தனது மகளை திருமணம் செய்த பெண்ணுக்கு சிறைத் தண்டனை

தனது மகளை திரு­மணம் செய்­து­கொண்ட பெண்­ணொ­ரு­வ­ருக்கு அமெ­ரிக்க நீதி­மன்­ற­மொன்று இரு வரு­ட­கால சிறைத்­தண்­டனை விதித்­துள்­ளது.

ஒக்­ல­ஹமா மாநி­லத்தைச் சேர்ந்த 46 வய­தான பட்­றீ­சியா ஸ்பான் எனும் பெண்­ணுக்கே இத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.
இவர், தனது மக­ளான மிஸ்டி ஸ்பானை (26) 2016 ஆம் ஆண்டு திரு­மணம் செய்­து­கொண்டார். எனினும் இந்த தகாத முறைத் திரு­மணம் சில மாதங்­களின் பின்னர் இரத்துச் செய்யப்­பட்­டது.

இத்­தி­ரு­ம­ணத்­துக்கு எதி­ராக அதி­கா­ரிகள் வழக்குத் தாக்கல் செய்­தனர். வழக்கு விசா­ர­ணை­யின்­போது தனது சொந்த மகளை திரு­மணம் செய்­து­கொண்ட குற்­றச்­சாட்டை பட்­றீ­சியா ஸ்பான் ஒப்­புக்­கொண்டார். அதை­ய­டுத்து அவ­ருக்கு 2 வருட சிறைத்­தண்­டனை விதித்து கடந்த செவ்­வாய்க்­கி­ழமை தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது. சிறைத்­தண்­டனைக் காலம் முடிந்த பின்னர் அவர் பாலியல் குற்­ற­வா­ளிகள் பதிவுப் பட்­டி­யலில் இருக்க வேண்டும் எனவும் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

இப்பெண் 2008 ஆம் ஆண்டு தனது சொந்த மக­னையும் திரு­மணம் செய்­தி­ருந்தார். 15 மாதங்­களின் பின்னர் அத்­தி­ரு­ம­ணத்தை நீதி­மன்றம் இரத்துச் செய்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை பட்­றீ­சி­யாவின் மகள் மிஸ்தி ஸ்பான், நன்­ன­டத்தை கண்­கா­ணிப்பில் இருக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த வாரம் அவர் மீண்டும் நீதிமன்றில் ஆஜராகவுள்ளார்.

(Visited 107 times, 1 visits today)

Post Author: metro