கண்டி மாவட்­டத்தில் வன்­செ­யல்­களில் பாதிப்­பட்டோர் உட­ன­டி­யாக முறைப்­பாடு செய்­யு­மாறு வேண்­டுகோள்!- நஷ்­ட­ஈடு வழங்கும் பணிகள் ஆரம்பம்

கண்டி மாவட்­டத்­துக்கு உட்­பட்ட பிர­தே­சங்­களில் இடம்­பெற்ற வன்­முறை சம்­ப­வங்­களால் சேத­ம­டைந்த சொத்­து க்கள் தொடர்பில் முறைப்­பா­டு­களை மேற்­கொள்ளா தவர்கள் உட­ன­டி­யாக அரு­கி­லுள்ள பொலிஸ் நிலை­யத்தில் அது தொடர்பில் முறைப்­பாடு செய்­யு­மாறு பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­துள்­ளது.

கண்டி மாவட்­டத்­தி­லுள்ள சில இடங்­களில் இடம்­பெற்ற சம்­ப­வங்­க­ளுக்­கான நஷ்­ட­ஈடு வழங்கும் செயற்­பாடு முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

அதற்­க­மைய நேற்று மற்றும் இன்று இந்த முதற்­கட்ட நஷ்­ட­ஈடு வழங்கும் செயற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­படும் என்றும் சேதம் தொடர்­பான புள்­ளி­வி­ப­ரங்­களை திரட்டி அங்­குள்ள மக்­களின் இயல்பு வாழ்க்­கையை வழ­மைக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்­கான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்­க­வுள்­ள­தாக உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

அத்­துடன், இந்த அசா­தா­ரண சூழ்­நி­லை­யினால் சேத­ம­டைந்த வணக்­கஸ்­த­லங்கள் மற்றும் சொத்­துக்கள் தொடர்­பான பெறு­மதி மதிப்­பீட்­டினை ஒரு வாரத்­துக்குள் நிறை­வுக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்கு எதிர்­பார்த்­துள்­ள­தாக கண்டி மாவட்டச் செயலர் எச். எம். ஹிடி­சேன தெரி­வித்தார்.

இதே­வேளை, நாட்டின் எந்த இடத்­தி­லா­வது மோத­லொன்று ஏற்­ப­டு­மா யின் அது­தொ­டர்பில் உட­ன­டி­யாக உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு மாவட்ட ஆட்­சியர் மற்றும் பிர­தேச செய­லா­ளர்­க­ளுக்கு உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

(Visited 21 times, 1 visits today)

Post Author: metro