சுவ­தே­ஷிக்கு ISO 9001:2015 சான்­றிதழ்

இலங்­கையின் முன்­னணி மூலிகை அடிப்­ப­டை­யி­லான பிரத்­தி­யேக பரா­ம­ரிப்பு தயா­ரிப்­பு­களை உற்­பத்தி செய்யும் நிறு­வ­ன­மான சுவ­தேஷி இன்­டஸ்­ரியல் வேர்க்ஸ் பிஎல்சி, பெரு­மைக்­கு­ரிய ISO 9001:2015 சர்­வ­தேச தர முகா­மைத்­துவ சான்­றி­தழை இலங்கை கட்­ட­ளைகள் நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து பெற்­றுள்­ளது.

பெரு­ம­ளவு பிரத்­தி­யேக பரா­ம­ரிப்பு, குழந்­தைகள் பரா­ம­ரிப்பு மற்றும் சலவை பரா­ம­ரிப்பு தயா­ரிப்­பு­களை உற்­பத்தி செய்து சந்­தைப்­ப­டுத்தும் நிறு­வ­னத்தின் புகழ்­பெற்ற வர்த்­தக நாமங்­களில் ‘கொஹோம்ப’ மற்றும் ‘ராணி சன்­டல்வுட்’ ஆகிய அடங்­கி­யுள்­ளன. இந்த சான்­றி­தழின் மூல­மாக, சகல பிரத்­தி­யேக பரா­ம­ரிப்பு தயா­ரிப்­புகள், குழந்­தைகள் பரா­ம­ரிப்பு பொருட்கள் மற்றும் சலவை பரா­ம­ரிப்பு பொருட்கள் போன்­ற­வற்றின் தர முகா­மைத்­துவ கட்­ட­மைப்­புகள் மேலும் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளன.

இந்த முக்­கிய சான்­றி­தழை பெற்­றுக்­கொண்­டமை தொடர்பில் நிறு­வ­னத்தின் பேச்­சாளர் ஒருவர் கருத்துத் தெரி­விக்­கையில், “ஏழு தசாப்த காலப்­ப­கு­திக்கு மேலாக, சுவ­தேஷி தயா­ரிப்­பு­களின் மீது பேணப்­படும் நம்­பிக்கை மற்றும் உறு­தி­யான நிலைப்­பாடு போன்­றன ISO 9001:2015 சான்­றி­தழின் மூல­மாக மேலும் உறு­தி­யா­கி­யுள்­ளன. இதன் மூல­மாக இலங்­கையில் தரத்­துக்கு அர்ப்­ப­ணிப்­பான புகழ்­பெற்ற நாம­மாக சுவ­தே­ஷியை திகழச் செய்­துள்­ளது” என்றார்.

நிறு­வ­னத்தின் தர முகா­மைத்­துவ கட்­ட­மைப்பு சர்­வ­தேச தர நிறு­வ­னத்தின் வழி­காட்­டல்­களின் பிர­காரம் மதிப்­பீடு செய்­யப்­ப­டு­கி­றது. இலங்கை கட்­ட­ளைகள் நிறு­வ­னத்­துக்கு ஐரோப்­பாவின் புகழ்­பெற்ற தரப்­ப­டுத்தல் அமைப்­பான நெதர்­லாந்தின் RVA சான்­ற­ளித்­துள்­ளது.

