யாழ்ப்பாணத்தில் புறாக்களுக்கிடையிலான பந்தயம்: குருநகர் அஜித் குமாரின் இரு புறாக்கள் ஒரு மணி 40 நிமிடங்களில் 125 கிலோ மீற்றர் பந்தயத் தூரத்தைக் கடந்து முதல் பரிசை பெற்றன;

(மயூரன்)

உலகின் மிகப் பழ­மை­யான விளை­யாட்­டுக்­களில் ஒன்­றான புறாக்­க­ளி­டை­யி­லான பந்­தய போட்டி அண்­மையில் யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற்­றது. ‘பபு­கயா’ (பந்­தயப் புறாக்கள் கழகம் – யாழ்ப்­பாணம் :ரேஸிங் பீஜின்ஸ் கிளப் ஜெவ்னா) வின் ஏற்­பாட்டில் குறித்த பந்­தய போட்டி நடை­பெற்­றது.


முதல் முறை­யாக 125 கிலோ மீற்றர் தூரத்­துக்­கான பந்­தயம் மார்ச் முதல் வாரத்தில் இடம்­பெற்­றது. அதில் வெற்றி பெற்­ற­வர்­க­ளுக்­கான பரி­ச­ளிப்பு வைபவம் ஞாயிற்­றுக்­கி­ழமை யாழ். நகரில் உள்ள விடு­தியில் இடம்­பெற்­றது.

யாழ்ப்­பா­ணத்தின் பிர­பல மருத்­துவ நிபு­ணரும், நீண்ட கால­மாகப் புறா ஆர்­வ­ல­ராக இருந்து வரு­ப­வ­ரு­மான மருத்­துவர் கே.சுரேஷ்­குமார் தலைமை அதி­தி­யாகக் கலந்­து­கொண்டு வெற்­றி­பெற்ற புறாக்­களின் உரி­மை­யா­ளர்­க­ளுக்குப் பரி­சில்­களை வழங்கி வைத்தார்.


குரு­ந­கரைச் சேர்ந்த எம்.அஜித் குமாரின் இரு புறாக்கள் ஒரு மணி 40 நிமி­டங்­களில் பந்­தயத் தூரத்தைக் கடந்து முதல் இரு பரிசுகளைத் தட்டிச் சென்­றன. சங்­கா­னையைச் சேர்ந்­த­வ­ரான ரி.நிதர்­சனின் புறா மூன்றாம் இடத்­தையும் வல்­வெட்­டித்­து­றையைச் சேர்ந்த எஸ்.காந்­த­ரூ­பனின் புறா நான்­கா­வது இடத்­தையும் அல்­லைப்­பிட்­டியைச் சேர்ந்த எஸ்.பிரி­ய­தர்­ஷனின் புறா ஐந்­தா­வது இடத்­தையும் பெற்­றுக்­கொண்­டன.

‘‘புறாப் பந்­த­யங்கள் உலகின் பல நாடு­க­ளிலும் பல நூறு ஆண்­டு­க­ளாக நடக்­கின்­றன. அங்­கெல்லாம் பல மில்­லியன் டொலர் பரி­சு­களை அள்­ளிக்­கொட்டும் ஒரு விளை­யாட்­டாக இது இருந்­தாலும் அண்­மை­யில்தான் இலங்­கையில் இவை பந்­தய விளை­யாட்­டாக அறி­மு­க­மா­கின.


கண்­டியில் உள்ள புறா ஆர்­வ­லர்கள் சேர்ந்து முதன் முதலில் புறாப் பந்­த­யத்தை இங்கு நடத்­தி­னார்கள். அதனைத் தொடர்ந்து பல பகு­தி­க­ளிலும் இந்தப் பந்­தயம் தற்­போது நடை­பெற்று வரு­கின்­றது.

வடக்கில் முதன் முதலில் நடத்­தப்­பட்ட பந்­தயம் இதுதான்’ என கழ­கத்தைச் சேர்ந்த ரி.பி.அன்ரன் தெரி­வித்தார். மேலும் முதல் தடவை என்­பதால் குறிப்­பிட்­ட­ளவு புறாக்­களே பந்­த­யத்தில் ஈடு­பட்­டன என்­றாலும் எதிர்­கா­லத்தில் வடக்கு மாகாணம் முழு­வ­தற்கும் இந்தப் பந்­த­யத்தை விரி­வாக்கும் போது பெரும் எண்­ணிக்­கை­யான புறாக்கள் பந்­த­யத்தில் கலந்­து­கொள்ளும் என்றும் அவர் தெரி­வித்தார்.


இதே­வேளை, மருத்­துவர் சுரேஷ்­குமார். தெரி­விக்­கையில் ‘‘ மேற்கு நாடு­களில் இது ஒரு தொழில்­முறைப் பந்­த­ய­மாக இருக்­கிற போதும் அதில் ஈடு­ப­டு­வது இல­கு­வா­ன­தல்ல. இந்த விளை­யாட்டைச் சரி­யாக ஆட­வேண்டும் என்றால் அதை நேர்த்­தி­யாகச் செய்யத் தெரிந்­தி­ருக்­க­வேண்டும்.

புறாக்­க­ளுடன் முழு ஈடு­பாட்­டுடன் அதிக நேரத்தைச் செல­விட வேண்டும். மற்­றைய வேலை­க­ளுக்கு மத்­தியில் பகு­தி­நே­ர­மாக பந்­தயப் புறா வளர்ப்­பிலும் ஈடு­ப­டு­வ­தென்­பது சவா­லா­னது. இப்­போ­துதான் இந்தப் பந்­த­யத்தை இங்கு ஆரம்­பித்­தி­ருக்­கி­றீர்கள் என்­பதால் முதலில் மிக வேக­மாகப் பறக்கும் புறாக்­களை அடை­யாளம் கண்டு அவற்­றி­லி­ருந்து சிறந்த பரம்­பரை வரி­சையை உரு­வாக்­கு­வதில் நீங்கள் அக்­கறை காட்­ட­வேண்டும். அப்­போ­துதான் சிறந்த பந்­தயப் புறாக்­களை யாழ்ப்­பா­ணத்தில் உரு­வாக்க முடியும்.
வெற்றி தோல்­வி­க­ளுக்கு அப்பால் சிறந்த பரம்­பரை வரி­சையை உரு­வாக்­கு­வ­தி­லேயே யாழ்ப்­பா­ணத்தில் உள்ள புறா­வ­ளர்ப்­புக்­கா­ரர்கள் எல்­லோரும் ஒற்­று­மை­யோடு கவனம் செலுத்தவேண்டும். இப்போது வரைக்கும் அத்தகைய சிறந்த பரம்பரை வரிசை ஒன்று இலங்கையில் இல்லை. தமிழ் நாட்டில் புறாச் சேதுவிடம் அத்தகைய சிறந்த பரம்பரை வரிசை உண்டு என்று அறிகிறோம். அதுபோன்றதொரு நிலையை இங்கும் உருவாக்குவதில் முதலில் கவனம் செலுத்தப்படவேண்டும்’’ என தெரிவித்தார்.

(Visited 42 times, 1 visits today)

Post Author: metro