இன ஐக்கியத்தை வலியுறுத்தி அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் ஆர்ப்பாட்டம்

(நா.தினுஷா)

இலங்கை அனைத்து இனங்­களும் ஒன்­றி­ணைந்து வாழும் நாடாகும். ஜாதி பேதம் என்­பது ஒரு சதித் திட்­ட­மாகும். இந்த நிலையில் அனை­வ­ரி­னதும் உரி­மை­களை வென்­றெ­டுக்க ஒன்­றி­ணைய வேண்­டுமே தவிர எமது உரி­மை­களை தீய சக்­தி­க­ளிடம் ஒப்­ப­டைக்கக் கூடாது.


நாட்டில் ஏற்ப­ட்­டுள்ள இனங்­க­ளுக்கு இடை­யி­லான பிரச்­சினை அர­சாங்­கத்தின் தனிப்­பட்ட நோக்­கங்­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­கா­கவே தவிர சாதா­ரண மக்­களின் உரி­மை­க­ளுக்­கா­கவல்ல. இந்­நி­லை­யினை புரிந்து நாட்டில் ஏற்­பட்­டுள்ள அமை­தி­யற்ற தன்­மையை எதிர்த்து குரல் கொடுக்க மக்கள் அனை­வரும் முன்­வர வேண்­டு­மென அனைத்து பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் ஒன்­றியம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.


அனைத்து பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றியம் நேற்று கோட்டை ரயில் நிலை­யத்­துக்கு முன்­பாக ஆர்ப்­பாட்டம் ஒன்­றினை ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. இந்த ஆர்ப்­பாட்­டத்தின் போது நாட்டில் ஏற்­பட்­டுள்ள நிலையை எதிர்த்து பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் பல­வாறு கோஷம் எழுப்­பி­யி­ருந்­தனர். இந்த ஆர்ப்­பாட்­டத்தில் கலந்து கொண்ட அனைத்து பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றி­யத்தின் தலைவர் லஹிரு வீர­சே­கர ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கையில்,


நாட்டில் அமை­தி­யற்ற சூழல் ஏற்­பட்­டுள்­ளது. கடந்த சில நாட்­களில் அம்­பாறை மற்றும் கண்டி போன்ற பிர­தே­சங்­களில் இனங்­க­ளுக்­கி­டையில் மோதல்கள் ஏற்­பட்­டி­ருந்­தன. இந்தப் பிரச்­சி­னைகள் உரு­வா­வ­தற்கு பிர­தான காரணம் அர­சியல் நோக்­கங்­களே தவிர சாதா­ரண மக்­களின் நல­னுக்­கா­க­வல்ல. இவ்­வி­ட­யத்தை புரிந்து கொண்டு மக்கள் அனை­வரும் இன­பே­த­மின்றி ஒன்­றி­ணைந்து உரி­மைக்­காக குரல் கொடுக்க முன்­வந்தால் மட்­டுமே இவ்­வா­றான பிரச்­சி­னை­களை தீர்க்க முடியும்.


1983 ஆம் ஆண்டும் இதே­போன்ற கல­வர நிலை நாட்டில் இடம்­பெற்­றது. இதன் போது மக்கள் இழப்­பு­க­ளையும் சந்­தித்­தி­ருந்­தனர். ஆனால், அர­சாங்கம் இது குறித்து எந்த வித­மான கருத்­து­க­ளையும் முன்­வைக்­க­வில்லை. அதே நிலைதான் மீண்டும் தோற்றம் பெற்­றுள்­ளது. அன்று இடம்­பெற்ற கல­வ­ரத்தின் போது சாதா­ரண பொது மக்­களும் அவர்­க­ளது சொத்­துக்­களும் அழி­வுற்­றன.
இலங்­கையில் மட்­டு­மல்ல அனைத்து உலக நாடு­க­ளிலும் இனப்­பி­ரச்­சி­னைகள் இடம்­பெற்ற வண்­ணமே உள்­ளன.


இதன் பொது மக்­களே அதி­க­ளவில் பாதிப்­ப­டை­கின்­றனர் . ஆகவே மக்கள் உண்மை நிலை குறித்து அறிந்து உரி­மை­க­ளுக்காக குரல் கொடுக்­கவும் உரி­மை­க­ளுக்­காக போரா­டவும் முன்­வர வேண்டும் என தெரி­வித்தார். இனங்­க­ளுக்­கி­டையில் பேதத்தை ஏற்­ப­டுத்­து­வது என்­பது சதித்­திட்­ட­மாகும்.


சிங்­க­ளவர், தமிழர், முஸ் லிம் என இன வேறுபாடு கொண்டு வாழ்வதால் பலன் எதுவும் கிடைக்கப் போவதில்லை. இறுதியில் அனைவருக்கும் கிடைப் பது மரணம் என்ற ஒரு நிலையான உண்மையே தவிர வேறு எதுவும் அல்ல. இந்த யதார்த்த நிலை யை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரி விக்கப்பட்டது.

(Visited 39 times, 1 visits today)

Post Author: metro