த­மாக விரிவு படுத்­தப்­பட்டு வரும் சியெட் களனி கூட்டு முயற்­சியின் புதிய முகா­மைத்­துவப் பணிப்­பா­ள­ராக தலை­மை­யேற்று வழி­ந­டத்­த­வுள்ள ரவி தத்­லானி

சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறு­வனம் 2018 மார்ச் 1 முதல் அமு­லுக்கு வரும் வகையில் அதன் புதிய முகா­மை­த்துவப் பணிப்­பா­ள­ராக ரவி தத்­லா­னியை நிய­மனம் செய்­துள்­ள­தாக அறி­வித்­துள்­ளது.

தற்­போது சியெட் கள­னியின் விற்­பனை, சந்­தைப்­ப­டுத்தல் மற்றும் ஏற்­று­மதிப் பிரிவின் உப­த­லை­வ­ராக உள்ள ரவி தத்­லானி ஏற்­க­னவே இந்த நிறு­வ­னத்தில் 11 வரு­டங்கள் பணி­யாற்­றி­யுள்ளார். இலங்­கையில் தனது கட­மை­களை முடித்துக் கொண்டு இந்­தி­யாவின் சியெட் நிறு­வ­னத்­துக்கு திரும்பிச் செல்லும் விஜேய் கம்­பீரின் இடத்­துக்கே ரவி தத்­லானி நிய­மிக்கப் பட்­டுள்ளார்.

சியெட் களனி ஹோல்­டிங்ஸின் முத­லா­வது இலங்கை முகா­மைத்­துவப் பணிப்­பா­ள­ராக பத­வி­யேற்­க­வுள்ள ரவி தத்­லா­னியின் நிய­மனம் இலங்கை – இந்­திய கூட்டு முயற்சி டயர் உற்­பத்­தி­யா­ளர்­க­ளான சியெட் களனி ஹோல்டிங்ஸ் மிகத் துரி­த­மான விரி­வாக்­கங்­களை மேற்­கொண்டு உற்­பத்தி ஆற்­றலை விரி­வு­ப­டுத்தி வரும் கால­கட்­டத்தில் இடம் பெறு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இவ்­வா­ண்டு ஜன­வ­ரியில் இலங்­கையில் அதன் உற்­பத்திச் செயற்­பா­டு­களில் மேலும் மூன்று பில்­லியன் ரூபாய்­களை முத­லீடு செய்­ய­வுள்­ள­தாக கம்­பனி அறி­வித்­துள்­ளது.

“ரவி தத்­லானி ஒட்டு மொத்­த­மாக 25 வருட பல்­துறை அனு­ப­வத்தைக் கொண்­டவர். கடந்த பத்து வரு­டங்­களில் அவர் டயர் உற்­பத்தி பற்றி பல்­வேறு நுணுக்­கங்­க­ளையும் கற்றுத் தேர்ந்­துள்ளார்” என்று சியெட் களனி ஹோல்­டிங்ஸின் தலைவர் சானக்க டி சில்வா தெரி­வித்தார் ‘இந்தச் சந்­தர்ப்­பத்தில் கம்­பனி புதிய உற்­பத்­தி­களை அறி­முகம் செய்து வரு­கின்ற நிலை­யிலும், புதிய சந்தை வாய்ப்­புக்­களை நாடி நிற்­கின்ற நிலை­யிலும் கம்­ப­னியின் செயற்­பா­டு­களை தொடர்ந்து முன்­னெ­டுத்துச் செல்ல மிகவும் பொருத்­த­மான ஒரு நபர் அவ­ரே­யாவார்’ என்று அவர் மேலும் கூறினார்.

தொழில் ரீதி­யாக ஒரு சந்­தைப்­ப­டுத்தல் நிபு­ண­ரான ரவி தத்­லானி 2007 இல் சியெட் கள­னியில் சந்­தைப்­ப­டுத்தல் மற்றும் விற்­பனைப் பிரிவின் பொது முகா­மை­யா­ள­ராக இணைந்து கொண்டார். பின்னர் சந்தைப் படுத்தல் மற்றும் ஏற்­று­மதி பிரிவின் உப தலை­வ­ரானார். உயர் மட்­டத்தில் உள்ள கொள்கை வகுப்­பா­ளர்­க­ளுடன் அவர் தனது பதவி நிலையில் இணைந்து செயற்­பட்­டுள்ளார். உள்ளூர் உற்­பத்தித் துறையை பாது­காத்தல் மற்றும் மேம்­ப­டுத்தல் ஆகிய விட­யங்­களில் பங்­க­ளிப்­புக்­களை வழங்­கு­வ­தாக இந்தச் செயற்­பா­டுகள் அமைந்­தி­ருந்­தன.

இலங்கை றப்பர் உற்­பத்தித் துறையின் இணை அங்­க­மான இலங்­கையின் றப்பர் பொருள் உற்­பத்­தி­யா­ளர்கள் மற்றும் ஏற்­று­ம­தி­யா­ளர்கள் சங்­கத்தின் (SLAMERP)பதில் தலை­வரா­கவும் பணி­யாற்­றி­யுள்ள அவர் நாட்டின் றப்பர் தொழில்­து­றையின் அபி­வி­ருத்தி மற்றும் நிலைத்­தன்மை என்­ப­ன­வற்­றுக்­காக பெரும் பங்­க­ளிப்­புக்­க­ளையும் நல்­கி­யுள்ளார்.

சியெட் களனி ஹோல்­டிங்ஸின் கம்­ப­னிக்­கான சர்­வ­தேச சந்­தையை அபி­வி­ருத்தி செய்யும் அதே­வேளை, ரவி தத்­லானி உள்ளூர் டயர் உற்­பத்­தியின் மேம்­பாட்­டுக்­காக மூலோ­பாயத் திட்­டங்­களை வகுத்து அமுல் செய்­வதில் முக்­கிய பங்­காற்­றி­யுள்ளார். இன்று இந்த நிறு­வனம் அதன் உற்­பத்­தியில் மூன்றில் ஒரு பங்கை 15 தெற்­கா­சிய, மத்­திய கிழக்கு மற்றும் தூர கிழக்கு நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­கின்­றது.

கொழும்பு றோயல் கல்­லூ­ரியின் பழைய மாண­வ­ரான ரவி தத்­லானி தனது ஆரம்ப கட்ட சந்­தைப்­ப­டுத்தல் கல்­வியை பிரிட்­டனின் பட்­டய சந்­தைப்­ப­டுத்தல் நிறு­வ­னத்தில் (CIM) 1989 இல் பூர்த்தி செய்தார்.

அதனைத் தொடர்ந்து சிங்­கப்பூர் பல்­க­லைக்­க­ழகம், இந்­திய முகா­மைத்­துவ நிலையம், இந்­திய வர்த்­தகக் கல்­லூரி, விஞ்­ஞா­னிகள் மற்றும் பொறியியலாளர்களுக்கான ஜப்பானிய சங்கம் என்பனவற்றில் பல்வேறு முகாமைத்துவ மற்றும் தலைமைத்துவ அபிவிருத்தி நெறிகளைப் பூர்த்தி செய்துள்ளார் சியெட்டில் இணைவதற்கு முன் அவர் எஸ்லோன் மற்றும் ICL மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணிப்பாளர் பதவி, இலங்கை பெப்சி கோலாவில் பணிப்பாளர் பதவி ஆகியவற்றையும் வகித்துள்ளார்.

(Visited 15 times, 1 visits today)

Post Author: metro