ராகுலின் கருத்து 7 பேரின் விடுதலைக்கான அறிகுறியா?

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை குற்­ற­வா­ளி­களை மன்­னித்­து­விட்­ட­தாக ராகுல் காந்தி கூறி­யுள்­ளது, சிறையில் உள்ள 7 பேரின் விடு­த­லைக்கு வழி­வ­குக்­குமா என்ற எதிர்­பார்ப்பு தற்போது அனைவர் மத்தியிலும் எழுந்­துள்­ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேர­றி­வாளன், நளினி, ரவிச்­சந்­திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்­குமார் ஆகியோர் 27 ஆண்­டு­க­ளாக சிறை­வாசம் அனு­ப­வித்து வரு­கி­றார்கள். தூக்குத் தண்­டனை விதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு கருணை அடிப்­ப­டையில் ஆயுள் தண்­ட­னை­யாக குறைக்­கப்­பட்­ட­துதான் இந்த வழக்கில் மிகப்­பெ­ரிய மாற்றம்.

மீத­முள்ள ஒரே ஒரு அம்சம் என்­ன­வென்றால், ‘அர­சுகள் விரும்­பினால் குற்­ற­வியல் நடை­முறை சட்­டப்­பி­ரி­வுகள் 432, 433 ஆகி­ய­வற்­றின்­படி இவர்­களை விடு­தலை செய்ய நட­வ­டிக்கை எடுக்­கலாம்’ என இந்­திய உயர்­நீ­தி­மன்றம் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்­த­துதான்.

ஜெய­ல­லிதா தலை­மை­யி­லான அரசு அதற்­காக முயற்­சி­களை மேற்கொண்ட போது மத்­திய அரசு மீண்டும் இந்த விவ­கா­ரத்தை உயர்­நீ­தி­மன்­றத்­திற்கு கொண்டு சென்­று­விட்­டது. தற்­போது இந்­திய உயர்­ நீதி­மன்­றத்தில் இந்த விவ­காரம் தூங்கிக் கொண்­டி­ருக்­கி­றது என்ற அள­வில்தான் உள்­ளது.

எப்­பொ­ழுது இந்த வழக்கில் வெளிச்சம் பிறக்கும் என சிறையில் தங்கள் காலத்தை கழித்துக் கொண்­டி­ருக்கும் 7 பேரும் எதிர்­பார்ப்­போடு காத்­தி­ருக்­கி­றார்கள். இப்­ப­டி­யான ஒரு சூழ­லில்தான், ராகுல் காந்தி யாரும் எதிர்­பா­ராத கருத்­தை கூறி­யுள்ளார். ராகுல் காந்­தியின் கருத்­துக்கள் எல்­லோ­ரையும் ஒரு வகையில் ஆச்­சர்­யத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது என்­பது உண்­மைதான். அத­னால்தான் உட­ன­டி­யாக அவ­ரது கருத்­துக்­க­ளுக்கு வர­வேற்பு பெரு­கு­கி­றது.

சிங்­கப்­பூரில் நிகழ்ச்சி ஒன்றில் இது­ கு­றித்து பேசிய ராகுல், “எனது தந்­தையை கொலை செய்­த­வர்கள் மீது நானும், சகோ­தரி பிரி­யங்கா காந்­தியும் மிகுந்த கோபத்தில் இருந்தோம். அந்த வேத­னையில் இருந்து மீள்­வ­தற்கு நாங்கள் மிகுந்த காலம் எடுத்துக் கொண்டோம். ஆனால் அவர்­களை தற்­போது முழு­மை­யாக மன்­னித்து விட்டோம்.

இரு­வரின் கொலைச் சம்­ப­வங்­க­ளிலும் யாரையும் வெறுக்கக் கூடாது என்­ப­தற்­கா­கவே இந்த முடி­வெடுத்­துள்ளோம். என்­னுடன் பெட்­மின்டன் விளை­யா­டி­ய­வர்களே எங்கள் பாட்டி இந்­திரா காந்­தியை 1984 ஆம் ஆண்டில் கொலை செய்­தனர். எனது தந்தை கொலை செய்­யப்­பட்ட பின்னர், எனக்­கான பாது­காப்பு சூழலே மாறி விட்­டது. காலை, பகல், இரவு என எந்த நேரமும் 15 பேர் சூழ்ந்­தி­ருக்க வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­பட்டேன்” என்றார் ராகுல்.

ராகுல் காந்தி பேசிய செய்தி பத்திரி­கை­களில், தொலைக்­காட்­சி­களில் வெளி­யா­கிய சில மணி நேரங்­க­ளிலே பல்­வேறு அர­சியல் கட்­சி­களும் வர­வேற்பு தெரி­விக்க ஆரம்­பித்­துள்­ளன. தி.மு.க.வின் செய்­தித்­தொ­டர்­பாளர் டி.கே.எஸ். இளங்­கோவன் கூறு­கையில், “ராஜீவ் கொலைக் குற்­ற­வா­ளிகள் மீதான ராகுல் காந்­தியின் கருத்து ஆறுதல் அளிக்­கி­றது.தேர்தல் கூட்­ட­ணி­யாக ராகுல் காந்தி இந்த கருத்தை கூறி­யுள்ளார் என கூற­மு­டி­யாது” என தெரி­வித்தார்.

