எனக்­குள்ள வேலைப்­பளு கார­ணமாகவே ஜெனீவா செல்­ல­வில்லை: எமது உறுப்­பி­னர்கள் சகல விட­யங்­க­ளையும் எடுத்­து­ரைப்­பார்கள் – – வட­ மா­காண முத­ல­மைச்சர் சீ.வி விக்­கி­னேஸ்­வரன்

(கரைச்சி நிருபர்)

எனக்கு உள்ள வேலைப்­பளு கார­ண­மாக நான் ஜெனீ­வா­வுக்குச் செல்­ல­வில்லை. இருப்­பினும் எமது உறுப்­பி­னர்கள் சகல விட­யங்­க­ளையும் அங்கு எடுத்­து­ரைப்­பார்கள் என வட மாகாண முத­ல­மைச்சர் சீ.வி விக்­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

கிளி­நொச்சி உருத்­தி­ர­புரம் சிவ­நகர் பகு­தியில் மூத்தோர் சங்க கட்­ட­டத்தை திறந்து வைத்த பின்னர் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் இதனை குறிப்­பிட்டார்.

அத்­தோடு ஜெனீ­வா­வுக்கு அனந்தி சசி­தரன், சிவா­ஜி­லிங்கம் ஆகி யோர் சென்­றி­ருக்­கின்­றார்கள் என்றும் வேறு யார் யார் செல்­கின்­றார்கள் என்­பது தனக்கு தெரி­ய­வில்லை என்றும் குறிப்­பிட்ட முத­ல­மைச்சர், அனைத்து விட­யங்­க­ளையும் தங்­க­ளு­டைய பிர­தி­நி­திகள் எடுத்­து­ரைப்­பார்கள் என்றும் குறிப்­பிட்டார்.

சிவ­நகர் மூத்தோர் சங்க தலைவர் ரகு­பதி தலை­மையில் நடை­பெற்ற மூத்த பிர­ஜைகள் சங்­கத்தின் கட்­டடத் திறப்பு விழாவில் பிர­தம விருந்­தி­ன­ராக வட­மா­காண முத­ல­மைச்சர் கலந்து கொண்­ட­துடன் வைத்­தி­யர்கள், சமூக சேவை உத்தியோகத்தர்கள், கிராமத்தின் மூத்தோர் சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

(Visited 11 times, 1 visits today)

Post Author: metro