ஓமான் பூங்காவில் பெண்களுக்கு மாத்திரமான நிகழ்வில் பெண்ணைப் போன்று ஆடையணிந்து நுழைந்த ஆண் கைது

ஓமான் நாட்­டி­லுள்ள பூங்­கா­வொன்றில் பெண்கள் மாத்­திரம் அனு­ம­திக்­கப்­பட்ட தினத்தில் பெண்ணைப் போன்று ஆடை­ய­ணிந்து கொண்டு நுழைந்த ஆண் ஒருவர் அந்­நாட்டுப் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

ஓமானின் அல் புரைமி பிராந்­தி­யத்­தி­லுள்ள அல் புரைமி பூங்காவில் கடந்த 8 ஆம் திகதி சர்­வ­தேச மகளிர் தினத்தை முன்­னிட்டு, பெண்கள் மாத்­தி­ர­மான நிகழ்ச்­சிகள் நடத்­தப்­பட்­டன. பெண்கள் மாத்­தி­ரமே அன்­றைய தினம் அல் புரைமி பூங்­கா­வுக்குள் செல்ல அனு­ம­திக்­கப்­பட்­டனர்.

இந்­நி­லையில், ஆண் ஒருவர், பெண்­களைப் போன்று ஆடை­ய­ணிந்து கொண்டு உள்ளே நுழைந்தார்.இந்த ஆண் குறித்து பொலி­ஸா­ரிடம் பெண்கள் முறைப்­பாடு செய்­தனர்.

அதை­ய­டுத்து அந்­நபர் கைது செய்­யப்­பட்டார். ஆசிய நாடொன்றை சேர்ந்த, நிக்காப் மற்றும் ஸ்கார்வ் அணிந்­தி­ருந்த ஆண் ஒரு­வரே கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

நீதிமன்றில் அவர் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்டால் ஒரு வரு­ட­காலம் வரை­யான சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

(Visited 83 times, 1 visits today)

Post Author: metro