ராஜீவ் கொலை குற்­ற­வா­ளி­களை மன்­னித்­து­விட்­ட­தாக ராகுல் காந்தி கூறி­யது மன­திற்கு ஆறுதல் அளிக்­கி­றது என்று கூறி­யுள்ள வைகோ, ‘ராகுல் காந்தி கொலை­யா­ளிகள் என கூறு­வது தவறு, அது புனை­யப்­பட்ட வழக்கு’ என்ற கருத்­தையும் தெரி­வித்­துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்­ஹாசன், ‘ராஜீவ் கொலை­யா­ளி­களை மன்­னித்­து­விட்­ட­தாக ராகுல் கூறி­யது மனி­த­நேயம்; 7 பேர் விடு­தலை தொடர்­பாக நாம் கேட்­பது சட்­டத்தின் தளர்வு’ என்று தெரி­வித்துள்ளார்.

ராஜீவ் கொலை குற்­ற­வா­ளி­களை மன்­னித்­து­விட்­ட­தாக ராகுல் காந்தி கூறி­யி­ருப்­பது வர­வேற்­கத்­தக்­கது என தமி­ழக வாழ்­வு­ரிமை கட்சித் தலைவர் வேல்­மு­ருகன் கூறி­யுள்ளார் அத்தோடு, ராகுலின் கருத்து சிறையில் உள்­ள­வர்­களை விடு­தலை செய்ய உதவும் என நம்­பு­கிறேன் என்ற தனது நம்­பிக்­கை­யையும் வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார்.

இந்த விவ­கா­ரத்தில் தமி­ழக அரசு என்ன சொல்­லப்­போ­கி­றது என்ற கருத்தின் மீது எதிர்­பார்ப்பு இருக்கும். ஆனால், சட்­டத்தில் வழி­வகை இருந்தால் ராஜீவ் கொலை குற்­ற­வா­ளி­களை விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்கப்படும். என முதல்வர் பழ­னிச்­சாமி கூறி ஒரே வரியில் முடித்­து­விட்டார்.

‘மன்­னித்­து­விட்டேன்’ என்று கூறு வது மட்டும் போது­மா­னது அல்ல, 7 பேரை விடு­தலை செய்யக் கோரி ராகுல் பரிந்­துரை செய்ய வேண்டும் என்று விடு­தலை சிறுத்­தைகள் கட்சித் தலைவர் திரு­மா­வ­ளவன் கூறி­யுள்­ளது அடுத்­தக்­கட்­டத்­திற்­கான எதிர்­பார்ப்­பாக­வுள்­ளது.

அர­சியல் கட்­சி­களை தாண்டி பேர­றி­வா­ளனின் தாயார் அற்­பு­தம்­மாளின் கருத்து இதில் முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது. ‘ராஜீவ்­கொலை குற்­ற­வா­ளி­களை மன்­னித்­து­விட்­ட­தாக ராகுல்­காந்தி கூறி­யி­ருப்­பது உண்­மை­யி­லேயே மகிழ்ச்சி அளிக்­கி­றது. 27 ஆண்­டு­க­ளுக்கு பிறகு ராகுல் காந்தி இவ்­வாறு சொன்­னது மகிழ்ச்சி அளிக்­கி­றது. ராகுலின் கருத்தை அடிப்­ப­டை­யாக கொண்டு மத்­திய
அர­சுடன் தமி­ழக அரசு பேசி சிறையில் உள்­ள­வர்­களை விடு­தலை செய்ய வேண்டும்’ என்று கோரியுள்ளார்.

இந்த விவ­கா­ரத்தில் ராகுலின் கருத்தின் படி, 2016 ஆம் ஜெய­ல­லிதா சட்­டப்­பே­ர­வையில் 7 பேரின் விடு­த­லைக்கு ஆத­ர­வாக தீர்­மானம் நிறை­வேற்­றிய போது, அதற்கு காங்­கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரி­வித்­தது. அந்த நேரத்தில்,‘இது அர­சாங்­கத்தின் முடிவு, இந்தப் பிரச்சினையில் எனது தனிப்பட்ட முடிவினை தெரிவிக்க முடியாது.

கட்சி எடுக்கும் முடிவுகளுக்கு நான் உடன்பட வேண்டும்’ என்று ராகுல் காந்தி கூறியிருந்தார். ஆனால், தற்போது ராகுல் காந்தி வெளிப்படையாக பல்வேறு கருத்துக்களை மனம் திறந்து பேசியுள்ளார். அவரது உரை யாடலில் உருக்கமான தொனி இருந் தது இதனால், 7 பேரின் விடு தலை தொடர்பில் விரைவில் ஒரு நல்ல மாற்றம் வரும் என எதிர்பார்க்கப் படுவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

(நன்றி : புதிய தலைமுறை)

(Visited 10 times, 1 visits today)

Post Author: metro