Inner Circle என்பது பிரத்தியேகமான வங்கியியல் பிரிவாக அமைந்துள்ளதுடன், கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏனைய எவருக்கும் கிடைக்காத விசேட அனுகூலங்களையும், சிறப்புரிமைகளையும் பெற்றுக்கொள்வதற்கு வழிகோலுவதாக அமைந்துள்ளது. Inner Circle அங்கத்துவம் பெற்ற வாடிக்கையாளர் எனும் வகையில், மேம்படுத்தப்பட்ட சேவைகளை அனுபவிப்பார்கள் என்பதுடன், இதில் பிரத்தியேகமான வங்கியியல் உறவு முகாமையாளரும் அடங்கியுள்ளார்.
நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின், பிரத்தியேகமான ‘Bank- At- Your- Doorstep’ சேவை என்பதற்கமைய, வைப்புகள், கடன்கள் மற்றும் மேலதிக பற்றுகள் மீது விசேட வட்டி வீதங்களும் வழங்கப்படும். இந்த அங்கத்தவர்களுக்கு நாடு முழுவதையும் சேர்ந்த சகல நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி கிளைகளிலும் விசேடமான சேவை கவுன்டர்கள் காணப்படும். வாடிக்கையாளர்களுக்கு தமது கணக்குகளை துரிதமாகவும், பாதுகாப்பாகவும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் பரந்த மற்றும் முழு அளவிலான டிஜிட்டல் வங்கியியல் சேவைகளினூடாக 24/7 நேரமும் பெற்றுக்கொள்ளலாம். இதில் மொபைல் வங்கியியல் சேவைகள், SMS வங்கியியல் மற்றும் இணைய வங்கியியல் சேவைகள் என அனைத்தும் அடங்கியுள்ளதுடன், இவை இலவசமாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக மீள அறிமுகம் செய்யப்பட்டுள்ள நேஷன்ஸ் Inner Circle இனூடாக பெருமளவு புதிய அனுகூலங்களான செலரி கார்ட் மற்றும் ஹெல்த் கவர் போன்றன வழங்கப்படுகின்றன.
இவை இரண்டும் அவசரமான நிலைகளில் மிகவும் பெறுமதி வாய்ந்தனவாக அமைந்துள்ளன. செலரி கார்ட்டினால் உங்களுக்கு திடீர் உயிரிழப்பு நேரிடும் சந்தர்ப்பத்தில் உங்கள் குடும்பத்துக்கு 6 மாதங்கள் வரை பெறுமதியான உங்கள் சம்பளத் தொகையை பெற்றுக்கொடுக்கப்படும்.
ஹெல்த் கவர் ஊடாக பாரதூரமான நோய்களின் போது, மருத்துவ அவசர நிலைகளுக்கு 100,000 ரூபா வரை காப்பீடு வழங்கப்படும். இலவச மருத்துவ பரிசோதனை ஒன்றை வருடாந்தம் உங்களுக்கு வழங்கும். கொழும்பு 7 இலிருந்து 20 கிலோ மீற்றர் தூரத்தினுள் உங்கள் இருப்பிடம் அமைந்திருந்தால் இலவசமாக மருந்துப் பொருள் விநியோகமும் மேற்கொள்ளப்படும்.
அங்கத்தவர்களுக்கு இலவச சேவைகள் மற்றும் விருப்பு அடிப்படையிலான இலவச டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகள், இலவச காசோலை புத்தகங்கள், கடன்கள் மற்றும் நிலையான வைப்புகள் மீது சிறந்த வட்டி வீதங்கள், லீசிங், கொடுப்பனவு கட்டளைகள், வெளிநாட்டு நாணய கொடுக்கல் வாங்கல்கள், இலவச ATM பண மீளப்பெறுகைகள் என சகல வங்கிச்சேவைகளின் மீதும் கட்டண விலக்களிப்புகள் வழங்கப்படும்.
Inner Circle அங்கத்துவம் பற்றி நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் கிளைகளுக்கான சிரேஷ்ட உப தலைமை அதிகாரி ஷிஹான் டானியல் கருத்துத் தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்கள் பொதுவாக பெருமளவு எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர்.
இந்த இலக்குகளை எய்துவதற்காக அவர்கள் தமது பிரத்தியேகமான வாழ்க்கை முறைகளை வேலைப்பளுவுடன் அனுபவித்து வருகின்றனர். அவர்களின் வங்கியியல் அனுபவத்தை பெறுமதி வாய்ந்ததாக மாற்றுவதாகவும் அவர்களின் வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமானதாகவும் Inner Circle அமைந்துள்ளது.
Inner Circle ஊடாக எமது வாடிக்கையாளர்களை இலகுவான முறையில் வங்கிக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள தூண்டுகிறோம். இலகுவாக்கி, அணுகக்கூடியதாக்கி மற்றும் Inner Circle வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலான சேவைகளை அவர்களின் கணக்குகளை பயன்படுத்தும் போது வழங்குகிறோம்” என்றார்.
சிறிய அங்கத்துவத்துடன் ஆரம்பித்த போதிலும், Inner Circle தற்போது பெருமளவு வளர்ச்சி கண்டுள்ளதுடன், புதிய மற்றும் நெகிழ்ச்சியான தகைமை தெரிவையும் வழங்கியுள்ளது.
கடந்த காலங்களில், Inner Circle அங்கத்தவர்களுக்கு ஆகக்குறைந்த தேறிய மாதாந்த சம்பள அனுப்புகை அல்லது ஆகக்குறைந்த பண வைப்பை பேண வேண்டியிருந்தது. இருந்த போதிலும், எதிர்காலத்தில், பின்வரும் தேவைகளை பூர்த்தி செய்யும் வாடிக்கையாளர்கள் அங்கத்துவத்துக்கான தகைமையை பெறுவார்கள்.
ஆகக்குறைந்த தேறிய மாதாந்த சம்பள பெறுமதியான 75,000 ரூபாவை பேணுவது, அல்லது ஆகக்குறைந்தது 1,000,000 ரூபாவை- உடன், மாதாந்தம் சராசரியாக 5,000 ரூபாவை சேமிப்பு அல்லது நடைமுறை கணக்கில் பேணுவது, அல்லது நேஷன்ஸ் பேர்சனல் இன்வெஸ்ட்மன்ட் பிளானில் ; (NPIP) இல் 3 வருடங்களில் ஆகக்குறைந்தது 1,000,000 ரூபாவை ஆகக்குறைந்த மாதாந்த தவணைக்கட்டணமான ரூ. 24,119 ரூபாவை உடன் பேணுவது, அல்லது 250,000 ரூபாவுக்கு அதிகமாக எல்லை பெறுமதியை கொண்ட கடன் அட்டை ஒன்றை கொண்டிருக்க வேண்டும். அல்லது 1,500,000 ரூபாவை- பெறுமதியான பிரத்தியேக கடனை பெற்றிருக்க வேண்டும் என்பதுடன், ஆகக்குறைந்த மாதாந்த சராசரி மீதியாக 50,000 ரூபாவை சேமிப்பு கணக்கொன்றில் கொண்டிருக்க வேண்டும், அல்லது 25,000 ரூபாவை நடைமுறை கணக்கில் கொண்டிருப்பதுடன் 100,000 ரூபாவை நிலையான வைப்பில் பேண வேண்டும்.