இலங்கை கிரிக்கெட் வீரர்களின் திறமையை அதிகரிப்பதற்கு பார்ஸிலோனா கழகம் பயன்படுத்திய மென்பொருள்

இலங்கை கிரிக்கெட் வீரர்­களின் திற­மையை மேலும் அதி­க­ரிக்கும் வகை­யிலும் அடுத்த வருடம் நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டிக்கு ஆயத்­த­மாகும் வகை­யிலும் உலகப் பிர­சித்தி பெற்ற பார்­ஸி­லோனா கால்­பந்­தாட்டக் கழகம் பயன்­ப­டுத்­திய ஆய்வு நுணுக்­கத்தை பின்­பற்­ற­வுள்­ள­தாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பால தெரி­வித்தார்.

வீரர்­களை நிரு­வ­கிக்கும் பொருட்டு பார்­ஸி­லோனா கால்­பந்­தாட்டக் கழ­கத்தைப் பின்­பற்றி வீரர்­களின் உடற்­செ­யற்­பா­டு­களை ஆராய்­வ­தற்­கான மென்­பொருள் உப­க­ர­ணத்தை ஊட­க­வி­ய­லா­ளர்கள் பார்­வை­யி­டு­வ­தற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பால நேற்­று­முன்­தினம் அனு­ம­தித்­தி­ருந்தார்.

பார்­ஸி­லோனா கழ­கத்­தினால் பயன்­ப­டுத்­தப்­படும் உயர் தொழில்­நுட்­பத்­தி­ற­னு­ட­னான விமு ப்ரோ (Wimu Pro) என்ற மென்­பொருள், இலங்கை வீரர்­களின் கிரிக்கெட் விளை­யாட்டை ஆய்வு செய்­யவும் அவர்­களை உய­ரிய நிலைக்கு இட்டுச் செல்­லவும் உதவும் என சும­தி­பால குறிப்­பிட்டார்.

போட்­டிகள் பற்­றிய ஆய்­வு­களை நடத்தும் இந்த நவீ­னப்­ப­டுத்­தப்­பட்ட விமு ப்ரோ, இலங்கை கிரிக்கெட் வீரர்­களை நிரு­வ­கிப்­ப­தற்­காக தரு­விக்­கப்­பட்­டுள்­ளது.

‘‘அடுத்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­களை முன்­னி­லைப்­ப­டுத்தி கிரிக்கெட் விளை­யாட்டை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக கணி­ச­மான அளவு முத­லீடு செய்­கின்றோம்.

அதன் ஒரு கட்­ட­மா­கவே இந்த விமு ப்ரோ மென்­பொருள் தரு­விக்­கப்­பட்­டுள்­ளது’’ என கிரிக்கெட் நிறு­வ­னத்தின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி ஏஷ்லி டி சில்வா தெரி­வித்தார்.

இந்­தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய மூன்று நாடு­களில் கூட்­டாக நடத்­தப்­பட்ட 1996 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் சம்­பி­னான இலங்கை அதன் பின்னர் இரண்டு தட­வைகள் இறுதிப் போட்­டி­களில் விளை­யா­டிய போதிலும் வெற்றி கிட்­ட­ வில்லை.

மேலும் 2014இல் உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டியில் சம்­பி­ய­னான இலங்கை அதன் பின்னர் தர­வ­ரி­சையில் சரிவு கண்டவண்ணம் உள்ளது.

இந் நிலையில் வீரர்­களை ஆய்வு செய்யும் புதிய மென்­பொருள் நுட்பம் இலங்கை அணியின் முன்­னேற்­றத்­துக்கு வழி­வ­குக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

(Visited 93 times, 1 visits today)

Post Author: metro