மீண்டும் பொலிவூட் செல்லும் பிரபுதேவா

‘போக்­கிரி’ படத்தின் ரீ-மேக்­கான ‘ேவான்டட்’ (‘WANTED’) படத்தை பொலி­வூட்டில் இயக்­கினார் பிர­பு­தேவா. சல்­மான்கான் கதா­நா­ய­க­னாக நடிக்க, பிரபுதேவா ஹிந்­தியில் இயக்­கு­ந­ராக அறி­மு­க­மான இந்த படம் கொமர்­ஷி­ய­லாக வெற்­றி­ய­டைந்­தது. வான்டட் படத்தை தொடர்ந்து ‘ரௌடி ரத்தோர்’ படத்­தையும் இயக்­கினார்.

இது ‘சிறுத்தை’ படத்தின் ரீ-மேக். அதன் பிறகு இப்­போது தமிழ் சினி­மாவில் நடி­க­ராக படு பிசி­யாக இயங்கி வரு­கிறார் பிரபு தேவா. இதற்­கி­டையில் அஜித்­துக்கு ஒரு கதை சொன்னார். சிவா, வினோத் படங்­க­ளுக்குப் பிறகு உங்கள் கதையில் நடிக்­கிறேன் என்று அஜித் உறு­தி­ய­ளித்­துள்­ளாராம்.

எனவே, ஒரு சிறிய இடை­வெ­ளிக்கு பிறகு மீண்டும் பொலி­வூட்­டுக்கு சென்று ஹிந்தி படம் ஒன்றை இயக்கவுள்ளார். சல்­மான்கான் நடிப்பில் வெளி­யாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘தபாங்’ படத்தின் மூன்றாம் பாகத்­தையே பிரபுதேவா இயக்­கு­கிறார். சல்­மான்கான் ஹீரோ­வாக நடிக்க இருக்கும் இந்த படத்தில் சோனாக் ஷி சின்ஹா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.

(Visited 21 times, 1 visits today)

Post Author: metro