கொழும்பில் மீட்கப்பட்ட கொஸ்மல்லியின் தலை: அங்குணுகொலபெலஸ்ஸவில் உடல் புதைப்பு; புதைக்கப்பட்ட இடம் இன்று தோண்டப்படுகிறது

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு, வாழைத்­தோட்டம் பகு­தியில் கறுப்பு நிற பொலித் தீன் பையில் போடப்­பட்டு கைவி­டப்­பட்­டி­ருந்த நிலையில் கொஸ்­மல்லி எனும் பாதாள உலக உறுப்­பி­னரின் வேறாக்­கப்­பட்ட தலை மீட்­கப்­பட்ட நிலையில் அவ­ரது முண்டம் அங்­கு­னு­கொ­ல­பெ­லஸ்ஸ பகு­தியில் புதைக்­கப்­பட்­டுள்­ளமை தெரிய வந்­துள்­ளது.

அங்­கு­ணு­கொ­ல­பெ­லஸ்ஸ – முர­வெ­சி­ஹேன கோத்­தா­ப­ய­கம பகு­தியில் வாழைகள் நடப்­பட்­டி­ருந்த விவ­சாய நிலத்­துக்கு அருகில் உள்ள காட்­டுப்­ப­கு­திக்குள் அந்த முண்டம் புதைக்­கப்­பட்­டுள்­ள­தாக கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரி­வினர் முன்­னெ­டுக்கும் விசா­ர­ணை­களின் போது கைதான சந்­தேக நபர் ஒருவர் வாக்கு மூலம் அளித்­துள்ளார்.

இந்த நிலை­யி­லேயே அந்த இடத்தை அகழ்ந்து கொஸ்­மல்­லியின் தலை­யற்ற முண்­டத்தை மீட்க பொலிஸார் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர். அதன்­படி அந்த இட­மா­னது நேற்று தங்­காலை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் எல்.ஸ்ரீதாலின் ஆலோ­ச­னைக்கு அமைய பாது­கா­ப­பபு வல­ய­மாக அறி­விக்­கப்­பட்டு விசேட பாது­காப்புப் பணியில் பொலிஸார் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.

நேற்று கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் நிசாந்த சொய்­ஸாவின் மேற்­பார்­வையில் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் சந்­ர­தி­லக, பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நெவில் சில்வா தலை­மை­யி­லான சிறப்புக் குழு குறித்த பகு­திக்கு சென்று தங்­காலை தட­ய­வியல் பிரிவு பொலி­ஸா­ருடன் இணைந்து ஸ்தல விசா­ர­ணை­க­ளையும் முன்­னெ­டுத்­தனர்.

அதன்­படி இன்­றைய தினம் அங்­கு­னு­கொ­ல­பெ­லஸ்ஸ நீதிவான் முன்­னி­லையில் கொஸ்­மல்­லியின் முண்­டத்தை தோண்டி எடுக்க பொலிஸார் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளனர்.

பண்­டித்­தகே சாந்த குமார அல்­லது கொஸ்­மல்லி எனப்­படும் அங்­கொட பகு­தியைச் சேர்ந்த பாதாள உலக உறுப்­பி­னரின் தலை கடந்த 7 ஆம் திகதி வாழைத்­தோட்டம், புதுக்­கடை பகு­தி­யிலி ருந்து மீட்­கப்­பட்­டது. இந்தச் சம்­பவம் வாழைத்­தோட்டம் பகு­தியில் கொலை செய்­யப்­பட்ட வர்த்­த­க­ரான மொஹம்மட் ரிஸ்­வானின் கொலைக்கு பழி தீர்க்­கவே மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்­ளன.

இந்­நி­லையில் பொலிஸார் முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணை­களின் பிர­காரம் கொஸ்­மல்லி கொலை செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்னர் மர­மொன்றில் கட்டி வைக்­கப்­பட்டு சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­டுள்­ளமை தொடர்­பிலும் தக­வல்­களை பொலிஸார் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் அவர் அவ்­வாறு கட்டி வைக்­கப்­பட்­டுள்ள புகைப்­படம் ஒன்ற கொஸ்­மல்­லியின் தொலை­பே­சியில் இருந்தே முகப்­புத்­த­கத்தில் வெளி­யிட்­டுள்­ள­மை­யையும் பொலிஸார் கண்­ட­றிந்­துள்­ளனர்.

அதன்படியே கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் கம்புறுபிட்டிய பொலிஸார் அண்மையில் கைது செய்த பல பாதாள உலக குழு உறுப்பினர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலேயே கொஸ்மல்லியின் முண்டம் தொடர்பிலான தகவல்கள் வெளியாகி உள்ளன.

(Visited 201 times, 1 visits today)

Post Author: metro