இனமுறுகளை ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொண்ட தாக்குதலுக்கு இன ஒற்றுமை மூலம் பதிலடி கொடுத்த ஆனமடுவ பிரதேச மக்கள் – காலையில் தாக்கப்பட்ட உணவகம் மாலையில் திருத்தியமைக்கப்பட்டு உணவும் பரிமாறப்பட்டது

(ரெ.கிறிஸ்­ணகாந்த், எம்.எப்.எம்.பஸீர்)

ஆன­ம­டுவ பிர­தே­சத்தில் நேற்­று­ முன்­தினம் அதி­காலை பெற்றோல் குண்டு வீசப்­பட்­டதில் சேத­ம­டைந்த உண­வகம் முழு ­மை­யாக புன­ர­மைக்­கப்­பட்டு அன்­றைய தினம் இரவு 8 மணி­ய­ளவில் மீள திறக்­கப்­பட்டு உணவும் வழங்­கப்­பட்­டது.

ஆன­ம­டுவ வர்த்­தக சங்கம் மற்றும் பிர­தே­ச­வா­சி­க­ளுடன் பொலி­ஸாரும் இந்த புன­ர­மைப்பு பணி­களை மேற்­கொண்டு உண­வ­கத்தை வழமை நிலை­மைக்கு கொண்­டு­வந்­துள்­ளனர்.

இதன் போது பௌத்த மற்றும் இஸ்­லாமியத் மதத்­த­லை­வர்கள், நீர்ப்­பா­சன இரா­ஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்­டார, நாடா­ளு­மன்ற உறுப்­பினர் பிரி­யங்­கர ஜய­ரத்ன, ஆன­ம­டுவ தொகு­தியின் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் அமைப்­பாளர் ஆனந்த சரத்­கு­மார உள்­ளிட்டோர் கலந்­து­கொண்­டனர்.

ஆன­ம­டுவ நகரில் அமைந்­துள்ள இந்த உண­வகம் நேற்­று­முன்­தினம் அதி­காலை 2 மணி­ய­ளவில் இனந்­தெ­ரி­யா­தோரால் மேற்­கொள்­ளப்­பட்ட பெற்றோல் குண்டுத் தாக்கு தலுக்கு இலக்­காகி தீக்­கி­ரை­யா­கி­யி­ருந்­தது. இச்­சம்­பவம் தொடர்பில் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களில் 19–25 வய­து­க­ளுக்கு இடைப்­பட்ட 7 சந்­தேக நபர்­களை கைது­செய்­துள்­ள­தாக ஆன­ம­டுவ பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

ஆன­ம­டுவ நகரில் இரு இனங்­க­ளுக்­கி­டையில் இன­மு­று­களை தோற்­று­விக்கும் முக­மாக மேற்­கொள்­ளப்­பட்ட இந்த தாக்­கு­த­லுக்கு பதி­ல­டி­யாக பல்­லி­னத்­த­வர்­களும் இணைந்து தாக்­கு­த­லுக்கு இலக்­கான உண­வ­கத்தை புனர­மைத்­துக் ­கொ­டுத்து தமது ஒற்­றுமையை நிரூ­பித்­துக் ­காட்­டி­யுள்­ளனர்.

இதே­வேளை, தாக்­கு­த­லுக்கு இல்­லக்­கான உண­வ­கத்­துக்கு அப்பால் அமைந்­துள்ள வர்த்­தக நிலை­ய­மொன் றில் பொருத்­தப்­பட்­டுள்ள சீ.சீ.­ரி.வி. காட்­சி­களை கொண்டு ஆன­ம­டுவ பொலிஸார் சம்­பவம் தொடர்­பான மேல­திக விசா­ர­ணை­களை மேற் ­கொண்­டு­வ­ரு­கின்­றனர்.

(Visited 53 times, 1 visits today)

Post Author: metro