நடிகர் சஞ்சய் தத்துக்கு தனது சொத்துக்கள் அனைத்தையும் உயில் எழுதி வைத்துவிட்டு இறந்த ரசிகை!- ஏற்றுக்கொள்ள மறுத்தார் சஞ்சய் தத்

பொலிவூட் திரை­யு­லகின் பிர­பல நடி­கர்­களில் ஒரு­வ­ரான சஞ்சய் தத்­துக்கு அவரின் தீவிர ரசிகை ஒருவர் தனது சொத்­துக்கள் முழு­வ­தையும் உயில் எழு­தி­வைத்­து­விட்டு இறந்­துள்ளார். எனினும், இச்­சொத்­து­களை ஏற்­றுக்­கொள்ள சஞ்சய் தத் மறுத்­துள்­ளார்.

பொலி­வூட்டின் புகழ்­பெற்ற நட்­சத்­திர ஜோடி­யான சுனில் தத் – நர்கீஸ் ஜோடியின் மூத்த மகன் நடிகர் சஞ்சய் தத். குழந்தை நட்­சத்­தி­ர­மாக திரை உல­கி­ற்கு அறி­மு­க­மாகி, திற­மை­யான நடி­க­ராக தன்னை வளர்த்­தெ­டுத்துக் கொண்டார். சாஜன், கல்­நாயக், முன்­னாபாய் எம்­.பி.­பி.எஸ் உள்­ளிட்ட பல வெற்­றிப்­ப­டங்­களில் நடித்­துள்ளார்.

1971 ஆம் ஆண்டு முதல் நடித்து வரும் சஞ்சய் தத் ஹீரோ, வில்லன், கெொம­டியன், கேமியோ, நடிகன், தீவி­ர­வாதி என எந்தப் பாத்­தி­ர­மாக இருந்­தாலும் அதில் தன்னை கச்­சி­த­மாகப் பொருத்திக் கொண்டு நடிப்பில் பல உச்­சங்­களைத் தொட்­டவர். 58 வய­தான அவர் இது­வரை சிறந்த நடிப்­பிற்­காக 19 விரு­து­களைப் பெற்­றுள்ளார். நிஜ­வாழ்வில் சர்ச்­சை­களில் சிக்கி சிறை­வாசம் சென்­றி­ருக்கா விட்டால், பொலி­வூட்டில் மிகப் பெரிய அளவில் முன்­ன­ணியில் சஞ்சய் தத் இருந்­தி­ருப்பார்.

ஆனால், வீட்டில் தடை செய்­யப்­பட்ட ஆயு­தங்­களை வைத்­தி­ருந்­தாக, 1993 ஆ-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ­சஞ்சய் தத் கைது செய்­யப்­பட்டார். இந்த வழக்கில் தொடர்ந்து 18 மாதங்கள் சஞ்சய் தத் சிறையில் அடைக்­கப்­பட்டார். 1995-ஆம் ஆண்டு ஜாமீனில் வெளிவந்­தவர், அதன் பின் 2007ஆ-ம் ஆண்டு மும்பை தடா நீதி­மன்றம் சஞ்சய் தத்­துக்கு ஆறு ஆண்­டுகள் தண்­டனை விதித்­தது.

உயர் நீதி­மன்­றத்தில் சஞ்சய் மேல்­மு­றை­யீடு செய்ய, தடா நீதி­மன்றம் விதித்த தண்­ட­னையில் ஒரு ஆண்­டினை குறைத்து ஐந்து ஆண்­டு­க­ளாக அத்­தண்­டனை உறுதி செய்­யப்­பட்­டது. 2013 ஆம் ஆண்டு முதல் புனே எர­வாடா சிறையில் காவலில் வைக்­கப்­பட்­டி­ருந்­தவர், நன்­ன­டத்தைக் கார­ண­மாக தண்­டனைக் காலம் முடியும் முன்பே சிறை­யி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்டார்.

சிறை­யி­லி­ருந்து வெளிவந்­ததும் சஞ்சய்தத் தன் தலை தாழ்த்தி மண்ணைத் தொட்டு வணங்­கினார். சிறை வாயிலில் காவ­லர்­க­ளுக்கு குட் பை சொல்­லும்­வி­த­மாக சல்யூட் அடித்தார். இனிமேல் சுதந்­தி­ர­மாக நடப்­பது கடி­ன­மான விஷயம் என்ற கசப்­பான உண்­மையை உணர்ந்தார் சஞ்சய் தத். அவர் நடித்த சினிமா படங்­களின் காட்­சி­களை மிஞ்சும் வித­மாக அவ­ரது சொந்த வாழ்க்­கையே அமைந்­து­விட்­டது.

இந்­நி­லையில், சஞ்சய் தத்­துக்கு தனது சொத்­துகள் முழு­வ­தையும் அவரின் ரசிகை ஒருவர் எழுதி வைத்­துள்ளார்.
மும்­பையின் மலபார் ஹில் பகு­தியில் வசித்த நிஷி ஹரிஷ்­சந்­திர த்ரிபாதி எனும் பெண்ணே இவ்­வாறு சஞ்சய் தத்­துக்கு தனது சொத்­துக்­களை எழுதி வைத்­தி­ருந்தார்.

இப்பெண் தனது 62 ஆவது வயதில் சில மாதங்­க­ளுக்கு முன் கால­மானார். இல்­லத்­த­ர­சி­யான இவர், 80 வய­தான தனது தாயார் மற்றும் சகோ­தர சகோ­த­ரி­க­ளுடன் சுமார் 10 கோடி இந்­திய ரூபா பெறு­ம­தி­யான வீட்டில் வசித்­தவர் என தகவல் வெளியா­கி­யுள்­ளது.

தனது வங்கிக் கணக்­கி­லுள்ள தொகை மற்றும் வங்கிப் பெட்­ட­கத்­தி­லுள்ள உைட­மைகள் அனைத்­தையும் அவர் சஞ்சய் தத்­துக்கு எழுதி வைத்­தி­ருந்தார். பரோடா வங்­கியின் வோல்­கேஷ்வர் கிளை­யி­லி­ருந்து அண்­மையில் சஞ்சய் தத்­துக்கு கடி­த­மொன்று வரும்­வரை அவ­ருக்கு இவ்­வி­டயம் தெரிந்­தி­ருக்­க­வில்லை.

பொலி­ஸா­ரி­ட­மி­ருந்து ஜன­வரி 29 ஆம் திகதி அழைப்பு வரும் வரை நிஷி ஹரிஷ்­சந்­திர த்ரிபாதி என்­பவர் யார் என்­பதே சஞ்சய் தத்­துக்கு தெரிந்­தி­ருக்­க­வில்­லையாம். எனினும், இப்­பெண்ணை தான் ஒரு போதும் சந்­திக்­க­வில்லை என சஞ்சய் தத் கூறி­யுள்­ள­துடன், அவரின் சொத்­து­களை ஏற்கவும் மறுத்துள்ளார்.

மேற்­படி சொத்­து­களை நிஷி ஹரிஷ்­சந்­திர த்ரிபா­தியின் குடும்­பத்­தினர் பெற்­றுக்­கொள்­வ­தற்கு தனது தரப்­பி­லி­ருந்து வழங்­கப்­பட வேண்­டிய அனைத்து ஆவ­ணங்­க­ளையும் வழங்­கு­வ­தற்கும் சஞ்சய் தத் தயா­ரா­க­வுள்ளார் என அவரின் சட்­டத்­த­ரணி ஜாதவ் தெரி வித்துள்ளார்.

(Visited 111 times, 1 visits today)

Post Author: metro