புத்தளத்தில் 35 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் தீயிட்டு அழிப்பு

(மது­ரங்­குளி நிருபர்)

புத்­தளம் மேல் நீதி­மன்­றத்தில் விசா­ரணை செய்­யப்­பட்ட வழக்­கு­க­ளுடன் தொடர்­பு­டைய ஹெரோ யின், கேரள கஞ்சா ஆகியன புத்­தளம் மேல் நீதி­மன்ற வளா­கத்தில் நேற்று தீயிட்டு அழிக்­கப்­பட்­டன.

35 கோடி ரூபா பெறு­ம­தி­யான 35 கிலோ ஹெரோயின் மற்றும் இரண்டு கிலோ கேரள கஞ்சா என்­ப­னவே இவ்­வாறு நேற்று தீயிட்டு அழிக்­கப்­பட்­டன.

புத்­தளம் மேல் நீதி­மன்ற நீதி­ப­தியின் உத்­த­ர­வுக்கு அமை­வாக இந்த ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சா என்­பன தீயிட்டு அழிக்­கப்­பட்­டன. கடந்த 2010ஆம் ஆண்டு கீரி­யங்­கள்ளி பிர­தே­சத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட முற்­று­கையின் போது மூன்று சந்­தேக நபர்­க­ளுடன் கைப்­பற்­றப்­பட்ட ஹெரோ­யினே இவ்வாறு தீயில் அழிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

(Visited 23 times, 1 visits today)

Post Author: metro