நேபாள விமான விபத்தில் 50 பேர் பலி: 23 பேர் உயிருடன் மீட்பு

நேபாளத் தலை­நகர் காத்­மண்­டு­வி­லுள்ள த்ரிபுவான் சர்­வ­தேச விமான நிலை­யத்தில் இன்று பய­ணிகள் விமானம் ஒன்று விபத்­துக்­குள்­ளா­னதில் சுமார் 50 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். இதில் 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விமா­னத்தில் 67 பய­ணி­களும் 4 ஊழி­யர்­களும் பய­ணித்­த­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.


டாக்­கா­வி­லி­ருந்து வந்த அமெ­ரிக்க –  பங்­களா எயார்­லைன்­ஸினால் இயக்­கப்­படும் பிளைட் இல: BS – 211 என்ற இந்த விமானம், தரை­யி­றங்க முற்­பட்­ட­போது ஓடு பாதையில் விபத்­துக்­குள்­ளா­கி­ய­தாக விமான நிலையப் பேச்­சாளர் பிரென்ந்ரா பிரசாத் ஷ்ரெஸ்தா தெரி­வித்­துள்ளார்.

இந்த விபத்­தினால் காத்­மண்டு விமான நிலையம் மூடப்­பட்­டுள்­ள­தோடு, அங்கு வர­வி­ருந்த அனைத்து விமா­னங்­களும் வேறு இடங்­க­ளுக்கு திருப்­பப்­பட்டுள்ளதாகப் பேச்­சாளர் கூறி­யுள்ளார்.


இதில் 10 பேர் குறித்த தகவல் எதுவும் இல்லாத நிலையில், 23 பேர் உயிருடன் மீட்­கப்­பட்­டுள்­ள­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். எவ்வாறாயினும், இதில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரி வித்துள்ளதாக ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

S2 – AGU ரக, இல: Bombardier Dash 8 Q400 என்ற விமா­னமே விபத்­துக்­குள்­ளா­கி­ய­தாக அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­து. காத்­மண்டு விமான நிலை­யத்தின் ஓடு­பாதை புகை மண்­ட­ல­மாகக் காணப்­ப­டு­ம் புகைப்­ப­டங்கள் சமூக வலைத்­த­ளங்களில் வெளி­யா­கி­யுள்­ளன. மீட்புப் பணியில் தீய­ணைப்புப் படை­யி­ன­ருடன் இரா­ணு­வத்­தி­னரும் பொலி­ஸாரும் ஈடு­பட்­டுள்­ளனர். விபத்தில் உயி­ரி­ழந்­த­வர்­களின் சட­லங்­களும் காய­ம­டைந்­த­வர்­களும் விமா­னத்­தி­லி­ருந்து இழுத்­தெ­டுக்­கப்­ப­டு­வ­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

நேபா­ளத்தில் அண்­மைய காலத்தில் இவ்­வா­றான விமான விபத்­துக்கள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன.
1992ஆம் ஆண்டு பேங்கொக்கிலிருந்து வந்த பயணிகள் விமானம் ஒன்று காத்மண்டுவில் தரையிறங்க முற்பட்ட போது விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.

(Visited 42 times, 1 visits today)

Post Author: metro