அரைகுறை ஆடையணிந்து பெண்களை காட்சிப்படுத்தும் விளம்பரங்களை அரசாங்கம் உடன் தடை செய்யவேண்டும்- காத்தான்குடி மகளிர் தின ஒன்றுகூடலில் தீர்மானம்

(காங்­கே­ய­னோடை நிருபர்)

அரை குறை ஆடை­ய­ணிந்த பெண்­களின் விளம்­ப­ரங்­களை அர­சாங்கம் தடை செய்ய வேண்­டு­மென காத்­தான்­குடி பிர­தேச செய­ல­கத்தில் நடை­பெற்ற மகளிர் தின ஒன்றுகூடலின் போது தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

நேற்று காத்­தான்­குடி பிர­தேச செய­ல­கத்தில் நடை­பெற்ற மகளிர் தின ஒன்று கூடல் வைப­வத்­தி­லேயே இந்த தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­ட­துடன் அதனை மகளிர் விவ­கார அமைச்­சுக்கு அனுப்­பவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

காத்­தான்­குடி பிர­தேச செய­லக உதவி பிர­தேச செய­லாளர் ஏ.சி.அகமட் அப்கர் தலை­மையில் நடை­பெற்ற இந்த மகளிர்தின ஒன்றுகூடலில் இந்தப் பிர­க­ட­னத்தை உதவி பிர­தேச செய­லாளர் ஏ.சி.அகமட் அப்கர் வெளி­யிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரி­விக்­கையில், வள­மான ஒரு பெண்ணை சமூ­கத்தில் உரு­வாக்­கு­கின்ற செயற்­பாட்டை செய்­வ­தற்கு ஏற்ற வகையில் சட்­டங்­களை சீர­மைத்து இவ்­வா­றான விளம்­ப­ரங்­களின் ஊடாக பொது இடங்­க­ளில் பெண்­களின் தரத்தைக் குறைக்­கின்ற செயற்­பா­டு­களை நிறுத்­து­வ­தற்கு சட்­டங்­களை ஆக்க வேண்­டு­மென காத்­தான்­குடி பிர­தேச செய­ல­கத்தில் நடை­பெற்ற மகளிர் தின ஒன்றுகூடல் வைப­வத்தில் இங்கு கலந்து கொண்­டுள்ள பெண்கள் சார்­பாக இந்தக் கோரிக்­கையை விடுக்­கின்றோம். இந்தச் செயற்­பாட்டை மகளிர் விவ­கார அமைச்சு மேற்­கொள்­வ­துடன் அதற்­காக இந்தத் தீர்­மா­னத்தை எமது காத்­தான்­குடி பிர­தேச செய­ல­கத்­தி­லுள்ள மகளிர் அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்தர் ஊடாக இதனை நாங்கள் மகளிர் விவ­கார அமைச்­சுக்கு அனுப்பி வைக்­கின்றோம்.

சர்­வ­தேச ரீதி­யாக இன்று சிரி­யாவில் நடை­பெறும் யுத்­தத்தில் சுமார் 4 வரு­டங்­க­ளாக பெண்கள், சிறு­வர்கள் உட்­பட பொது மக்கள் கொல்­லப்­பட்­டு­வ­ரு­வ­துடன் மனித அவ­லங்கள் அங்கு இடம்பெற்று வரு­கின்­றன. சர்­வ­தேச யுத்த தர்­மத்தை மீறி பெண்கள், சிறு­வர்கள், வயோ­தி­பர்கள், மதப் போத­கர்கள் எனப் பலரும் கொல்­லப்­ப­டு­கின்­றனர்.

இவை­களை நிறுத்­து­வ­துடன் பெண்கள், சிறு­வர்­க­ளுக்கு எதி­ராக நடக் கும் இந்தக் கொடு­மை­களை உட­ன­டி­யாக நிறுத்த வேண்டும் எனவும் இதில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பு தலையிட வேண்டும் எனவும் இந்த மகளிர் ஒன்றுகூடலில் நாம் தீர்மா னமாக நிறைவேற்றுகின்றோம் என அவர் தெரிவித்தார்.

(Visited 53 times, 1 visits today)

Post Author: metro