‘ஷமியும் அவ­ரது குடும்­பத்­தி­னரும் என்னைக் கொல்ல முயற்­சித்­தனர்’ – இந்திய கிரிக்கெட் வீரர் ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் குற்­றச்­சாட்டு

ஷமியும் அவ­ரது குடும்­பத்­தி­னரும் தன்னை கொலை செய்ய முயற்­சித்­த­தாக பொலிஸ் நிலை­யத்தில் இந்­திய கிரிக்கெட் வீரர் ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் முறைப்­பாடு செய்­துள்ளார்.


ஷமியும் அவ­ரது குடும்­பத்­தி­னரும் சக்­தி­வாய்ந்த தூக்க மாத்­தி­ரை­களை தனக்குக் கொடுத்து தன்னைக் கொலை செய்ய முயற்­சித்­த­தாக ஹசின் செய்த முறைப்­பாட்டை அடுத்து ஷமிக்கு எதி­ராக கொல்­கத்தா, ஜாதவ்பூர் பொலிஸார் குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­துள்­ளனர்.

அது­மட்­டு­மல்­லாமல் தனது மைத்­து­ன­ரான ஹசிப் அஹமத் தன்னை வன்­பு­னர்­வுக்­குட்­ப­டுத்­தி­ய­தா­கவும் ஹசின் ஜஹான் தனது முறைப்­பாட்டில் குறிப்­பிட்­டுள்ளார். இக் குற்­றச்­சாட்­டுகள் தொடர்பாக பொலிஸார் விசா­ர­ணை­ நடத்­தி­வ­ரு­கின்­றனர். இதே­வேளை தனது மனை­விக்கு மொஹமத் ஷமி சமா­தானத் தூது அனுப்­பி­யுள்ளார்.

‘‘எனது மனை­வி­யுடன் சம­ரசம் செய்­து­கொள்ள தயா­ராக உள்ளேன். எனது மனைவி மற்றும் மக­ளுடன் என்னால் ஒன்று சேர்ந்து வாழ முடியும். நான் பாவம் அறி­யா­தவன். எனக்கு எதி­ராக ஏதோ சதி நடக்­கின்­றது. எனது மனை­வியை யாரோ ஒருவர் தவ­றாக வழி­ந­டத்­த­கின்றார்’’ என ஷமி தெரி­வித்தார். ஆனால், மொஹ­மது ஷமியின் சம­ரச அழைப்பை ஹசின் ஜஹான் ஏற்க மறுத்­து­விட்டார்.

‘‘ஷமிக்­காக நான் என்­னையே மாற்­றிக்­கொண்டேன். ஆனால் அவர் திருந்­தி­ய­பா­டில்லை. . ஏனைய பெண்­க­ளுடன் ஷமிக்கு தொடர்பு உள்­ள­தற்­கான ஆதா­ரத்­து­டன்­கூ­டிய செல்போன் என்­னிடம் இருக்­கின்­றது. இல்­லா­விட்டால் அவர் என்னை விவா­க­ரத்து செய்­தி­ருப்பார்’’ என ஹசின் தெரிவித்தார்.

(Visited 55 times, 1 visits today)

Post Author: metro