யாழுக்கு கொண்டு செல்லப்பட்ட 80 இலட்சம் ரூபா மாயம்; 3 வங்கி ஊழியர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர் விசாரணையில்

(மயூரன்)

அநு­ரா­த­பு­ரத்தில் உள்ள அரச வங்கி ஒன்­றி­லி­ருந்து யாழில் உள்ள வங்­கிக்கு வாகனம் ஒன்றில் கொண்டு செல்­லப்­பட்ட 80 இலட்ச ரூபா பணம் திரு­டப்­பட்ட சம்­பவம் தொடர்பில் குறித்த வங்­கியின் மூன்று ஊழி­யர்­களும் பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் ஒரு­வரும் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.

குறித்த பணத்­துடன் வங்கி ஊழி­யர்கள் மூவர் மற்றும் ஆயுதம் தாங்­கிய பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் ஒருவர் வாக­னத்தில் பய­ணித்­துள்­ளனர். பய­ணத்தின் போது இவர்கள் தேநீர் அருந்­து­வ­தற்­காக வாக­னத்தை விட்டு இறங்கி கடைக்கு சென்­றுள்­ளனர்.

தேநீர் அருந்­திய பின்னர் வாக­னத்­திற்கு திரும்­பிய போது வாக­னத்தில் இருந்த பணம் மாய­மா­னதை அறிந்­துள்­ளனர். அது தொடர்பில் குறித்த வங்­கியின் யாழ். பிராந்­திய முகா­மை­யா­ள­ருக்கு தகவல் வழங்­கி­யுள்­ளனர்.

அதனைத் தொடர்ந்து பிராந்­திய முகா­மை­யாளர் யாழ்.பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாட்டை பதிவு செய்தார். முறைப்­பாட்டின் பிர­காரம் விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பொலிஸார் பணத்­தைக் கொண்டு சென்ற மூன்று வங்கி ஊழி­யர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தரைக் கைது செய்து விசார ணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

(Visited 38 times, 1 visits today)

Post Author: metro