கோயில் உண்டியலைத் திருடிச் சென்று புதருக்குள் மறைந்திருந்து பணத்தை எண்ணிக் கொண்டிருந்த போது பொலிஸிடம் சிக்கிய இளைஞர்

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் உள்ள கொம்­மா­துறைப் பிர­தே­சத்தில் உள்ள காளி கோயில் ஒன்றின் உட்­புற உண்­டி­யலை திருடிச் சென்ற இளை­ஞரை சம்­பவம் இடம்­பெற்று சில மணி நேரங்­க­ளுக்குள் கைது செய்­தி­ருப்­ப­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். வெல்­லா­வெ­ளியைச் சேர்ந்த 18 வய­தான இளை­ஞரே சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.


கொம்­மா­துறை கிரா­மத்தில் உள்ள மேற்­படி காளி கோயிலின் உட்­பு­றத்தில் பாது­காப்­பாக பொருத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த உண்­டியல் ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு திருட்டுப் போயி­ருந்­த­தாக கோயில் நிரு­வா­கத்­தினர் பொலி­ஸா­ருக்கு முறைப்­பாடு செய்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்து ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­கா­ரியும், சிரேஷ்ட பொலிஸ் பரி­சோ­த­க­ரு­மான சிந்­தக பீரிஸின் நெறிப்­ப­டுத்­தலில், குற்றத் தடுப்புப் பொலிஸ் பொறுப்­ப­தி­காரி நிரோஷ‪ன் பெர்­னான்­டோவின் வழி­காட்­டலில் ஏறாவூர் பொலிஸ் குற்றத் தடுப்பு புல­னாய்வு அதி­காரி சார்ஜன்ற் ஈசா­லெப்பை பதூர்தீன் தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வினர் விசா­ர­ணை­களைத் துரி­தப்­ப­டுத்­தினர்.


இத­னை­ய­டுத்து தீவி­ர­மாகச் செயற்­பட்ட பொலிஸார் கொம்­மா­துறை 10ஆம் கட்டை ரயில் பாதை­யுடன் காணப்­படும் புத­ருக்குள் மறைந்­தி­ருந்து திரு­டப்­பட்ட உண்­டி­யலை உடைத்து அதனுள் இருந்த பணத்தை எண்ணிக் கொண்­டி­ருந்த நிலையில் காணப்­பட்ட இளைஞர் ஒரு­வரை நேற்று அதி­காலை கைது செய்­து­ள்ளனர்.

இது பற்றி பொலிஸார் மேலும் குறிப்­பி­டும்­போது, இந்தக் கிரா­மத்தில் வெளியார் எவ­ரேனும் வந்து தங்­கி­யி­ருக்­கின்­றார்­களா என்ற கோணத்தில் தாங்கள் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த போது மேற்­படி இளைஞர் தமது உற­வினர் ஒரு­வரின் வீட்டில் கடந்த சில நாட்­க­ளாக வந்து தங்­கி­யி­ருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது.


அதன்­படி இளை­ஞ­னையும், திரு­டப்­பட்டு மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த உண்­டி­ய­லையும் அந்த உண்­டி­யலில் காணிக்­கை­யாக இடப்­பட்­டி­ருந்த 7 ஆயி­ரத்து 179 ரூபா பணத்­தையும் பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளனர். மீட்­கப்­பட்ட உண்­டி­யலில் ஒரு ரூபா, 2 ரூபா, 5 ரூபா, 10 ரூபா நாணயக் குற்­றி­களும், 10 ரூபா, 20 ரூபா, 50 ரூபா மற்றும் 100 ரூபா நாணயத் தாள்களும் உள்ளடங்கியிருந்தன.

கைது செய்யப்பட்ட இளைஞரையும் பணத்தையும் நீதி மன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 45 times, 1 visits today)

Post Author: metro