பெப்­ர­வரி மாதம் இலங்­கைக்­கான சுற்­றுலாப் பய­ணி­களின் எண்­ணிக்கை அதி­க­ரிப்பு

கடந்த பெப்­ர­வரி மாதம் இலங்­கைக்கு வருகை தந்த வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணி­களின் எண்­ணிக்கை கடந்த வரு­டத்­துடன் ஒப்­பி­டு­கையில் 19.3 சத­வீ­தத்தால் அதி­க­ரித்­துள்­ளது.


கடந்த பெப்­ரவரி மாதம் 235,618 வெளி­நாட்டு சுற்­றுலாப் பணிகள் இலங்­கைக்கு வந்­த­தாக இலங்கை சுற்­றுலா அபி­வி­ருத்திச் சபையின் புள்­ளி­வி­ப­ரங்கள் தெரி­விக்­கின்­றன. இது கடந்த வருடம் பெப்­ர­வரி மாதம் இலங்­கைக்கு வந்த சுற்­றுலாப் பய­ணி­களின் எண்­ணிக்­கை­யை­விட 19.3 சத­வீத அதி­க­ரிப்­பாகும். கடந்த வருடம் பெப்­ர­வ­ரியில் 195,517 உல்­லாசப் பய­ணிகள் இலங்­கைக்கு வந்­தி­ருந்­தனர்.

இவ்­வ­ருடம் கடந்த வருடம் முதல் இரு மாதங்­களில் மொத்­த­மாக 416,877 சுற்­றுலாப் பய­ணிகள் இலங்­கைக்கு வந்­தி­ருந்­தனர். இவ்­வ­ருடம் பெப்­ர­வரி 28 ஆம் திக­தி­வரை 474,542 சுற்­றுலாப் பய­ணிகள் இலங்­கைக்கு வந்­துள்­ளனர். இது கடந்த வரு­டத்­துடன் ஒப்­பி­டும்­போது 13.8 சத­வீத அதி­க­ரிப்­பாகும்.

இவ்­வ­ருடம் பெப்ர­வரி மாதம் சீனா­வி­லி­ருந்தே அதிக உல்­லாசப் பய­ணிகள் இலங்­கைக்கு வந்­துள்­ளனர். கடந்த மாதம் இலங்­கைக்கு வந்த வெளி­நாட்டு உல்­லாசப் பய­ணி­களில் 35929 பேர் (15 சத­வீ­த­மானோர்) சீனர்கள் ஆவர். சீனா­வுக்கு அடுத்­த­தாக இந்­தி­யா­வி­லி­ருந்து 32914 பேர் (14 சத­வீதம்) உல்­லாசப் பய­ணிகள் வந்­துள்­ளனர் பிரிட்­ட­னி­லி­ருந்து 23817 பேர் (10 சத­வீ­த­மானோர்), ஜேர்­மனி, பிரான்­ஸி­ருந்து தலா 7 சத­வீ­த­மா­னோரும் வந்­துள்­ளனர்.


கடந்த மாதம் இலங்­கைக்கு வந்­த­வர்­களில் 98 சத­வீ­த­மானோர் விமா­னங்கள் மூலம் வந்­துள்­ளனர். கடல்­மார்க்­க­மாக வந்த சுற்­றுலாப் பய­ணி­களில் பிரிட்­ட­னி­லி­ருந்தே அதி­க­மானோர் (591 பேர்) வந்­துள்­ள­னர். ஜேர்­ம­னி­யி­லி­ருந்து 586 பேரும் இந்­தி­யா­வி­லி­ருந்து 531 பேரும் கடல்­மார்க்­க­மாக வந்­துள்­ளனர்.

 

(வைப்­ப­கப்­படம்: படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)

(Visited 93 times, 1 visits today)

Post Author: metro