சுதந்­திரக் கிண்ண மும்­முனை கிரிக்கெட் 2018: இந்­திய, இலங்கை அணி­க­ளுக்கு இன்று முக்­கிய போட்டி

(நெவில் அன்­தனி)

இலங்­கைக்கு சுதந்­திரம் கிடைத்து 70 வரு­டங்கள் பூர்த்­தி­யா­னதை முன்­னிட்டு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்­தினால் நடத்­தப்­பட்­டு­வரும் சுதந்­திரக் கிண்ண மும்­முனை கிரிக்கெட் தொடரின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்­ப­மா­கின்­றது.

முதலாம் கட்ட நிறைவில் பங்­க­ளாதேஷ், இந்­தியா, இலங்கை ஆகிய நாடுகள் தலா ஒரு வெற்­றியைப் பெற்­றுள்­ளதால் இரண்டாம் கட்டப் போட்­டிகள் மூன்று நாடு­க­ளுக்கும் முக்­கிய போட்­டி­க­ளாக மாறி­யுள்­ளன.

இந் நிலையில் இந்­தி­யாவும் இலங்­கையும் மோதும் இரண்டாம் கட்டப் போட்டி கெத்­தா­ராம ஆர். பிரே­ம­தாச அரங்கில் மின்­னொ­ளியில் இன்று இரவு நடை­பெ­ற­வுள்­ளது.

 

சுதந்­திரக் கிண்ணத் தொடரின் ஆரம்பப் போட்­டியில் இரண்டு அணி­களும் மோதிக்­கொண்­ட­போது 5 விக்­கெட்­களால் இலங்கை வெற்­றி­பெற்­றி­ருந்­தது.

சுமா­ரான மொத்த எண்­ணிக்­கைகள் பெறப்­பட்டஅப் போட்­டியில் இந்­தியா 20 ஓவர்­களில் 5 விக்­கெட்­களை இழந்து 174 ஓட்­டங்­க­ளையும் இலங்கை 5 விக்­கெட்­களை இழந்து 175 ஓட்­டங்­க­ளையும் பெற்­றன.

பங்­க­ளா­தே­ஷுக்கு எதி­ரான போட்­டியில் தோல்வி அடைந்­த­மைக்கு மோச­மான பந்­து­வீச்சே காரணம் எனவும் இன்று நடை­பெ­ற­வுள்ள போட்­டியில் பந்­து­வீச்­சா­ளர்கள் முழு அளவில் திற­மையை வெளிப்­ப­டுத்­து­வது அவ­சியம் எனவும் அணித் தலைவர் தினேஷ் சந்­திமால் தெரி­வித்தார்.

தினேஷ் சந்திமாலுக்குத் தடை

எவ்வாறாயினும்இ, லங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு இரண்டு சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷுக்கு எதிராக கடந்த சனிக்கிழம நடைபெற்ற சுதந்திரக் கிண்ண மும்முனை போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் வீசப்படவேண்டிய ஓவர்களை வீசி முடிக்கத் தவறியதால் அவர் சர்வதேச கிரிக்கெட் பேரவை விதிகளைக் கடுமையாக மீறினார் என்ற காரணத்துக்காக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ள பங்களாதேஷுக்கு எதிரான போட்டியிலும் சந்திமாலுக்கு விளையாட முடியாது.

இலங்கை அணிக்கு தினேஷ் சந்திமாலுக்குப் பதிலாக திசர பெரேரா தலைமை தாங்கவுள்ளார்.

இதே­வேளை, மூன்று அணி­களும் தலா ஒரு வெற்­றியை ஈட்­டி­யி­ருப்­பதால் சகல அணி­களும் இரண்டாம் கட்­டத்தில் முழுத் திற­மை­யுடன் விளை­யாட முயற்­சிக்கும் என்­பதால் இத் தொடர் சூடு­பி­டிக்கத் தொடங்­கி­யுள்­ள­தாக இந்­திய அணித் தலைவர் ரோஹித் ஷர்மா தெரி­வித்தார்.

இன்­றைய போட்­டியில் வெற்­றி­பெ­று­வது அவ­சியம் என்­பதால் கடு­மை­யாக போட்­டி­யி­ட­வுள்­ள­தாக அவர் கூறினார்.

இலங்கை: திசர பெரேரா  (அணித் தலைவர்), உப்புல் தரங்க, தனுஷ்க குண­தி­லக்க, குசல் மெண்டிஸ், தசுன் ஷானக்க, குசல் ஜனித் பெரேரா, , ஜீவன் மெண்டிஸ், சுரங்க லக்மால், இசுரு உதான, அக்­கில தனஞ்­சய, அமில அப்­போன்சோ, நுவன் பிரதீப், துஷ்­மன்த சமீர, தனஞ்­சய டி சில்வா.

இந்­தியா: ரோஹித் ஷர்மா (அணித் தலைவர்), ஷிக்கர் தவான் (உதவி அணித் தலைவர்), லோக்கேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, வொஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்த்ர சஹால், அக்சர் பட்டேல், விஜெய் ஷன்கர், ஷார்துல் தக்குர், ஜய்தேவ் உனத்காட், மொஹமத் சிராஜ், ரிஷாப் பான்ட்.

 

(Visited 24 times, 1 visits today)

Post Author: metro