ISO 9001:2015 கட்­ட­மைப்பு சான்­றிதழ் சுவ­தே­ஷிக்கு வழங்­கப்­பட்­டுள்­ள­துடன், ‘தர முகா­மைத்­துவ கொள்­கைகள்’ போன்ற முக்­கிய உள்­ளம்­சங்­களின் அடிப்­ப­டையில் வழங்­கப்­பட்­டுள்­ளன.  இதில் தலை­மைத்­துவம் தர இலக்­கு­களை எய்­து­வது, தர முகா­மைத்­துவ கட்­ட­மைப்பில் மக்­களின் ஈடு­பாடு, செயன்­முறை பின்­பற்றல் மற்றும் உற்­பத்தி நட­வ­டிக்­கை­களில் தொடர்ச்­சி­யான மேம்­பா­டுகள், தரவு அடிப்­ப­டை­யி­லான தீர்­மா­ன­மெ­டுத்­தல்கள், பரஸ்­பர அனு­கூலம் வாய்ந்த விநி­யோ­கஸ்த்தர் உற­வுகள் மற்றும் மிக முக்­கி­ய­மாக வாடிக்­கை­யாளர் தன்­னி­றைவு மற்றும் வாடிக்­கை­யாளர் தேவை­களின் மீது கவனம் செலுத்­துதல் போன்­றன அடங்­கி­யுள்­ளன. இந்த கொள்­கை­களின் மூல­மாக இறுதி தயா­ரிப்­பான தரம் உறுதி செய்­யப்­ப­டு­கி­றது” என அந்த பேச்­சாளர் மேலும் குறிப்­பிட்டார்.

“உண்­மையில் இலங்கை நிறு­வனம் எனும் வகையில், ஏழு தசாப்த காலப்­ப­கு­திக்கு மேலான வர­லாற்றை கொண்­டுள்­ள­துடன், எமது வாடிக்­கை­யா­ளர்­களின் தேவை­களை சிறந்த முறையில் புரிந்து கொள்ள வழி­கோ­லி­யி­ருந்­தது. எமக்கு பெறு­ம­தி­யான உள்­ளார்ந்த விட­யங்­க­ளையும், புத்­தாக்­கத்தை நோக்கி பய­ணிக்­கவும், தர­மான பொருட்­க­ளையும், தீர்­வு­க­ளையும் பெற்­றுக்­கொ­டுக்­கவும் உத­வி­யுள்­ளது.

இன்று, சுவ­தேஷி மூலிகை பிரத்­தி­யேக பரா­ம­ரிப்பு மற்றும் குழந்­தைகள் பரா­ம­ரிப்பு தயா­ரிப்­புகள் உற்­பத்­தியில் ஒப்­பற்ற சந்தை முன்­னோ­டி­யாக திகழ்­கி­றது. உள்­நாட்­டிலும், சர்­வ­தேச ரீதி­யிலும் இந்த தயா­ரிப்­புகள் புகழ்­பெற்றுக் காணப்­ப­டு­கின்­றன.

1941ஆம் ஆண்டு கந்­தா­னையில் ஸ்தாபிக்­கப்­பட்டு ஆரம்­ப­மான சுவ­தேஷி நிறு­வனம், இந்­நாட்டு வளங்­களை பேணிப்­பா­து­காப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளவும் அர்ப்­ப­ணித்­தது.

இந்­நி­று­வ­னத்தின் தயா­ரிப்­பு­களில் சேஃப் பிளஸ், கொஹோம்ப ஆயுர்­வேத சோப், கொஹோம்ப பேபி, ராணி சந்­தன சோப், அப்­சரா வெனிவெல், பர்ல்­வயிட், லக்பார் ஆடை சவர்க்­காரம், பிளாக் ஈகள் பர்ஃ­வியும் மற்றும் சுவதேஷி ஷவர் ஜெல் ஆகியன சந்தையில் பிரபல்யமடைந்துள்ளன. சுவதேஷி நிறுவனத்தினால் அண்மையில் சிறுவர்களுக்கான “லிட்டில் ப்ரின்சஸ்” ஷவர் ஜெல் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நிறுவனத்தின் மூலமாக உயர்தர மூலிகை சவர்க்காரமான கொஹோம்ப ஹேர்பல் மற்றும் பாரம்பரிய அழகு சோப் வகையான ராணி சந்தன சோப் ஆகியன உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கன.

(Visited 21 times, 1 visits today)

Post Author: metro