விமானத்தின் அடிப்பாகம் திறந்துகொண்டதால் 5,740 கோடி ரூபா தங்கம், வைரம் கீழே வீழ்ந்தன

தங்கம் வைரம் முத­லான பெறு­மதி வாய்ந்த பொருட்­களை ஏற்றிச் சென்ற விமானத்தில் அடிப்­ப­குதி தற்­செ­ய­லாக திறந்­து­கொண்­டதால், பெரு­ம­ள­வான தங்கம், வைரம் மற்றும் பிளாட்டிம் ஆகி­யன ஓடு­பா­தையில் கொட்­டப்­பட்ட சம்­பவம் ரஷ்­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

ஏ.என். 12 ரகத்தைச் சேர்ந்த மேற்­படி சரக்கு விமானம் கடந்த  வியா­ழக்­கி­ழமை யக்குட்ஸ்க் நக­ரி­லி­ருந்து புறப்­பட்­டது. ரஷ்­யாவின் க்ராஸ்னோயார்க் நக­ருக்கும் பின்னர் குபோல் நக­ருக்கும் செல்­ல­வி­ருந்­தது.

சுரங்க நிறு­வ­ன­மொன்­றுக்குச் சொந்­த­மான தங்கம், வைரம் மற்றும் பிளாட்­டினம் ஆகி­யன இவ்­வி­மா­னத்தில் ஏற்­றப்­பட்­டி­ருந்­தன. இவ்­வி­மானம் வானில் கிளம்­பி­ய­போது விமா­னத்தின் அடிப்­ப­குதி உடைந்து திறந்­து­கொண்­டது.

இதனால், விமா­னத்தில் ஏற்­றப்­பட்­டி­ருந்த சுமார் 368 மில்­லியன் டொலர் (5.740 கோடி இலங்கை ரூபா) பெறும­தி­யான தங்கம், வைரம், பிளாட்டிம் ஆகி­யன கொட்ட­பட்­டன.

ஓடு­பா­தை­யிலும் இவை கொட்­டப்­பட்­டி­ருந்­தன. சில தங்­கப்­பா­ளங்கள் மேற்­படி விமான நிலை­யத்­தி­லி­ருந்து 26 கிலோமீற்றர் தொலைவிலுள்ள இடத்திலும் வீழ்ந்திருந்ததாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன

(Visited 116 times, 1 visits today)

Post Author: metro