முன்னாள் விமானப்படை வீரரின் வீட்டில் விமானப் பாகங்கள் மீட்பு!

எம்.எப்.எம்.பஸீர்

பாணந்­துறை – அலு­போ­முல்ல பகு­தியில் வீடு ஒன்­றி­லி­ருந்து விமா­னங்­களின் பாகங்கள் பல­வற்றை பொலிஸார் நேற்று கைப்­பற்­றியுள்ளனர். பொலி­ஸா­ருக்கு கிடைத்த தக வல் ஒன்­றுக்கு அமை­வாக குறித்த வீட் டைச் சுற்­றி­வ­ளைத்த போது விமானப் பாகங்­களைக் கைப்­பற்­றி­ய­தா­கவும், விமா­னத்தின் என்ஜின் தவிர்ந்த பெரும்­பாலும் ஏனைய அனைத்து பாகங்­களும் அங்கு காணப்­பட்­ட­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்
­

எவ்­வா­றா­யினும் இந்த விமான பாகங்கள் அனைத்தும் பாவ­னையின் பின்னர் ஒதுக்­கப்­பட்ட விமா­னங்­களில் இருந்து அல்­லது பாகங்­க­ளாகச் சேக­ரிக்­கப்­பட்­டுள்­ளமை ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணை­களில் பொலி­ஸாரால் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

குறித்த வீட்டின் உரி­மை­யாளர் ஓய்­வு­பெற்ற விமா­னப்­படை வீரர் என்­பதும் அவர் சேவைக் காலத்தின் போது விமான நிறு­வ­னங்­களில் தொழில் நுட்­ப­வி­ய­லா­ள­ராக பணி­யாற்­றி­யுள்­ள­மையும் அப்­போது அகற்­றப்­பட்ட மேற்­படி விமான பாகங்­களை அவர் வீட்டில் சேக­ரித்­துள்­ள­மையும் பொலிஸ் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

கடந்த 18 வரு­டங்­க­ளாக இவ்­வாறு சேக­ரிக்­கப்­பட்ட விமான பாகங்­களை அவர் பயி­லுனர் விமா­னிகள் தொடர்பில் இடம்­பெறும் கருத்­த­ரங்­குகள், கல்வி நட­வ­டிக்­கை­களை இலக்­காக கொண்டு விற்­பனை செய்­துள்­ள­மையும் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

எவ்­வா­றா­யினும் இது தொடர்பில் எவரும் கைது செய்­யப்­ப­டாத நிலையில் பாவ­னையில் இருந்து அகற்­றப்­படும் விமான பாகங்­களை இவ்­வாறு வைத்­தி­ருக்க முடி­யுமா என கண்­ட­றிய முதலில் பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர். பாவனையில் இருந்து அகற்றப்படும் விமான பாகங்களை இவ்வாறு வைத்திருக்க முடியுமா என கண்டறிய முதலில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

(Visited 32 times, 1 visits today)

Post Author: metro