பேச்சுவார்த்தை இடம்பெறும் வரை ஏவுகணை சோதனைகளை நிறுத்திவைக்க வட கொரியா இணக்கம் : டொனால்ட் ட்ரம்ப்

உத்தேச பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெறும் வரை ஏவு­கணைப் பரி­சோ­தனை களை நடத்­து­வ­தில்லை என வட கொரியா ஒப்­புக்­கொண்­டுள்­ள­தாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இரு நாட்டுத் தலை­வர்­க­ளுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்பு இடம் பெ­றக்­கூ­டிய சாத்­தியம் இருப்­ப­தாக கடந்த வியா­ழக்­கி­ழமை தென் கொரிய அதி­கா­ரிகள் கூறி­யதைத் தொடர்ந்து அமெ­ரிக்க ஜனா­தி­பதி இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

இது பற்றி அவர் தனது டுவிட்டர் பக்­கத்தில் பதி­வி­டும்­போது, வட கொரியா கடந்த வருடம் நவம்­ப­ரி­லி­ருந்து ஏவு­கணைப் பரி­சோ­தனைகள் எதையும் நடத்­த­வில்லை.

இனி ஏவு­கணைப் பரி­சோ­த­னை­களை நடத்­து­வ­தில்லை என அவர்கள் எம்­முடன் நடத்­திய பேச்­சு­வார்த்­தை­களில் உறு­திப்­ப­டுத்­தினர். அந்த உறு­திப்­பாட்டை அவர்கள் காப்­பாற்­று­வார்கள் என நம்­பு­கிறேன் எனக் குறிப்­பிட்­டுள்ளார்.

உத்­தேச பேச்­சு­வார்த்­தை­க­ளுக்கு ஜப்­பானும் சீனாவும் ஆத­ர­வ­ளிப்­ப­தா­கவும் வட கொரியப் பிரச்­சி­னையை இரா­ணுவ வழி­யி­லன்றி பேச்­சு­வார்த்தை மூல­மாகத் தீர்த்­து­வைக்க அமெ­ரிக்கா எடுக்கும் முயற்­சி­களை சீன ஜனா­தி­பதி பாராட்­டு­வ­தா­கவும் ட்ரம்ப் மேலும் குறிப்­பிட்­டுள்ளார்.

முன்­ன­தாக வட கொரியா தனது ஆயுதத் திட்­டத்தைக் கைவி­டு­வ­தற்­கான காத்­தி­ர­மான நட­வ­டிக்­கை­க­களை எடுக்கும் வரை அந்­நாட்­டுடன் பேச்சு வார்த்தை நடத்­தப்­பட மாட்­டாது என வெள்ளை மாளிகைப் பேச்­சாளர் சாரா சேன்டர்ஸ் கூறி­யி­ருந்தார்.
இந்­த­நி­லையில் வட கொரிய ஜனா­தி­ப­தி­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்தத் தயா­ராக இருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். பேச்சுவார்த்தைக்கான திகதியும் இடமும் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.

(Visited 29 times, 1 visits today)

Post Author: metro