நிலா­வெளி பெரிய குளத்தில் தோணி கவிழ்ந்து நீரில் மூழ்கி உயி­ரி­ழந்த ஐவரின் உடல்­களும் ஒரே குழியில் அடக்கம்!

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

திரு­கோ­ண­மலை நிலா­வெளி பொலிஸ் பிரி­வி­லுள்ள பெரி­ய­கு­ளத்தில் தோணி கவிழ்ந்­ததில் நீரில் மூழ்கி உயி­ரி­ழந்த 4 சிறு­வர்கள் உட்­பட ஐவரின் நல்­ல­டக்கம் திரு­கோ­ண­மலை நிலா­வெளி இந்து மயா­னத்தில் திங்­கட்­கி­ழமை மாலை இடம்­பெற்­றது.


இறுதிச் சடங்கு நிகழ்வில் அஞ்­சலி செலுத்­து­வ­தற்­காக கிராம பொது­மக்கள், அனு­தா­பிகள் என அதிக எண்­ணிக்­கை­யி­லானோர் கலந்து கொண்­டனர். நீரில் மூழ்கி உயி­ரி­ழந்த ஐவரின் உடல்­களும் ஒரே குழியில் அடக்கம் செய்­யப்­பட்­டன.

சேறும் சக­தி­யு­மான அந்தக் குளத்­தி­லுள்ள தாமரைப் பூக்­களை இவர்கள் பறித்துக் கொண்­டி­ருந்த போதே தோணி கவிழ்ந்து இந்த விபத்து சம் பவித்திருந்தது.

(Visited 36 times, 1 visits today)

Post Author: metro