இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டல தாழமுக்கம் தென் பகுதியில் மையம் கொண்டதால் பலத்த காற்றுடன் மழை

இலங்­கையைச் சூழ­வுள்ள வளி­மண்­ட­லத்தில் ஏற்­பட்­டுள்ள தாழ­முக்கம் தற்­போது இலங்­கையின் தென் பகு­தியில் மையம் கொண்­டுள்­ள­தாக வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

இதுமேலும் வலு­வ­டை­யு­மென எதிர் ­பார்க்­கப்­ப­டு­வ­துடன் இலங்­கையின் மேற்கு மற்றும் வடமேற்கு திசை­யாக அராபிக் கடல்­ப­ரப்பை நோக்கி தாழ­முக்கம் நக­ரக்­கூ­டிய சாத்­தி­யக்­கூ­றுகள் காணப்­ப­டு­வ­தா­கவும் மேலும் தெரி­வித்­துள்­ளது.

இதன் கார­ண­மாக நாட்டின் பல பாகங்­க­ளிலும் மழை அல்­லது இடி­யுடன் கூடிய மழை­யு­ட­னான வானி­லையும் தொட­ரு­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

வட­மத்­திய மாகா­ணத்­திலும் காலி மற்றும் மாத்­தறை ஆகிய மாவட்­டங்­க­ளிலும் மணித்­தி­யா­லத்­துக்கு 45–50 கிலோ­மீற்றர் வரை­யான ஓர­ளவு பலத்த காற்று வீசக்­கூ­டு­மெ­னவும் தென், ஊவா மற்றும் கிழக்கு மாகா­ணங்­க­ளிலும் பொலன்­ன­றுவை மற்றும் மாத்­தளை மாவட்­டங்­களின் சில இடங்­க­ளிலும் 75–100 மி.மீ அள­வான ஓர­ளவு பலத்த மழை­வீழ்ச்சி எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தா­கவும் வானிலை அவ­தான நிலையம் தெரி­வித்­துள்­ளது.

கடும் மழையின் கார­ண­மாக பொலன்­ன­றுவை, பராக்­கி­ரம சமுத்­தி­ரத்தின் 10 வான்­க­த­வு­களில் 8 வான்­க­த­வுகள் திறக்­கப்­பட்­டுள்­ள­தாக நீர்ப்­பா­சன திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. இதனால் தமன்­க­டுவ மற்றும் லங்­கா­புர பகு­தி­க­ளி­லுள்ள பொது­மக்கள் அவ­தா­ன­மாக இருக்­கு­மாறு அத்­தி­ணைக்­களம் கோரி­யுள்­ளது.

இதே­வேளை, யாழ்ப்­பாணம் தொடக்கம் மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்­பாந்­தோட்டை வழி­யாக பொத்­துவில் வரை­யான கடல் மற்றும் ஆழ்­கடல் பகு­தி­களில் கடும் காற்­றுடன் கூடிய மழை ஏற்­ப­டக்­கூடும் என வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

இதன்­கா­ர­ண­மாக இன்று மற்றும் நாளைய தினம் அக்­க­டற்­ப­கு­தி­களில் மீன்­பிடி நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வதை தவிர்த்­துக்­கொள்­ளு­மாறு அத்­தி­ணைக்­களம் தெரிவித் துள்­ள­துடன் கடற்­ப­டை­யி­ன­ரையும் அவ­தா­ன­மாக இருக்­கு­மாறு கோரி­யுள்­ளது.

இதே­வேளை, மத்­திய மலை­நாட்டின் நீரேந்து நிலை­யங்­களை அண்­மித்த பகு­தி­களில் நேற்­று­முன்­தினம் இடைக்­கி­டையே கடும் மழை பெய்த போதிலும் காசல்ரி மற்றும் வுஸ்­சா­கல நீர்த்­தேக்­கங்­களின் நீர்­மட்டம் உயர்­வ­டையும் அள­வுக்கு அவை தாக்கம் செலுத்­தி­யி­ருக்­க­வில்லை என நீர்த்­தேக்­கத்­துக்கு பொறுப்­பான பொறி­யி­ய­லாளர் தெரிவித்தார்.

(Visited 21 times, 1 visits today)

Post Author: metro